வயதுக்கு வந்த ஆண்கள் எப்போதும் 8 முழ வேட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.
நான்கு முழ வேட்டியைக் கட்டும் போது,
1. நடக்கும் போது காற்றிற்கு
2. உட்காரும் போது
3. தூங்கும் போது
4. வேட்டி அணிந்து சண்டை போடும் போது
வேட்டி விலக அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே வயதுக்கு வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டும் போது கட்டாயம் ஜட்டி அணிந்திருப்பது அவசியம்.
வேட்டி அணிந்து பழகும் வரை ஒரு தயக்கம் ஆண்களுக்கு இருக்கத்தான் செய்யும். அடிக்கடி வேட்டி அணிவதன் மூலம் அந்தத் தயக்கத்தை நீக்கலாம்.
வெள்ளை நீற வேட்டி அணியும் போது வெள்ளை நீற ஜட்டியை உள்ளே அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
வெள்ளை நிற சட்டை அணியும் போது வெள்ளை நிற பனியன் அணிந்தால் எப்படி சட்டையினூடாக வெளித்தெரியுமோ அது போல வெள்ளை நிற வேட்டி அணியும் போது வெள்ளை நிற ஜட்டி அணிந்தால், வெள்ளை ஜட்டியும், அதன் ஜட்டி வெட்டும் நாம் அணிந்திருக்கும் வேட்டியினூடாக வெளித்தெரியும்.
கதர்த்துணியிலும் வேட்டி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
How to drape Veshti/Mundu/Dhoti?
வெளிநாடுகளில் அல்லது குளிர் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் வேட்டி/லுங்கி அணியும் போது உள்ளே Thermal Wear(உடலின் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் ஆடை) அணிவது அவசியமாகும். இதன் மூலம் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியுமாக இருக்கும்.
ஆண்கள் குளிர் பிரதேசங்களில் வேட்டி, லுங்கி கட்டும் போது
உள்ளே Jockstrap Underwear அணிந்து, அதன் மேலே Thermal Wear/Long John Underwear அணிவது உகந்தது. இதன் மூலம் குளிரின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
வேட்டி கட்டும் போது கால்களை ஓரளவு அகட்டி வைத்துக் கொண்டு கட்டுவதன் மூலம் வேட்டி கட்டிக் கொண்டு நடக்கவும், உட்காரவும் வசதியாக இருக்கும்.
கால்களை சற்று அகட்டி வைத்துக் கொண்டு வேட்டியை இறுக்கமாக கட்டுவதன் மூலம் உங்கள் குண்டிகளையும், தொடைகளையும் வெளிக்காட்டலாம்.
ஆண்கள் வேட்டி கட்டும் போது வேட்டி நிலத்தைத் தொடக்கூடாது. உங்கள் கால்கள் வெளித்தெரிய வேண்டும். நீங்கள் கட்டும் வேட்டி உங்கள் கணுக்காலுக்குக் கீழ் வரை இருக்க வேண்டும். நிலத்தைத் தொடும் வகையில் வேட்டி கட்டினால் வேட்டி நிலத்தில் அரையிண்டும்(தேயும்). சேறும் சகதிகள் படும். சீக்கிரம் அழுக்காகிவிடும். உங்கள் காலில் சிக்கியே வேட்டி இழுபட்டு, பொது இடத்தில் வைத்து வேட்டி அவிழலாம். நீங்கள் நடக்கும் போது கால் இடறுண்டலாம். அதே நேரம் நீங்கள் அணிந்திருக்கும் காலணி(Shoes/Slippers) வெளித்தெரியாது. வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் உள்பக்கமாக வேட்டியை மடித்து வேட்டியின் உயரத்தைக் குறைக்கலாம்.
அதற்காக வேட்டியைக் கணுக்காலுக்கு மேல் உயர்த்தியும் கட்டக் கூடாது. சேறு/சகதியைக் கடக்கும் போது தேவை என்றால் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு நடக்கலாம்.
வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவது எப்படி?
கண்ணாடி போன்ற Transparent வெள்ளை வேட்டிகளை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. கண்ணாடி போன்ற வேட்டியை அணிய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், வேட்டியுடன் வரும் சால்வையை இடுப்பில் (துண்டு போல) கட்ட மறக்க வேண்டாம்.
