Skip to main content

Posts

Showing posts with the label Veshti Border

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வேட்டியின் கரை எந்தக் கால்ப்பக்கத்தில் வரவேண்டும்?

குருத்தோலையை கிழித்து தோரணம் கட்டுவதில் இரு வகைகள் உள்ளது போல அதாவது அமங்கள தோரணம்(Inauspicious), மங்களத் தோரணம்(Auspicious), ஆண்கள் வேட்டி கட்டுவதிலும் வேட்டியின் கரை சார்ந்து இரு முறைகள் இருந்தன. முன்னர் மங்களகரமான நிகழ்வுகளுக்கு, அமங்களகரமான நிகழ்வுகளுக்கு என வேட்டியின் கரையை வலது/இடது கால்பக்கங்களில் அமையுமாறு நிகழ்வுக்கு ஏற்றால் போல மாற்றி மாற்றி கட்டி வந்தனர். ஆனால் அது இப்போ மருவி விட்டது. இப்போது யாரும் நிகழ்வு சார்ந்து வேட்டியின் கரை வலது/இடது காலில் அமையும் வகையில் கட்டுவதில்லை. நீங்கள் வேட்டி கட்டும் போது உங்கள் வேட்டியின் கரை எந்தக் காலின் மேலும் படர விடலாம். சிலர் கால்களுக்கு நடுவிலும் வேட்டியின் கரையை படர விடுவதுண்டு. ஆனால், வேட்டியின் கரை வலது காலின் மேல் படர விடும் வகையில் வேட்டியை அணிவது பொதுவான வழக்கம்.  வேட்டியின் கரை எந்தக் கால் பக்கத்தில் வரவேண்டும்?