Skip to main content

Posts

Showing posts with the label Thundu

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தலைப்பாகை கட்டுவது எப்படி?

மணமகன், மணத்தோழன் அலங்காரத்தில் மிக முக்கிய இடம் பிடிப்பது தலைப்பாகையாகும். தலைப்பாகையானது பல்வேறு துணிகளில் கட்டக் கூடியதாக இருந்தாலும் பருத்தித் துணியில் கட்டுவதே உகந்தது. மாப்பிள்ளை அலங்காரத்தில் மாப்பிள்ளை பட்டு வேட்டி உடுத்தினால் தற்காலத்தில் Ready Made ஆக பட்டுத் வேட்டியின் சால்வையில் செய்யப்பட்ட தலைப்பாகையை வாங்கி அணிவர். ஆனால் மாப்பிள்ளையாகத் தயாராகும் ஆண்கள் பட்டு வேட்டி கட்டினாலும், பருத்தித் துணியில்(Cotton) வேட்டி கட்டினாலும் அவற்றுடன் வரும் சால்வையை தோளில் அணிய விரும்பா விட்டால் அதனை மடித்து அயன் செய்து கூட தலைப்பாகையாகக் கட்டலாம். தலைப்பாகை கட்டும் போது மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது அதனை நாம் எவ்வளவு இறுக்கமாக கட்டுகிறோம் என்பதைத்தான். தமிழ் கலாச்சாரத்தில் மாப்பிள்ளைகளுக்கான ஆடையாக வேட்டி, சட்டை, தோளில் துண்டு, தலையில் தலைப்பாகை என்பன காணப்படுகின்றன. முதலில் சால்வையை மடித்து அயன் செய்ய வேண்டும். நேர்த்தியாக அயன் செய்தால் தலைப்பாகை கட்டும் போது அழகாகவும் இருக்கும், அதே நேரம் பிடித்து வைத்த பிள்ளையார் போல மடிப்புகள் நேர்த்தியாக இருக்கும். மாப்பிள்ளைகளுக்கான தலைப்பாக...

ஆண்களின் வேட்டி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

நூலிழைகளால் துணியை உருவாக்க மனிதன் அறிந்த காலம் முதல், ஆண்களிடம் வேட்டி அணியும் பழக்கம் துவங்கிவிட்டது. தமிழகத்தின் காலநிலை, கலாசாரம், பண்பாடு மற்றும் தொழில் முறைக்கு ஏற்றது வேட்டி. இதனால், அது பாரம்பரிய உடையாக மாறியது. சங்க காலத் தமிழ் நூல்களில் வேட்டி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழங்காலக் கோயில்களில் இடம்பெற்றுள்ள சிலைகளில், வேட்டி வடிவ உடைகளை ஆண்கள் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. வேட்டியின் வகைகள்  - வேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழம்(Single Dhoti), எட்டு முழம்(Double Dhoti), கரை வேட்டி(Small Border, Big Border, Fancy Border Veshti) என வேட்டிகளில் பல வகைகள் உள்ளன.  பட்டு(Silk), பருத்தி(Cotton), பாலியஸ்டர்(Polyester) எனப் பலவகைத் துணிகளிலும் வேட்டிகள் நெய்யப்படுகின்றன. ஏதாவது Synthetic Fiber இனால் பட்டு வேட்டி போன்றே செய்யப்பட்ட செயற்கையான பட்டு வேட்டிகளை Artificial Silk அல்லது Art Silk என்பர். பருத்தி துணியினால் ஆன வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

வேட்டி அணியும் போது கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்

வயதுக்கு வந்த ஆண்கள் எப்போதும் 8 முழ வேட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும். நான்கு முழ வேட்டியைக் கட்டும் போது, 1. நடக்கும் போது காற்றிற்கு 2. உட்காரும் போது  3. தூங்கும் போது 4. வேட்டி அணிந்து சண்டை போடும் போது வேட்டி விலக அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே வயதுக்கு வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டும் போது கட்டாயம் ஜட்டி அணிந்திருப்பது அவசியம். வேட்டி அணிந்து பழகும் வரை ஒரு தயக்கம் ஆண்களுக்கு இருக்கத்தான் செய்யும். அடிக்கடி வேட்டி அணிவதன் மூலம் அந்தத் தயக்கத்தை நீக்கலாம். அன்றாட வாழ்க்கையில், வயது வந்த ஆண்கள் வேட்டியைக்(Veshti/Mundu/Dhoti) கையாளும் முறைகள் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது வித்தியாசமான முறைகளில் கட்டலாம். தொடைகளுக்கு நடுவே தான் கட்டு இருக்க வேண்டும் என்பது நியதி அல்ல.

ஆண்கள் துண்டினைப் பாவித்து உடை மாற்றுவது எப்படி?

இடுப்பில் துண்டை(அல்லது லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டி விட்டு) கட்டி விட்டு முழங்காலுக்கு மேல் தொடை வரை துண்டைத் தூக்கி ஜட்டியை அணிந்த பின்னர். துண்டினை சற்று அவிழ்த்து, உங்கள் அந்தரங்கம் வெளித்தெரியாத வகையில் துண்டிற்குள் கையை விட்டு ஜட்டியை அணியலாம்.

வேட்டியின் சால்வையை எப்படி அயன் செய்து அணிவது?

வேட்டியின் சால்வையை உங்கள் மார்பை மறைக்கும் போர்வையாகப் பாவிக்கலாம். வேட்டியின் சால்வையை வைத்து தலைப்பாகை கட்டலாம். வேட்டியின் சால்வையை இடுப்பில் ஒரு துண்டைப் போல வேட்டிக்குப் பாதுகாப்பாகக் கட்டலாம்.  வேட்டியின் சால்வையை ஒரு பட்டி அளவுக்கு மடித்து அழகை அதிகரிக்க இடுப்பில் கட்டலாம்.