அங்கவஸ்திரத்துடன்(2.30 Meter) கூடிய ஒன்பது முழம்(9X5 / 4.15 Meter) வேட்டியை பஞ்சகச்சம் வேட்டி(Panchakacham with Angavasthram) என்பர். Angavasthram என்பது டவல்/துண்டு/சால்வை(Shawl/Towel/Thundu/Salvai) எனவும் அறியப்படும். பஞ்சகச்சம் என்பது ஆண்கள் பாரம்பரியமாக அணியும் ஒரு சிறப்பான வேஷ்டி கட்டும் முறையாகும்.
இது ஐந்து மடிப்புகள்(இடுப்பு மற்றும் கால்களுக்கு நடுவே) மடித்துச் செருகப்படுவதால் 'பஞ்சகச்சம்'(ஐந்து கச்சம்) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக கோவில் விசேஷங்கள், திருமணங்கள் மற்றும் மதச் சடங்குகளின் போது இது அணியப்படுகிறது. இதனை வட இந்தியர்கள் தோதி என்பர்.
இருப்பினும் இன்றைய காலத்தில் எல்லா வகை வேட்டிகளையும் Dhoti என அழைப்பதால், இடுப்பைச் சுற்றி அணிந்து, ஐந்து மடிப்புகள் மடித்து இடுப்பிலும், கால்களுக்கூடாகவும் சொருகி, ஒரு தளர்வான பேண்ட் போல அணியும் வேட்டிகளை பஞ்சகச்சம் எனலாம்.
ஆண்கள் பஞ்சகச்சம் அணிவதற்கு குறைந்தது 4.5 மீட்டர், அல்லது அதற்கு அதிகமான நீளத்தை உடைய வேட்டியை பயன்படுத்த வேண்டும்.
இந்த அளவு வேட்டியினை பஞ்சகச்சம்(Panchakacham/Panjakajam/9 Yards Dhoti) என அழைப்பர். பஞ்சகச்சம் வேட்டிகளை வெள்ளை நிறத்தில் மாத்திரம் அல்லாது கலரிலும், பட்டுச் சேலை போன்றும் பல்வேறு வேலைப்பாடுகளுடன் பட்டு வேட்டியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வட இந்திய ஆண்கள் அணியும் தோதி வகை பேண்ட் போன்ற வேட்டிக்கும் பஞ்சகச்சம் வேட்டிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் மடிப்புகளின் எண்ணிக்கையாகும். பஞ்சகச்சம் வேட்டியில் பொதுவாக ஐந்து மடிப்புகள் இருக்கும். ஆனால் தோதி என்று வரும் போது நீங்கல் எத்தனை மடிப்புகள் வைத்தும் இடுப்பில் சொருகி, கால்களுக்கூடாக பின் பக்கம் சொருகிக் கொள்ளலாம்.





Comments
Post a Comment