நூலிழைகளால் துணியை உருவாக்க மனிதன் அறிந்த காலம் முதல், ஆண்களிடம் வேட்டி அணியும் பழக்கம் துவங்கிவிட்டது. தமிழகத்தின் காலநிலை, கலாசாரம், பண்பாடு மற்றும் தொழில் முறைக்கு ஏற்றது வேட்டி. இதனால், அது பாரம்பரிய உடையாக மாறியது. சங்க காலத் தமிழ் நூல்களில் வேட்டி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழங்காலக் கோயில்களில் இடம்பெற்றுள்ள சிலைகளில், வேட்டி வடிவ உடைகளை ஆண்கள் அணிந்திருப்பதைக் காண முடிகிறது.
வேட்டியின் வகைகள் - வேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழம்(Single Dhoti), எட்டு முழம்(Double Dhoti), கரை வேட்டி(Small Border, Big Border, Fancy Border Veshti) என வேட்டிகளில் பல வகைகள் உள்ளன.
பட்டு(Silk), பருத்தி(Cotton), பாலியஸ்டர்(Polyester) எனப் பலவகைத் துணிகளிலும் வேட்டிகள் நெய்யப்படுகின்றன. ஏதாவது Synthetic Fiber இனால் பட்டு வேட்டி போன்றே செய்யப்பட்ட செயற்கையான பட்டு வேட்டிகளை Artificial Silk அல்லது Art Silk என்பர்.
முன்னர் வெள்ளை நிறத்தில் மட்டுமே தயாரான வேட்டிகள் தற்போது பல வண்ணங்களில் உருவாக்கப்படுகின்றன. வேட்டியைக் கட்டுவது கூட ஓர் அழகு. கட்டத் தெரியாதவர்கள் கூட, எளிதாகக் கட்டுவதற்கேற்ப ‘ஒட்டிக்கொள்ளும்’ வேட்டிகள்(Velcro Veshti) வந்துவிட்டன. சிறுவர்கள் கட்டுவதற்கும் அழகழகான வேட்டிகள் கிடைக்கின்றன.
பெரும்பாலும் தூய வெண்ணிறத்தில் வேட்டி இருக்கும்; வெளுப்பான் கொண்டு வெளிறச் செய்யாது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது, கோடி வேட்டி அல்லது புதிய வேட்டி எனப்படும். இவை திருமணம் போன்ற விசேஷ நாட்களில் அணியப்படுகிறது.
வேட்டியின் கரையின் அளவை(Veshti Border Size) வைத்தும் சிலர் வேட்டியை வகைப்படுத்துவர்.
விரத நேரங்களில் சிவப்பு, காவி, நீலம், கருப்பு வண்ணங்களில் வேட்டிகள் உடுத்தப்படுகின்றன. திருமணத்தின்போது மணமகன் பட்டு வேட்டி உடுத்துவது வழக்கத்தில் உள்ளது. மன்னர்கள், வேட்டிகளைத் தங்க ஜரிகைகளுடன்(Jari) கட்டுவது வழக்கம். தமிழர்கள் மட்டுமல்ல; தென் மாநிலத்தினர் மட்டுமல்ல; வட மாநிலத்தினரும் தற்போது வேட்டி அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆண்களின் வேட்டிகளில் உயரம் கூடிய வேட்டிகளும் உள்ளன உயரம் குறைந்த வேட்டிகளும் உள்ளன. உங்கள் உயரத்தைக் கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற வேட்டியை வாங்கவும்.
ஆண்களின் பட்டு வேட்டி இரண்டு வகையான நிறங்களில் கிடைக்கிறது. ஒன்று சந்தணக் கலர்(Sandal) மற்றையது பாதி வெள்ளை நிறம் கலந்தது (Half White) போன்ற நிறம்.
வேட்டியின் துணியின் தடிமன், துணியின் வகை போன்றவற்றை வைத்தும் வேட்டியை வகைப்படுத்தலாம்.
ஆண்கள் சேலை கட்டுவார்களா? ஆம்! ஆச்சரியமாக உள்ளதா?
சில ஆண்கள் நடனம், நாடகம், அல்லது கலாச்சாரம் சார்ந்த விடையங்களுக்காக பெண்கள் அணியும் பட்டுச் சேலையை வேட்டியாக அணிவர்.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முழங்கால் தெரியுமாறு நடப்பது தவறாகக் கருதப்படுகிறது. இவ்வாறு வேட்டியினை மடித்துக் கட்டிக் கொண்டு பெண்களின் முன்னிலையில் பேசுவது இழிவாக கருதப்படுகிறது.
