வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.
a tamil blog dedicated to men's fashion and lifestyle, providing insights into traditional and modern attire. Learn about garments that are used in day to day life of men such as lungi, sarong, veshti, mundu, dhoti, kailee, underwear, inner vest, baniyan, undershirt, jeans, pants, shirts, and t-shirts. Discover practical tips, and real-life experiences from other men on how to choose, buy, and wear these items. Also, explore general topics and hygiene practices to enhance your overall lifestyle.