Skip to main content

Posts

Showing posts with the label Undershirts

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Formal Dress அணியும் போது ஆண்கள் பனியன் அணிய வேண்டுமா?

பனியன், ஜட்டி என்பன ஆண்களின் உள்ளாடைகளில் மிக முக்கியமானவை. அவற்றை அணிவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். உதாரணமாக பனியன் அணிவதன் மூலம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் நீங்கள் அணிந்திருக்கும் சட்டை நனைவதை தவிர்க்கலாம். அதே போல இடுப்புக்கு மேலே உங்கள் உடலை செதுக்கியது போல கவர்ச்சியாக வெளிக்காட்டலாம்.  ஜட்டி அணிவதன் மூலம் உங்கள் ஆண்குறியையும், விதைகளையும் ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்கலாம். அதே வேளையில் அணிந்திருக்கும் Pant ஜிப் போடும் போது ஆண்குறியின் முன் தோல்(Foreskin) மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம்.  ஓடி, ஆடி வேலை செய்யும் போது உங்கள் ஆண்குறியும் விதைகளும் கால்களுக்கு நடுவே அங்கும் இங்கும் அசைந்து அசெளகரியத்தை ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்தலாம். புடைத்தெழுந்த ஆண்குறி வெளித்தெரிவதை ஜட்டி அணிவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வேட்டி, லுங்கி அணியும் போது பனியன் எவ்வாறு அணிய வேண்டும்?

பனியன் என்பது ஆண்களின் உடலின் மேற்பகுதியை மறைக்கும், வியர்வையை அகத்துறிஞ்சும் உள்ளாடையாகும். உள்ளாடை என்றாலே உள்ளே தானே அணிய வேண்டும்? உண்மை தான், ஆண்கள் பனியனை உள்ளே தான் அணிய வேண்டும். ஆனால் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி கட்டும் போது பனியன் அணிந்தால், ஆண்கள் பனியனை உள்ளே விட்டு(Tuck In) கட்ட வேண்டுமா? இல்லை பனியனை வெளியே விட்டு(Untucked) கட்ட வேண்டுமா? என்பதைத் தான் நாம் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கப் போகிறோம். நீங்கள் விரும்பிய மாதிரி பனியனை அணியலாம். பனியனை உள்ளே விட்டு வேட்டி அல்லது லுங்கி அணிந்தால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக அழகாக இருக்கும்.    பனியனை அணிந்த பின்னர், அதன் மேல் வேட்டியையோ அல்லது லுங்கியையோ கட்டலாம்.  பனியன் நீளமாக இருந்தால் வெள்ளை நிற வேட்டி கட்டும் போது, பனியனை ஜட்டியை மறைக்கும் அளவுக்கு உள்ளே விட்டு வேட்டி கட்டினால், வெள்ளை வேட்டியினூடாக ஜட்டி(கலர் ஜட்டி) வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

ஆண்களுக்கான உள்ளாடைகள் எவை?

உள்ளாடைகள் என்பது நமது இனப்பெருக்க உறுப்புக்களை மறைக்க உதவும் ஆடைகளாகும். நாம் உள்ளாடை அணிவதன் பிரதான நோக்கமே நமது அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் அந்தரங்கமாக வைத்திருப்பதாகும். ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்ன? மேலாடை இன்று வெறும் மேலுடன் கூட பலர் முன்னிலையில் ஆண்கள் நிற்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஜட்டி அணியாமல் அம்மணமாக பலர் முன்னிலையில் நிற்பார்களா? ஆண்களின் மானம் என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால் ஜட்டி(Underwear) அவர்களின் பிரதானமான உள்ளாடையாகும்.  அன்றாட  தேவைகள், விசேட தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜட்டிகள் ஆண்களுக்காக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரம் மயிர்படர்ந்த உறுதியான நெஞ்சையும், அவர்களின் மார்புக் காம்புகளையும் அடிவயிற்றையும் மறைக்க உதவியாக இருக்கும் பனியன்களும்(Vest/Undershirt/Inner Vest/Banniyan​) ஆண்களுக்கான உள்ளாடையாகும். Socks(காலுறை/மேஸ்) ஆண்களுக்கான உள்ளாடையா? ஆம். அவற்றை நாம் Shoes இற்குள் அணிவதால் அதுவும் உள்ளாடையாகும். நாம் Formal Dress/Office Wear அணியும் போது சட்டை...

ஆண்கள் எந்த வகை பனியன் அணிய வேண்டும்?