பெரும்பாலும், வேட்டியைப் பொது நிகழ்வுகளின் போது வெளி இடங்களில் மடித்துக் கட்டும் வழக்கம் இல்லை. இவை அனைத்தும் வேட்டி குறித்து எழுதப்படாத சட்டங்களாகவே கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன.
வேட்டி அணியும் போது, அதனுடன் துண்டு அணியும் வழக்கம் உண்டு. தமிழ்த் திருமணங்களில் மணமகன் தன்னுடைய தோளில் இத்துண்டினை அணிந்திருப்பார். கோவில் பணிகளில் ஈடுபடுவோர் வேட்டி அணிந்திருப்பர். வேளாண் மக்களும் வேட்டியுடன் துண்டினைப் பயன்படுத்துவர். துண்டினை வேலை செய்யும் போது தலையிலும், உட்காரும்போதும், நடக்கும்போதும் தோளிலும், கோவில்களில் வழிபாடு செய்யும் போது இடுப்பிலும் கட்டியிருப்பர்.
பாலியஸ்டரினால் ஆன வேட்டிகளை ஆண்களால் அதிக நேரம் அணிந்திருக்க முடியாது. உள்ளே ஒரே அவிச்சலாக இருக்கும். வியர்வையும் அதிகமாக ஏற்படும். ஆனால் அவற்றில் கறை ஏற்பட்டால் இலகுவில் சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும்.
பாலியெஸ்டர் துணியில் அல்லது பாலியெஸ்டர் - பருத்தி துணியின் கலப்பில்(Blend) செய்யப்பட்ட வேட்டிகளை அயன் செய்ய வேண்டிய தேவை இருக்காது. குளிர் பிரதேசங்களில் அணிய இது உகந்தது. Cotton வேட்டிகளை விட பாரமாக இருக்கும். இந்த வகை வேட்டிகளை Male Models விளம்பரங்களில் பயன்படுத்துவர்.
தனி பட்டுத் துணியினால்(Silk) அல்லது பட்டுத் துணியின் கலப்பினால்(Silk Blend Veshti) செய்யப்பட்ட வேட்டிகளை வயதுக்கு வந்த ஆண்கள் அணியும் போது கட்டாயம் உள்ளே ஜட்டி(Underwear) அணிந்திருக்க வேண்டும். ஏன் என்றால் பட்டுத் துணி தொடைகளில் உள்ள முடியுடன்உரசும் போதும், ஆண்குறியைச் சூழ உள்ள முடிகளை உரசும் போதும் சுகத்தின் மிகுதியால், உங்கள் கட்டுப்பாட்டை மீறி பொது இடத்தில் வைத்துக் கூட உங்கள் ஆண்குறி புடைத்தெழுந்து வேட்டியில் கூடாரமிடலாம்.
பட்டு வேட்டிகள் இலகுவில் கசங்கி விடும். அணிந்த பட்டு வேட்டிகளை துவைத்து காய வைத்ததும், ஒழுங்காக மடித்து வைப்பதன் மூலம் அளவுக்கதிகமான கசங்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பட்டு வேட்டியை நேரடியாக அயன் செய்யாமல் பேப்பர் வைத்து அதன் மேல் அளவான சூட்டில் அயன் செய்ய வேண்டும்.
8 முழ வேட்டியை விட 4 முழ வேட்டியை இலகுவாக முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டலாம்.
காட்டன்/பருத்தி வேட்டிகளை உங்கள் இஷ்டம் போல அயன் செய்யலாம். ஆனால் முழுமையாக காயாத பருத்தி வேட்டிகளை அயன் செய்யும் போது கசங்கல்களை இலகுவாக சரி செய்யக் கூடியதாக இருக்கும். இல்லாவிட்டால் தண்ணீர் Spray செய்து கசங்கிய பகுதிகளை அயன் செய்ய வேண்டி ஏற்படும்.
பருத்தி, மற்றும் பட்டு துணியின் கலப்பில்(Silk and Cotton Blend Veshti) உருவான வேட்டிகள் தான், நாம் வாங்கும் அநேகமான விலை குறைந்த பட்டு வேட்டிகளாகும்.