ஏன் ஆண்கள் கண்ணாடி போன்ற மெல்லிய துணியினால் ஆன வேட்டியை(Transparent Veshti) அன்றாட வாழ்க்கையில் அணியக் கூடாது? அவை உங்கள் அந்தரங்கத்தை வேட்டியை ஊடறுத்து வெளிக்காட்டும்.
வேட்டி நனைந்தால், உங்களை முழு நிர்வாணமாகவே காட்டி விடும்.
அணிந்திருக்கும் வேட்டியைக் கழட்டி நீர் நிலைகளிலேயே விடும் சாத்திர சம்பிரதாயங்களின் போது இவ்வாறான வேட்டிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளை வேட்டியுடன் நீராட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் உள்ளே உங்கள் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டி அணிந்திருப்பதை உறுதி செய்யுங்கள்.
நான்கு முழ வேட்டியுடன் குளிக்கும் ஆண்கள் வேட்டி நீரில் நனைந்து தமது அந்தரங்கம் வெளித்தெரியாத வண்ணம் இவ்வாறு வேட்டியைக் கையாள்கின்றனர்.
வேறு நிற ஜட்டி அணிந்திருந்தாலோ அல்லது ஜட்டி அணியாது வெள்ளை வேட்டியுடன் நீராட முனைந்தாலோ நீரில் நனைந்த வெள்ளை வேட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விட அதிக சந்தர்ப்பம் உள்ளது.
வேண்டுமென்றால், ஒதுக்குப் புறமாகச் சென்று அணிந்திருக்கும் வேட்டியை முழுமையாகக் கழட்டி ஒரு இடுப்பில் கட்டும் துண்டின் அளவுக்கு மடிப்பினை உருவாக்கி இடுப்பில் கட்டிக் கொண்டு பொது இடங்களில் ஆண்கள் குளிக்கலாம். வேட்டியை மடித்ததால், துணி அடுக்குகள் அதிகமாகி அந்தரங்கப் பகுதியை மறைக்கத் தேவையான தடிமன் வேட்டியில் உருவாகி விடும்.
நான்கு முழ வேட்டிக்குப் பதில் நீராடும் போது எட்டு முழ வேட்டி அணிந்திருப்பது நல்லது. வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவதன் மூலம் உங்கள் இடுப்புக்குக் கீழ் துணி அடுக்கைக்(Layers) கூட்ட முடியும். இதன் மூலம் வேட்டி நீரில் நனைந்ததும் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டாது.
பொது இடங்களில் வேட்டியை Adjust செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், அல்லது வேட்டி கழறுவது போல உணர்ந்தால் ஒதுக்குப் புறமாகச் சென்று வேட்டியை கழட்டி அணியவும்.
தற்காலத்தில் பல்வேறு வர்ணங்களில் வேட்டிகள் கிடைக்கின்றன. கலர் வேட்டி அணியும் போது நீங்கள் எந்த நிற ஜட்டியையும் தெரிவு செய்து அணியலாம்.
கலர் வேட்டி அணியும் போது அதற்கு ஏற்ற நிறத்தில் சட்டை அணிய வேண்டும். எல்லா நிற வேட்டியுன் எல்லா ஆண்களுக்கும் அழகாக இருக்காது. கலர் வேட்டி வாங்கும் போது கடையில் இருக்கும் கண்ணாடியில் உங்களுக்கு அந்த நிற வேட்டி எடுப்பாக இருக்குமா என்பதைப் பார்த்து வாங்கவும்.
வேட்டி துணியிலும் கலப்புகள் உள்ளன. தனிப் பருத்தித் துணியினால் செய்த வேட்டிகள், தனிப் பட்டுத் துணியினால் செய்த வேட்டிகளை போன்று பட்டு, பாலியஸ்டர் மற்றும் பருத்தியின் கலப்பில் செய்யப்பட்ட வேட்டிகளும் சந்தையில் விற்கின்றன.
கலப்பில்லாத பட்டுத் துணியில் செய்த பட்டு வேட்டிகளை நேரடியாக அயன் செய்யாமல், பேப்பர் வைத்து அதன் மேல் அளவான சூட்டில் அயன் செய்து அவற்றின் கசங்கலை எடுக்கலாம். பட்டுத் துணிகளை நேரடியாக அயன் செய்தால் பொசுங்கி விடும். பட்டு வேட்டியை அயன் செய்யாது அணிந்தால், அங்காங்கே கசங்கியது போல அலங்கோலமாக இருக்கும்.
