Skip to main content

Posts

Showing posts with the label How to Wear

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


என்ன நிற ஜட்டி அணிந்து ஆண்கள் Dhoti அணிய வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஜட்டி அணிவது இன்றியமையாதா ஒன்று. அதிலும் குறிப்பாக வேட்டி, லுங்கி அணியும் போது ஆண்கள் ஜட்டி அணிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்தியாவின் வடமாநில ஆண்களைப் போல வேட்டியை Dhoti(தோதி)யாக Pant போல அணிவது தொடர்பாக நமது முந்தைய பதிவுகளில் விளக்கமாக வீடியோக்களுடன் பதிவு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக Dhoti அணியும் போது என்ன நிற ஜட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.  Dhoti அணியும் போது உள்ளே அணியும் ஜட்டியின் நிறத்தைப் பற்றி அதிகம் அவதானம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதற்குக் காரணம் Dhoti அணியும் முறைகளாகும்.  வடமாநிலத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த ஆண்கள் ஒவ்வொரு விதத்தில் Dhoti அணிகிறார்கள். என்ன தான் Dhoti அணிந்திருக்கும் போது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சிலர் Dhoti அணியும் விதத்தை பார்க்கும் போதே உங்களுக்கு இந்த சந்தேகம் வரலாம். இது போன்ற வித்தியாசமான முறைகளில் Dhoti அணிந்த பின்னர் உட்கார்ந்திருக்கும் போது கால்களுக்கு நடுவே உங்கள் ஜட்டி எட்டிப்பார்ர்க்கலாம்!  ஆண்கள் ஏன் வெள்ளை வே...

Gym இல் ஆண்கள் லுங்கி, வேட்டி அணிந்து உடற்பயிற்சி செய்யலாமா?

லுங்கியும், வேட்டியும் நமது பாரம்பரிய ஆடைகளாகும். அதில் இருக்கும் வசதியும், காற்றோட்டமும் வேறு எந்த Western ஆடைகளிலும் கிடைக்காது.  Gym இற்கு மாத்திரம் அல்ல, நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, விளையாடும் போது கூட வேட்டி, லுங்கி அணியலாம். ஆனால் அவ்வாறு வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது உள்ளே ஜட்டி அணிய மறக்க வேண்டாம். இல்லாவிட்டால் ஆண்குறியும் விதைகளும் அங்கும் இங்கும் ஆடி உங்களை அசெளகரியமாக உணர வைக்கும். லுங்கி/சாரம்/வேட்டி அணிந்து உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஆண்கள் முதலில் ஜட்டி அணிந்து அவற்றை அணிய வேண்டும். பின்னர், லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு உங்கள் விருப்பம் போல உடற்பயிற்சி செய்யலாம்.  பொதுவாக வீட்டில் உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் அணிந்திருக்கும் லுங்கி/சாரத்தினுடன் உடற்பயிற்சி செய்வதுண்டு.

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் Velcro வேட்டி கட்டக்கூடாது?

Velcro Veshti என ஓட்டிக் கொள்ளும் வேட்டிகளை அழைப்பர். அது என்ன ஒட்டிக்கோ வேட்டி? இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒரு முறையாவது ஓட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி விளம்பரம் பார்க்காதவன் யாராவது இருப்பானா? வேட்டியின் இடுப்புப் பகுதியில் வரும் கரையில் Velcro எனப்படும் ஒட்டிக் கொள்ளும் பட்டி இருக்கும். இதன் மூலம் வேட்டியை கட்டிக் கொள்வதற்குப் பதிலாக ஒட்டிக் கொள்ளலாம். இடுப்பில் வேட்டி தங்கி நிற்காது என அச்சப்படும் ஆண்கள், வேட்டி அணிந்து பழக்கப்படாத சிறுவர்களுக்கு Velcro Veshti ஒரு சிறந்த தெரிவாகும். சில Velcro Veshti களில் பாக்கெட்டுக்களும் உள்ளன. ஆனால் Velcro Veshti யை வயதுக்கு வந்த ஆண்கள் அணியலாமா? ஆண்கள் ஒட்டிக்கோ கட்டிக்கோ, Velcro வேட்டி கட்டுவது எப்படி?  வயதுக்கு வந்த ஆண்கள், அதாவது இளைஞர்கள் Velcro Veshti அணியும் போது அவர்களின் தன்னம்பிக்கை கேள்விக்குறியாகிறது. ஒரு வேட்டி கூட கட்டத் தெரியாதவன்லாம் ஆம்பளயா? உள்ள ஜட்டி போடல! அதனால அவுந்திடுமோன்னு பயமா இருக்குனாலும் பரவால ஆனால்! ஜட்டி போடும் ஆண்கள் எதுக்கு வெல்குரோ வேஷ்டி கட்டனும்?   இடுப்பு அளவு 26 Inches முதல் 32 Inches அளவுகளில் அட்ஜஸ்ட்...

