Skip to main content

Posts

Showing posts with the label Salvai

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தலைப்பாகை கட்டுவது எப்படி?

மணமகன், மணத்தோழன் அலங்காரத்தில் மிக முக்கிய இடம் பிடிப்பது தலைப்பாகையாகும். தலைப்பாகையானது பல்வேறு துணிகளில் கட்டக் கூடியதாக இருந்தாலும் பருத்தித் துணியில் கட்டுவதே உகந்தது. மாப்பிள்ளை அலங்காரத்தில் மாப்பிள்ளை பட்டு வேட்டி உடுத்தினால் தற்காலத்தில் Ready Made ஆக பட்டுத் வேட்டியின் சால்வையில் செய்யப்பட்ட தலைப்பாகையை வாங்கி அணிவர். ஆனால் மாப்பிள்ளையாகத் தயாராகும் ஆண்கள் பட்டு வேட்டி கட்டினாலும், பருத்தித் துணியில்(Cotton) வேட்டி கட்டினாலும் அவற்றுடன் வரும் சால்வையை தோளில் அணிய விரும்பா விட்டால் அதனை மடித்து அயன் செய்து கூட தலைப்பாகையாகக் கட்டலாம். தலைப்பாகை கட்டும் போது மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது அதனை நாம் எவ்வளவு இறுக்கமாக கட்டுகிறோம் என்பதைத்தான். தமிழ் கலாச்சாரத்தில் மாப்பிள்ளைகளுக்கான ஆடையாக வேட்டி, சட்டை, தோளில் துண்டு, தலையில் தலைப்பாகை என்பன காணப்படுகின்றன. முதலில் சால்வையை மடித்து அயன் செய்ய வேண்டும். நேர்த்தியாக அயன் செய்தால் தலைப்பாகை கட்டும் போது அழகாகவும் இருக்கும், அதே நேரம் பிடித்து வைத்த பிள்ளையார் போல மடிப்புகள் நேர்த்தியாக இருக்கும். மாப்பிள்ளைகளுக்கான தலைப்பாக...

ஆண்களின் வேட்டி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

நூலிழைகளால் துணியை உருவாக்க மனிதன் அறிந்த காலம் முதல், ஆண்களிடம் வேட்டி அணியும் பழக்கம் துவங்கிவிட்டது. தமிழகத்தின் காலநிலை, கலாசாரம், பண்பாடு மற்றும் தொழில் முறைக்கு ஏற்றது வேட்டி. இதனால், அது பாரம்பரிய உடையாக மாறியது. சங்க காலத் தமிழ் நூல்களில் வேட்டி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழங்காலக் கோயில்களில் இடம்பெற்றுள்ள சிலைகளில், வேட்டி வடிவ உடைகளை ஆண்கள் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. வேட்டியின் வகைகள்  - வேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழம்(Single Dhoti), எட்டு முழம்(Double Dhoti), கரை வேட்டி(Small Border, Big Border, Fancy Border Veshti) என வேட்டிகளில் பல வகைகள் உள்ளன.  பட்டு(Silk), பருத்தி(Cotton), பாலியஸ்டர்(Polyester) எனப் பலவகைத் துணிகளிலும் வேட்டிகள் நெய்யப்படுகின்றன. ஏதாவது Synthetic Fiber இனால் பட்டு வேட்டி போன்றே செய்யப்பட்ட செயற்கையான பட்டு வேட்டிகளை Artificial Silk அல்லது Art Silk என்பர். பருத்தி துணியினால் ஆன வேட்டி கட்டியிருக்கும் ஆண்கள்

வேட்டி அணியும் போது கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்

வயதுக்கு வந்த ஆண்கள் எப்போதும் 8 முழ வேட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும். நான்கு முழ வேட்டியைக் கட்டும் போது, 1. நடக்கும் போது காற்றிற்கு 2. உட்காரும் போது  3. தூங்கும் போது 4. வேட்டி அணிந்து சண்டை போடும் போது வேட்டி விலக அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே வயதுக்கு வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டும் போது கட்டாயம் ஜட்டி அணிந்திருப்பது அவசியம். வேட்டி அணிந்து பழகும் வரை ஒரு தயக்கம் ஆண்களுக்கு இருக்கத்தான் செய்யும். அடிக்கடி வேட்டி அணிவதன் மூலம் அந்தத் தயக்கத்தை நீக்கலாம். அன்றாட வாழ்க்கையில், வயது வந்த ஆண்கள் வேட்டியைக்(Veshti/Mundu/Dhoti) கையாளும் முறைகள் வெள்ளை நீற வேட்டி அணியும் போது வெள்ளை நீற ஜட்டியை உள்ளே அணிவதைத் தவிர்ப்பது நல்லது.  வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது வித்தியாசமான முறைகளில் கட்டலாம். தொடைகளுக்கு நடுவே தான் கட்டு இருக்க வேண்டும் என்பது நியதி அல்ல. வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டும் முறைகள்     குறிப்பு: ஆண்கள் வேட்டியை அல்லது லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது அவ...