ஆண்களின் பனியனைப் பொறுத்தவரையில் கை வைத்த பனியன், கை வைக்காத பனியன்(Sleeveless Inner Vest) என இரண்டு வகை உள்ளது. கைவைத்த பனியன்களின் கைகளின் நீளத்தைப் பொறுத்து அதிலும் உப பிரிவுகள்(Long Sleeve Inner Vest, Half Sleeve Inner Vest, Three Fourths Inner Vest, Arm cut Inner Vest) உள்ளன. இவற்றைத் தவிர Strap style(தோளில் தங்கும் பட்டியின் அகலம்), Neck style(கழுத்துப்பகுதியின் வடிவம்) போன்றவற்றை வைத்தும் ஆண்களின் பனியன்கள் வேறுபடுத்தப்படுகிறது. வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைக்காத பனியன்கள் அதிகம் கவர்ச்சியைத் தரக் கூடியவை.  Sleeveless Undershirts(or Banniyan/Inner Vest) அதே நேரம் கைவைத்த பனியன்கள், சட்டையின் அக்குள் பகுதியில் ஏற்படும் மஞ்சள் காவி(Deodorant Stains) கறையைத் தடுக்க உதவும். ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைத்த, கைவைக்காத என இரண்டு வகை பனியன்களையும் அணியலாம். ஆனால் எதை எப்போது அணிய வேண்டும் என்பதை உங்கள் தேவை, நீங்கள் அணியும் மேலாடையே தீர்மானிக்கிறது.   ஆண்கள் அணிந்திருக்கும் சட்டையினூடாக அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் பனியன் வெளித்தெரிவதால் எந்தப்பிரச்சனையும் இல்லை....

Gym இற்கு ஆண்கள் எவ்வாறான ஆடை அணிந்து செல்ல வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் ஆர்வம் ஆண்களுக்கு அவர்கள் பூப்படையும் ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏற்படுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளில், நீச்சல் போன்றவற்றில் ஈடுபடத் துவங்கி, பின்னர் Gym இற்குச் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது சிறந்தது. ஆரம்பத்திலேயே Gym இற்குச் செல்வது நல்லதல்ல. பாரம் தூக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட விரும்பும் ஆண்கள் இடுப்புக்குப் பக்கபலமாக Gym Belt அல்லது Jockstrap ஜட்டி அணிய வேண்டும். Jockstrap ஜட்டியை வீட்டில் இருந்தே ஆணிந்து வரலாம். Gym இல் Locker Room வசதி இருந்தால், Gym இற்கு வந்து கூட தேவை ஏற்படின் Jockstrap ஜட்டியை அணியலாம்.   ஆண்கள் விளையாடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியும் ஆடை, அவர்களின் வியர்வையை உறிந்து வைத்திருக்கக் கூடாது. அவை சீக்கிரம் காய்ந்து  விடக் கூடிய வகையிலான துணியினால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன் காரணமாகவே Sports/Athletic/Gym Wear க்கென பிரத்தியேகமாக ஆண்களுக்கான உடைகள்(Gym Clothes) மற்றும் உள்ளாடைகள் விற்கப்படுகின்றன.

ஆண்கள் பனியன் வாங்குவது எப்படி?

பனியன் வாங்கும் போது நெஞ்சு சுற்றளவை வைத்தே பனியன் வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும் பனியன் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு உங்களுக்கு நன்றாக பொருந்தும். இல்லாவிட்டால் கீழே குனியும் போது பனியன் பேண்டை விட்டு வெளியே வர வாய்ப்பு உள்ளது. அநேகமான பனியன்கள்(Banniyan) பருத்தி துணியில் செய்யப்பட்டிருக்கும். ஆனால் விளையாட்டுக்களின் போது, Gym இல் உடற்பயிற்சி செய்யும் போது அணியும் வகையிலான Men's Athletic Vest/Gym Vest களும் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. இவை நைலோனினால் செய்யப்பட்டிருக்கும். வியர்வையை உறிஞ்சாது.

ஆண்கள் ஏன் பனியன் அணிய வேண்டும்?

ஆண்கள் பனியன் அணிவதன் மூலம் வியர்வையில், அணிந்திருக்கும் சட்டை நனைவதைத் தவிர்க்க முடியும். சில ஆண்களுக்கு அவர்களின் மார்புக் காம்புகளில் அதிக உணர்ச்சி இருக்கும். அவர்கள் பனியன் அணியாது சட்டை அணியும் போது அசெளகரியமாக உணர அதிக வாய்ப்பு உள்ளது. கை வைத்த பனியன் அணிவதன் மூலம் சட்டைகளின் அக்குள் பகுதியில் காவி நிறக் கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.   பனியன் அணிவதன் மூலம் ஆண்கள் தமது தோற்றத்தை மெருகேற்றலாம். பனியன் அவர்களின் உடலை அழகாக வெளிக்காட்ட உதவும்.  வயதுக்கு வந்த ஆண்கள் அணியும் பனியன்(Undershirt) அவர்களின் உடம்புடன் ஒட்டியிருக்க வேண்டும். அவர்களின் மேலுடம்பை இழுத்துப் பிடித்து(Support) இறுக்கமாக, கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  ஆண்களின் பனியன், அதனை அணிந்திருக்கும் போது தளர்வாக இருக்கக் கூடாது. ஆண்களின் பனியன் நீளமாக இருக்க வேண்டும். குறைந்தது ஆண்களின் இடை வரை பனியன் நீளமாக இருந்தால் நல்லது. ஆண்களின் பனியன் எப்படி அமைய வேண்டும்? உணர்ச்சி வசப்படும் போது அநேகமான ஆண்களுக்கும் பெண்களைப் போல மார்பு காம்புகள் தடிப்பாகும். நீங்கள் அணிந்திருக்கும் சட்டையினூடாக(or T-Sh...