ஆண்கள் கோவணம் கட்டுவது எப்படி?

கோவணம் என்பது சிறுவர்கள் முதல் வயதுக்கு வந்த ஆண்கள் வரை அணியக்கூடிய Hand Made, Flexible, Adjustable காட்டன் துணியினால் ஆன பாரம்பரிய உள்ளாடை/ஜட்டி(Traditional Underwear) ஆகும். கோவணமானது(Loincloth) கச்சை, கௌபீனம் எனவும் அழைக்கபடுகிறது. இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடை கோவணமாகும். கோவணம் என்பது ஒரு பருத்தித் துணியினால் ஆன மெல்லிய துண்டாகும். கோவணமாக பருத்தி வேட்டியின் சால்வையைப்(துண்டு) பயன்படுத்தலாம்.  ஆண்கள் கோவணம் கட்டும் துண்டு   கோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும். ஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின் விந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும் காலை முதல் இரவு வரை ஜட்டி(பருத்தி துணியில் செய்த ஜட்டி அல்லாத - Different Fabrics - Not 100% Cotton) அணிந்திருக்கும் ஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால் தொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும்.

ஆண்கள் 9 யார்(Yards) வேட்டி கட்டுவது எப்படி?

பூசாரிகள், கோவில் குருக்கள், தமிழ் ஐய்யர்களைப் போல 9 யார்(9 yards Dhoti - 9 X 5) வேட்டி அணிவது எப்படி? இந்த அளவு வேட்டியினை பஞ்சகச்சம்(Panchakacham/Panjakajam/9 yards Dhoti) என அழைப்பர். பஞ்சகச்சம் வேட்டிகளை வெள்ளை நிறத்தில் மாத்திரம் அல்லாது கலரிலும், பட்டுச் சேலை போன்றும் பல்வேறு வேலைப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

வட இந்திய ஆண்களைப் போல வேட்டி கட்டுவது எப்படி?

வட இந்தியர்கள் வேட்டியை தோத்தி(Dhoti) என அழைப்பர். நீளமான வேட்டியை வைத்து Pant போல அணிவர். வேட்டியை ஜீன்ஸ் போல அணியுவதற்குப் பயன்படுத்தும், வேட்டியின் கரைகள் அகலமாக, பட்டு வேலைப்பாடுகளுடன் இருப்பின் அவற்றை அயன் செய்து அணிவதன் மூலம் இலகுவாக Pleats(கவர்ச்சியான மடிப்புகளை) உருவாக்கலாம்.

கேரள ஆண்களைப் போல வித்தியாசமாக வேட்டி கட்டுவது எப்படி?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் அன்றாடம் வேட்டி(முண்டு) அணிவதையே வழக்கமாக வைத்துள்ளனர். தமிழர்கள் வேட்டி அணிவதற்கும் கேரள ஆண்கள் வேட்டி கட்டுவதற்கும் அடிப்படையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. ஆனால் அவர்கள் வேட்டியின் கரையை கையாளும் விதமே அவர்களின் தனித்துவமாக உள்ளது.

எட்டு முழ வேட்டியை நான்கு முழ வேட்டியாக கட்டுவது எப்படி?

எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழ வேட்டியாகவும் தேவை ஏற்பட்டால் கட்டலாம். ஆகவே வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி வாங்கும் போது நான்கு முழ வேட்டி வாங்குவதை விட எட்டு முழ வேட்டி வாங்குவதே சிறந்தது.  

எட்டு முழம் வேட்டி கட்டுவது எப்படி?

ஆண்கள் வேட்டி கட்டுவதில் பல்வேறு முறைகள் உள்ளன. அவற்றில் இந்த முறையில் வேட்டி கட்டுவதன் மூலம் உங்கள் வேட்டியின் கட்டு எப்போதும் அவிழாது என்ற தன்னம்பிக்கையையும் சேர்த்துப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.  இந்த முறையில் எட்டு முழ வேட்டியைக் கட்டும் போது Belt அணிய வேண்டிய அவசியம் இருக்காது.  வேட்டி கட்டியிருக்கும் ஆண்