காட்டன்(பருத்தி) வேட்டிகளை நாம் சாதாரணமாகவே அயன் செய்யலாம். அவற்றை வீட்டிலேயே சலவைத் தூள் பாவித்து, துவைத்துக் காயப் போடலாம்.
பாலியஸ்டர்(Polyester) கலப்பில் உருவான வேட்டிகள் இலகுவில் கசங்காது. இவ்வகை வேட்டிகளையும் பட்டு வேட்டி போல நேரடியாக அயன் செய்வதைத் தவிர்க்கவும். இவற்றில் நேரடியாக அழுக்குப் படியாது. அப்படிப் படிந்தாலும் அவற்றை இலகுவாக சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும். பாலியஸ்டர் வேட்டிகளை நீண்ட நேரம் அணிந்திருக்க முடியாது. ஒரே அவிச்சலாகவும் எரிச்சலாகவும் இருக்கும்.
விலை உயர்ந்த பட்டு வேட்டிகளை Laundry இக்குக் கொடுத்து துவைக்கலாம். விரும்பினால் வீட்டில் சாதாரண Shampoo போட்டும் துவைத்துக் காய வைக்கலாம்.
வேட்டிகளை 3/4 வாசி காய்ந்தவுடனேயே எடுத்து அயன் செய்வதன் மூலம் இலகுவாக சுருக்கங்களை, கசங்கல்களை அகற்ற முடியும். இல்லாவிட்டால் நீர் Spray செய்தே அகற்ற வேண்டியதாக இருக்கும்.
ஆண்கள் வேட்டி அணிய முன்னர்:
அயன் செய்து மடித்து வைத்த வேட்டியை அணிவதாக இருந்தாலும், அல்லது புதிதாக ஒரு வேட்டியை அணிவதாக இருந்தாலும் கூட ஒரு முறை அணிய முதல் அயன் செய்வதன் மூலம் நீண்ட நாட்கள் மடித்து வைத்திருந்ததால் ஏற்பட்ட மடிப்புகளினால் உருவான கோடுகளை சரி செய்ய முடியும்.
வேட்டி என்பது தைக்காத ஆடையாகும். ஆகவே வேட்டியின் முனைகளில் சில வேளைகளில் நூல் விடுபடலாம் அல்லது கழறலாம். அவ்வாறு கழறும் போது அந்தப் பகுதிகளை நெருப்பில்(மெழுகுவர்த்தியைப் பாவித்து) லேசாக சுடுவதன்(பொசுக்குதல்) மூலம் அது மேலும் கழறுவதைத் தவிர்க்கலாம்.
வேட்டியின் ஏதாவது ஒரு பக்கத்தில் நூல் விடுபடுவது போல இருந்தால் அந்தப் பக்கத்தை டெய்லரிடம் கொடுத்து மடித்துத் தைத்துக் கொள்வதன் மூலம் வேட்டியை அதிக காலம் பாவிக்கலாம்.
அணிந்த, வியர்வையில் ஊறிய வேட்டிகளை உடனுக்குடன் துவைத்துக் காயப்போடுவதன் மூலம் வேட்டியில் பங்கசு/கரும்புள்ளி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
பந்தியில் உட்கார்ந்து சாப்பிடும் போது உங்கள் மடியில் ஒரு துண்டினைப் போட்டு விட்டு சாப்பிடுவதன் மூலம் வேட்டியில் உணவு சிந்தி கறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
கீழே உட்காரும் முன்னர், அந்த இடத்தில் Kerchief(கைக்குட்டை) விரித்து அதன் மேல் உட்காருவதன் மூலம் வேட்டியில் அழுக்குப் படிவதைத் தவிர்க்கலாம்.
வேட்டி அணியும் போது செருப்பு அணிவதற்குப் பதில் Sandals அல்லது Shoes அணிவதன் மூலம் உங்கள் தோற்றத்தை மெருகேற்றலாம்.
ஆண்கள் வேட்டி அணியும் போது குர்தா, ஜிப்பா போன்ற நீளமான சட்டை அணிவது நல்லது.
ஆண்கள் வேட்டி கட்டியிருக்கும் போது கட்டாயம் சட்டை அணிய வேண்டும் என்றில்லை. உங்கள் மார்பை மறைக்க வேட்டியின் சால்வையைப் போர்வையாகக் கூட அணியலாம்.