வேட்டி அணியும் போது தம்மை மேலும் அழகாகக் காண்பிக்க வேறு வித்தியாசமான நிற சால்வையை ஆண்கள் இடுப்பில் Belt போல இறுக்கிக் கட்டுவர்.ஆனால் அவ்வாறு சால்வையை இடுப்பில் அணியும் போது இடுப்பில் துண்டு கட்டுவது போல நேர்த்தியாக அணிய வேண்டும். வேட்டியின் மேல் வேறு நிற சால்வையைக் கட்டிக் கொண்டு அதன் பின்னர் வேட்டியை முழங்கால்களுக்கு மேல்(கட்டிய சால்வை வேட்டியின் மடிப்பினுள் இருக்குமாறு) தூக்கி தொடைகளுக்கு நடுவே கட்டும் போது மிகவும் கவர்ச்சியான தோற்றம் கிடைக்கும்.முன்பெல்லாம், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து தான் ஆண்கள் மணமேடையை அலங்கரிப்பார்கள். இன்றைக்கோ, மணமகன்கள் கோர்ட்டு, ஷூட்டுகளில் தான் பெரும்பாலும் காட்சி தருகிறார்கள். நம்மிடம் தொற்றி இருக்கும் மேற்கத்திய கலாசாரம், நம் கலாசாரத்தை அழிவு பாதையில் வீறு நடைப்போட செய்துள்ளது. மேலை நாட்டவர்கள் குளிர் பிரதேசத்தில் வசிப்பதால், கோர்ட்டு, ஷூட்டுகளை தங்களுக்கு ஏற்ற உடையாக கருதுகிறார்கள். ஆனால், நாம் வசிக்கும் தமிழகமோ குளிர் பிரதேசம் அல்ல. இங்கே, அந்த கோர்ட்டு, ஷூட்டுக்கெல்லாம் அவசியம் இல்லை.
முதலில் வேட்டி நம் அடையாளம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். பருத்தி நூலில் நூற்கும் வேட்டியை நம் முன்னோர்கள் கட்டி வந்தனர். வேட்டியில், முகூர்த்த வேட்டி, தற்காப்பு கலை வேட்டி, பட்டு வேட்டி, பூஜை வேட்டி, சாதாரண வேட்டி என பல வகை உண்டு. ஒவ்வொரு குடும்ப பாரம்பரியத்துக்கு தக்கவும் வேட்டிகள் மாறுபடும். இதை வேட்டி கரையின் வண்ணம் வெளிப்படுத்தும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தக்க வேட்டியின் கரை மஞ்சள், பச்சை, நீலம், காவி என வேறுபடும்.
வேட்டி கட்டுவதால் ஆபத்துகள் விலகி நிற்கும். ஒவ்வொரு வகையான வேட்டிக்கும் வெவ்வேறு வகையான நன்மைகள் உண்டு. பழைய காலங்களில் ஒருவர் கட்டி இருக்கும் வேட்டி, அவரை அடையாளப்படுத்துவதாகவும் திகழ்ந்தது. தற்காப்பு கலை வேட்டி என்பது வழக்கமாக மடித்து கட்டுவதை போன்றது அல்ல. இந்த வகையான வேட்டியை லங்கோடு என்று அழைப்பார்கள். இதை கட்டிக்கொண்டு சண்டைப்போடுவது ஆண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். இந்த வேட்டிக்கு மேலே சாதாரண வேட்டியை கட்டுவார்கள். இதை முழங்கால் தெரியும்படி கட்டுவது வழக்கம். இந்த வேட்டியை யாராவது கட்டி இருந்தால், அவர்கள் சண்டை பயிற்சி கற்றவர்கள் என்பதை அவர்கள் சொல்லாமலேயே தெரிந்துகொள்ளலாம். வேட்டியின் நாலாபுறமும் கோடு இருந்தால், அதை கட்டி இருப்பவர் தனக்கு யாருடைய தயவும் தேவையில்லை என்பதை வெளிப்படுத்துகிறார் என்று அர்த்தம்.
சிவனை வழிபட கரையில்லா வெள்ளை வேட்டி, விஷ்ணுவை தரிசிக்க மஞ்சள் நிற வேட்டி, அம்மனை வேண்ட சிவப்பு நிற வேட்டி, அனுமனை ஜெபிக்க காவி நிற வேட்டி என ஆன்மிக நேரங்களில் கட்டி வந்தனர். வேள்வியின்போது இதே நிற வேட்டிகளுடன் அகன்ற பட்டு கரை வேட்டி அணிவார்கள்.
இதே போல, பட்டு வேட்டியை திருமணம் போன்ற விழாக்களுக்கு கட்டுவார்கள். ஏனென்றால் அந்த விழாக்களில் நூற்றுக்கணக்கானோர் வந்திருப்பார்கள். இந்த வேட்டி கட்டினால், மற்றவர்களின் வியர்வை, ஒவ்வாமை நம்மை பாதிக்காது. இதே போல அங்கே நிலவும் வெப்ப காற்றும் தீண்டாது.
