ஆண்கள் வேட்டியை இடுப்பில் மாத்திரம் அல்ல, இடையிலும்(Hip) கட்டலாம். ஏன்! சில ஆண்கள் வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வயிற்றுக்கு மேல் கூட வேட்டியைக் கட்டுவர்.
வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வேட்டியை உள்பக்கமாக மடித்துக் கட்டவும். வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால், நீங்கள் உயரமான ஆளாக இருந்தால் வேட்டியை இடையில் இறக்கிக் கட்டலாம்.
உயரம் அதிகமான வேட்டியை, எப்படி உள்பக்கமாக மடித்து உயரத்தைக் குறைத்துக் கட்டுவது?
வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால் வேட்டியை இடையில் கட்டும் போது இறுக்கமாகக் கட்ட வேண்டும். அதே நேரம் அரைஞாண்கயிற்றை, வேட்டியின் கட்டை இறுக்க அதன் மேல் விட வேண்டும்.
இடையில் வேட்டி கட்டும் போது Belt அணியக் கடினமாக இருக்கும். இடையில் Belt அணிந்தால் நடக்க, உட்கார கடினமாக இருக்கும்.
ஆகவே இடையில் வேட்டி கட்டும் போது வேட்டியின் கட்டின் மேல் அரைஞாண்கயிற்றை விட்டு Long Sleeve Shirts இன் கையை மடித்து விடுவது போல வேட்டியை இடுப்பில் அரைஞாண்கயிற்றுடன் சேர்த்து கீழ் நோக்கி உருட்டி விடுவது உகந்தது.
இடையில் வேட்டி அணியும் ஆண்கள், வேட்டியுடன் வரும் சால்வையை இடுப்புப் பட்டி போன்று வேட்டியின் கட்டின் மேல் இருக்கும் வகையில் இறுக்கமாகக் கட்டலாம்.
இடையில் வேட்டி கட்டும் ஆண்கள் Low Rise வகை Briefs or any other type Underwear யை தெரிவு செய்து அணிய வேண்டும், இல்லை என்றால் அணிந்திருக்கும் ஜட்டி வெளித்தெரியும்.
ஆண்கள் Low Rise Underwear அணியாமல், Mid Rise Underwear அணிந்து இடையில் வேட்டியை/லுங்கியைக் கட்டினால் ஜட்டியின் Waistband இக்கு மேல் அல்லது ஜட்டியின் Waistband இற்குக் கீழே வேட்டியின் அல்லது லுங்கியின் கட்டு இருக்கும். இதன் காரணமாக ஒரு அவசரத்துக்குக் கூட ஜட்டியை மாத்திரம் கழட்ட முடியாது. வேட்டியை/லுங்கியை முழுமையாகக் கழட்டியே ஜட்டியை கீழே இறக்க வேண்டி இருக்கும்.
வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டியை இடையில் கட்டும் போது பனியன் அணிந்து அதன் மேல் வேட்டி கட்டவும். இல்லாவிட்டல் அந்தரங்க முடி அல்லது ஜட்டியின் Waistband வேட்டிக்கு வெளியே எட்டிப்பார்க்கும்.
அதே நேரம் வேட்டியின் நிறத்தை ஒத்த நிறத்தில் நீளமான பனியனை தெரிவு செய்து அணிவதன் மூலம் நீங்கள் வேட்டியை இடையில் அணிந்திருப்பதை வெளித்தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் அனைத்தும் வேட்டிக்கும் மாத்திரமல்ல, லுங்கி/சாரத்திற்கும் பொருந்தும்.
வேட்டியைப் போலவே லுங்கி/சாரத்தின் கட்டினை உறுதியாக்க அரைஞாண் கயிற்றை லுங்கி/சாரத்தின் கட்டின் மேல் விடுவது உசிதம்.
Nice
ReplyDelete