நீங்கள் அணியும் சட்டையின் நிறத்தில் அல்லது அதற்கு Matching ஆக வேட்டியின் Border இருக்கும் வகையில் வேட்டியைத் தெரிவு செய்யவும்.
வேட்டியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டுவது எப்படி?
Motor Bike, Cycle போன்ற வண்டி ஓட்டும் போது வேட்டியை/லுங்கியை/சாரத்தை முழங்கால்களுக்கு மேல் மடித்து, தொடைகளுக்கு நடுவே கட்டுவர். இதன் மூலம் வண்டியில் இருக்கும் போதும் வண்டியை விட்டு இறங்கும் போதும்/ஏறும் போதும் அந்தரங்கம் வெளித்தெரியாது.
வேட்டியின் கரையையும் கரையின் அளவையும் வைத்து வேட்டிகள் பெரும்பாலும் வகைப்படுத்தப்படுகின்றன. பருத்தி வேட்டியில் பட்டுக் கரை வைத்த வேட்டிகளும் உள்ளன. வேட்டியின் கரையின் அளவு(அகலம்) பெரிதாக இருந்தால், அவற்றை Highlight செய்யும் வகையில் வேட்டி அணிவது சிறந்தது.
உதாரணமாக வேட்டியின் இடுப்புப்பக்க கரையை(Border) இடுப்பில் ஒரு பட்டி போல அமைக்க முடியும்.
வேட்டியின் இடுப்புப் பக்கக் கரையை எப்படி ஒரு பட்டி போல அமையும் வண்ணம் வேட்டி கட்டுவது?
அதற்கு, வேட்டி அணிய முதல் வேட்டியின் இடுப்புப் பக்கத்தில் 3 Inch ற்கு வெளிப்பக்கமாக மடிப்பை உருவாக்கி வேட்டியை அணிய வேண்டும் பின்னர், Long Sleeve Shirt இன் கையை மடிப்பது போல மேலிருந்து கீழ் நோக்கி இடுப்புப் பகுதியில் ஒரு மடிப்பு மடித்த பின்னர், ஏற்கனவே மடித்து விட்டிருக்கும் வேட்டியின் இடுப்புக் கரையை மேல் நோக்கி நிமிர்த்தி விடுவதன் மூலம் இடுப்புக் பகுதியில் வேட்டியின் கரையை வைத்து ஒரு இடுப்புப் பட்டி போன்ற தோற்றத்தை உருவாக்கலாம்.
வட இந்திய ஆண்களும் கேரள ஆண்களும் அகலம் கூடிய கரையுள்ள வேட்டி கட்டும் போது அநேகமாக வேட்டியின் கரையை Highlight செய்வார்கள்.
பருத்தி, மற்றும் பட்டு துணியின் கலப்பில்(Silk and Cotton Blend Veshti) உருவான வேட்டிகள் தான் நாம் வாங்கும் அநேகமான வேட்டிகளாகும்.
வெள்ளை வேட்டி கட்டியிருக்கும் போது வேற நிற சால்வைகளையும் இடுப்பில் கட்டலாம்.
வேட்டியை முழங்கால்களுக்கு மேல் நீண்ட நேரம் மடித்துக் கட்டியிருக்க வேண்டிய தேவையிருந்தால், சில ஆண்கள் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது தொடைகளுக்கு நடுவே சொருகுவதற்குப் பதில், முடிச்சுப் போட்டுக் கட்டுவர். இதன் மூலம் நீண்ட நேரம் அவிழாது அப்படியே வைத்திருக்கலாம். இது லுங்கிக்கும் பொருந்தும்.
சில ஆண்கள் ஜட்டி அணிவதற்குப் பதிலாக கோவணம்/லங்கோட் அணிந்தும் வேட்டி கட்டுவர். சில மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தைத்த ஆடைகள் அணியாதவர்கள் இவ்வாறு கோவணம்/லங்கோட் அணிந்தும் வேட்டி கட்டுவர்.
நீங்கள் வேட்டி அணிந்திருக்கும் போது உங்கள் நண்பர்கள், நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி(நிறம்) பின்பக்கம் வேட்டியினூடாக வெளித்தெரிவதாக சொன்னால், வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொள்வதன் மூலம் தற்காலிகமாக மறைக்கலாம்.