மணமேடையில் இருக்கும் மாப்பிள்ளை கட்டுவதை முகூர்த்த வேட்டி என்பார்கள். அதுவும் பெரும்பாலும் பட்டு வேட்டியாகத்தான் இருக்கும். இது அவருக்கு புது நம்பிக்கையை தரும். எளிதில் தீப்பற்றாததாகவும் இருக்கும். திருமணத்துக்கு முந்தைய நிச்சயதார்த்தத்துக்கு என்றும் தனியாக வேட்டி உண்டு.
இதே போல இறுதி ஊர்வலத்தின் போது இறந்தவருக்கு வெள்ளை வேட்டி அணிவிக்கப்படும். அவருடைய மகன்களும் வெள்ளை வேட்டியே அணிய வேண்டும். வேறு வேட்டி அணிய கூடாது என்ற நடைமுறை உண்டு. காட்டுக்குள் வேட்டையாட அல்லது இதர தேவைக்காக செல்லும் ஆண்கள் கருப்பு நிறத்தில் வேட்டி அணிவர். காரணம், கருப்பு நிற வேட்டியை கண்டால் விஷ உயிரினங்கள் அண்டாது என்ற நம்பிக்கை இருந்தது.
பழைய காலத்தில் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருந்தார்கள். விவசாயமும், உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் மட்டுமே பிரதானமாக இருந்தது. அப்படி வேலை செய்யும்போது சாதாரண வேட்டி அணிவது காற்றோட்டமாகவும், உடலுக்கு உகந்ததாகவும் இருக்கும். பொதுவாகவே வேட்டி அணிவதால் தீ விபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும். தீப்பற்றினால் வேட்டி மட்டுமே எரியும். உடலில் தீப்பற்றுவதற்குள் தப்பி விடலாம். ஆனால், இன்றைக்கு நாம் அணியும் துணிகள் அத்தகையது அல்ல.
ஆண்கள் வேட்டி அணியும் போது ஜட்டி அணியனுமா? ஆம்!
வேட்டி அணியும் போது உங்கள் உடலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது சிறந்தது.
சில ஆண்கள் தாம் அணியும் சட்டையின் நிறத்தை ஒத்த நிறத்தில், அல்லது நீளமான குர்தாவின் நிறத்தை ஒத்த நிறத்தில் வேட்டி அணியும் போது ஜட்டி அணிவர்.
சிலர் வேட்டியின் நிறத்தை ஒத்த நிறத்திலும் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவர். ஆனால் வெள்ளை வேட்டி அணியும் போது வெள்ளை நிற ஜட்டி அணியக் கூடாது. அது வெள்ளை நிற வேட்டியை ஊடுருவி வெளித்தெரியும்.
உள்ளே ஜட்டி அணியாது வெள்ளை நிற வேட்டி அணிந்து குளிக்கக் கூடாது. நீரில் வெள்ளை நிற வேட்டி நனைந்ததும் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும்.
பொது நீர் நிலைகளில் ஜட்டியுடன் குளிக்க விரும்பாத ஆண்கள் வேட்டியுடன் வரும் சால்வையை இடுப்பில் கட்டிக் குளிக்கப் பயன்படுத்தலாம்.
ஆண்கள் பொதுவாக தாம் தெரிவு செய்து அணியும் மேலாடையின்(Shirt, T-Shirt, Kurta) நிறத்தில், அல்லது அதற்கு Matching ஆக இருக்கும் வகையில் வேட்டியின் கரையின் நிறத்தைத் தெரிவு செய்து அணிவர்.
வேட்டி, லுங்கி/சாரம் அணிந்திருக்கும் போது ஆண்களால் நின்று கொண்டும், இருந்து கொண்டும் சிறுநீர் கழிக்க முடியும்.
ஆண்கள் வேட்டியில் தம்மை கவர்ச்சியாக வெளிக் காட்ட முடியுமா? நிச்சயமாக முடியும். Fitness இல் ஆர்வமுள்ள ஆண்கள் அதிகம் வேட்டி அணிய விரும்புவது இதனால் ஆகும்.
வேட்டி ஆண்களுக்கான கவர்ச்சியான ஆடையும் ஆகும். வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டியில் தம்மை கவர்ச்சியாகக் காட்டத் தயங்கக் கூடாது.
Comments
Post a Comment