Skip to main content

Posts

Showing posts with the label Folds

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


நான்கு முழம் வேட்டி கட்டுவது எப்படி?

ஆண்களின் வேட்டியிலேயே மிகவும் இலகுவாகக் கட்டக் கூடிய வேட்டி நான்கு முழ வேட்டியாகும். ஒரு துண்டை இடுப்பில் சுற்றிக் கொள்வது போலக் கூட இந்த அளவு வேட்டியை இடுப்பில் சுற்றலாம். நான்கு முழ வேட்டி கட்டுவதிலும் சில வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் இவ்வகை வேட்டிகளை வயதுக்கு வந்த ஆண்கள் அணிந்து நடக்கும் போது காற்றில் வேட்டி பறக்கும், நடக்கும் போது வேட்டி விலகி தொடை வரை வெளித்தெரியும்.  உட்காரும் போது அவதானமாக, வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துத் தூக்கி, கால்களுக்கு நடுவே விடாது இருப்பதைத் தவிர்க்கவும்.