Skip to main content

Posts

Showing posts with the label Thalaippagai

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தலைப்பாகை கட்டுவது எப்படி?

மணமகன், மணத்தோழன் அலங்காரத்தில் மிக முக்கிய இடம் பிடிப்பது தலைப்பாகையாகும். தலைப்பாகையானது பல்வேறு துணிகளில் கட்டக் கூடியதாக இருந்தாலும் பருத்தித் துணியில் கட்டுவதே உகந்தது. மாப்பிள்ளை அலங்காரத்தில் மாப்பிள்ளை பட்டு வேட்டி உடுத்தினால் தற்காலத்தில் Ready Made ஆக பட்டுத் வேட்டியின் சால்வையில் செய்யப்பட்ட தலைப்பாகையை வாங்கி அணிவர். ஆனால் மாப்பிள்ளையாகத் தயாராகும் ஆண்கள் பட்டு வேட்டி கட்டினாலும், பருத்தித் துணியில்(Cotton) வேட்டி கட்டினாலும் அவற்றுடன் வரும் சால்வையை தோளில் அணிய விரும்பா விட்டால் அதனை மடித்து அயன் செய்து கூட தலைப்பாகையாகக் கட்டலாம். தலைப்பாகை கட்டும் போது மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது அதனை நாம் எவ்வளவு இறுக்கமாக கட்டுகிறோம் என்பதைத்தான். தமிழ் கலாச்சாரத்தில் மாப்பிள்ளைகளுக்கான ஆடையாக வேட்டி, சட்டை, தோளில் துண்டு, தலையில் தலைப்பாகை என்பன காணப்படுகின்றன. முதலில் சால்வையை மடித்து அயன் செய்ய வேண்டும். நேர்த்தியாக அயன் செய்தால் தலைப்பாகை கட்டும் போது அழகாகவும் இருக்கும், அதே நேரம் பிடித்து வைத்த பிள்ளையார் போல மடிப்புகள் நேர்த்தியாக இருக்கும். மாப்பிள்ளைகளுக்கான தலைப்பாக...