பனியன் அணிந்திருந்தால் பனியனை(நீளமான பனியனை) ஜட்டியின் மேல், ஜட்டியை மறைக்கும் வகையில் அணிந்து வேட்டி அணிவதன் மூலம் வேட்டியினூடாக உங்கள் ஜட்டி வெளித்தெரிவதைக் குறைக்கலாம்.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பெரியவர்கள் முன்னிலையில் நிற்பது மரியாதை குறைவான செயலாக கருதப்படுகிறது. ஆகவே முடிந்தால், ஒதுக்குப் புறமான இடத்திற்குச் சென்று அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டி விடவும் அல்லது வேறு ஜட்டி அணியவும்.
ஜட்டியின் Waistband மீது அல்லது அதற்குக் கீழ் வேட்டியின் கட்டு இருக்காத வகையில் வேட்டியினை அணிந்தால், தேவை ஏற்படும் போது வேட்டியினை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு வேட்டிக்குள் கையை விட்டு ஜட்டியை மாத்திரம் கழட்டலாம்.
அதே போல வேட்டியின் சால்வையை இடுப்பில் ஒரு துண்டைப் போல கட்டிக் கூட மறைக்கலாம்.
ஜட்டி அணியாது வேட்டி கட்டிக் கொண்டு பொது இடங்களில் சுற்றுவதைத் தவிர்க்கவும். ஜீன்ஸைப் போல புடைத்தெழுந்த ஆண்குறியை வேட்டி மறைக்காது. அப்பட்டமாக கூடாரம் போட்டு வெளிக்காட்டி விடும். வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுவது போல பாசாங்கு செய்து கொண்டு ஆண்குறியை சாந்தப்படுத்த முயற்சிக்கலாம். இல்லாவிட்டால், எங்கேயாவது சிறிது நேரம் உட்கார்ந்து இருக்கலாம். அதே நேரம் உள்ளே ஜட்டி போட்டாமல் வேட்டி கட்டிக் கொண்டு வெளிச்சமாக இடங்களில், ஒளிதரக் கூடிய பொருட்களின் முன்னால் நிற்க வேண்டாம். ஒளி வேட்டியை ஊடுருவி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விட அதிக வாய்ப்பு உள்ளது. நான்கு முழ வேட்டியை ஜட்டி அணியாது கட்டினால் நடக்கும் போது கால்களுக்கு நடுவே உங்கள் ஆண்குறி ஆடுவதை அவதானிக்க முடியும். அதே நேரம் வேட்டி காற்றில் பறக்கும் போது உங்கள் மானமும் சேர்ந்தே காற்றில் பறக்கும்.
வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது எந்தளவுக்கு தொடை வெளித் தெரிகிறது என்பதையும் அவதானிக்க மறக்க வேண்டாம்.
என்னதான் வயதுக்கு வந்த ஆண்கள், தங்களின் கவர்ச்சியை அதிகரிக்க, மயிர் படர்ந்த தங்களின் தொடைகள் வெளித்தெரியும் வகையில் வேட்டியை அல்லது லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துத் தூக்கிக் கட்டினாலும், எல்லாரும் அதனை பார்க்கும் வகையில் பொது இடங்களில் அவ்வாறு திரிவது சபை நாகரீகம் அற்ற செயலாகும்.
சில ஆண்கள் வேட்டி, லுங்கி/சாரம் கட்டியிருக்கும் போது உட்காரும் போது வேட்டியை/லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு, வேட்டியை/லுங்கியை மேலே தூக்கி ஜட்டி நிலத்தில் படும் வகையில் வேட்டியை/லுங்கியை கால்களுக்கு நடுவே விட்டுக் கொண்டு இருப்பர். இவ்வாறு உட்காரும் போது உட்காரும் நிலத்தில் இருக்கும் அழுக்கு வேட்டியில்/லுங்கியில் படாது.
வேட்டி, மற்றும் லுங்கி/சாரம் அணிந்து ஆண்கள் எப்படி கீழே குந்துவது? வேட்டி கட்டிக் கொண்டு கீழே உட்காருவது எப்படி?
வேட்டியின் முனைகளைக் கையில் பிடித்துக் கொண்டு கெத்தாக நடப்பது எப்படி?
சில ஆண்கள் தாங்கள் அன்றாடம் பாவிக்கும் வேட்டியின் கரைப்பக்க முனையை மூக்குத் துடைக்க, வாய் துடைக்க, முகம் துடைக்கப் பயன்படுத்துவர். அவ்வாறு பயன்படுத்தும் போது நீங்கள் சற்றுக் கீழே குனிந்து துடையுங்கள். வேட்டியை அதிகம் மேலே தூக்கினால் உங்கள் அந்தரங்கம் வெளித்தெரிய அதிக சந்தர்ப்பம் உல்ளது.
திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குச் செல்லும் போது கையில் அதிக பொருட்களைக் காவிக் கொண்டு செல்ல வேண்டாம். ஒட்டிக்கோ கட்டிக்கோ Velcro வேட்டியில் பாக்கெட் இருந்தாலும் அவற்றினுள் அதிகமானவற்றை அடசுவது அழகாக இருக்காது. சில ஆண்கள் வேட்டி கட்டும் போது Purse போன்றவற்றை வைக்க உள்ளே மிகவும் மெல்லிய சிறிய Shorts அணிவதுண்டு. அதற்காக எல்லா நேரமும் வேட்டிக்குள்ள கையை விட்டுக் கொண்டு நிற்பதும் அழகல்ல. ஒதுக்குப் புறமாகச் சென்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேட்டிக்குள் கையை விட்டு Purse யை எடுக்கலாம். தற்காலத்தில் Purse with Phone Holder விற்னைக்குள்ளன.
அவற்றைப் பயன்படுத்தினால், வேட்டி அணியும் போது உள்ளே Shorts அணிய வேண்டிய அவசியம் இருக்காது. வெறும் ஜட்டி மாத்திரம் அணிந்தால் போதும்.
சில ஆண்கள் வேட்டி அணிந்திருக்கும் போது Purse யை இடுப்பில் சொருகுவதும் உண்டு. ஆனால் இது பாதுகாப்பானது அல்ல.
வேட்டி கட்டும் போது நீளமாக கால் வைத்த Boxer Shorts, Boxer Briefs ஜட்டிகளை விட Briefs, Trunk ஜட்டிகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலம் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டும் போது ஜட்டியின் கால்கள் வெளியே எட்டிப் பார்க்காது.
அரைஞாண்கயிற்றை வேட்டியின் கட்டின் மேல் விட்டு, நீளக் கைச்சட்டையின்(Long Sleeve Shirt) கையை மடித்து விடுவது போல அரைஞாண்கயிற்றை வைத்து, இடுப்புப்பகுதியில் வேட்டியில் கீழ் நோக்கி மடிப்புகளை உருவாக்குவதன் மூலம் வேட்டியின் கட்டை இறுக்கமாக்கலாம்.
தனியாக
Belt அணிய வேண்டிய அவசியமும் இருக்காது. கட்டாயம் அரைஞாண்கயிற்றை மேலே
விட்டுத்தான் இவ்வாறு இடுப்பில் மடிப்பை உருவாக்க வேண்டும் என்றில்லை.
அருணாக்கொடியை மேலே விடாமலும் இவ்வாறு இடுப்பில் மடிப்பை உருவாக்கினால் Belt அணிந்தது போல வேட்டியின் கட்டு இறுக்கமாக இருக்கும்.
லுங்கி/சாரத்தைப் போல ஆண்களால் வேட்டியை மறைவாக(போர்த்திக் கொண்டு) உபயோகித்துக் கூட பொது இடங்களில் வைத்து உடை மாற்றலாம்.
ஆனால் சாரம் போல வேட்டி உங்கள் சுற்றி வர மறைவாக இருக்காது, ஆகையால் யாரும் இல்லாத பக்கம் திரும்பி நிற்பதன் மூலம் காற்றில் வேட்டி விலகினாலும் உங்கள் அந்தரங்கம் வெளித் தெரியாது.
வேட்டியை முழங்கால்களுக்கு மேலே ஸ்டைலாக மடித்துக் கட்டுவது எப்படி?
Keywords: வேட்டி வகைகள், வேட்டி கட்டும் முறை, வேட்டி சட்டை மாடல், வேட்டி கட்டும் முறைகள், வேட்டி சட்டை டிசைன், வேட்டி கட்டி, Veshti Swag, Dhoti Swag, Mundu Swag
Comments
Post a Comment