நீங்கள் வேட்டி கட்டும் போது உங்கள் வேட்டியின் கரை எந்தக் காலின் மேலும் படர விடலாம். சிலர் கால்களுக்கு நடுவிலும் வேட்டியின் கரையை படர விடுவதுண்டு. ஆனால், வேட்டியின் கரை வலது காலின் மேல் படர விடும் வகையில் வேட்டியை அணிவது வழக்கம்.
வேட்டியின் கரை எந்தக் கால் பக்கத்தில் வரவேண்டும்?
சில ஆண்கள் அவர்கள் நடப்பதற்கு வசதியாக இருக்க வலது/இடது காலின் மேல் படர விடும் வகையில் அவர்களின் செளகரியத்திற்கு ஏற்பட வேட்டியின் கரையை கையாள்வர்.
சில ஆண்களுக்கு நான்கு முழ வேட்டி பத்தாது போகலாம். அதன் காரணமாகவும் வேட்டியின் கரை கால்களுக்கு நடுவில் அமையும் வண்ணம் அணிவர். நான்கு முழ வேட்டி உங்களுக்கு பத்தாவிடின், எட்டு முழ வேட்டியை தெரிவு செய்து அணிவது சிறந்தது.
வேட்டியின் கரை நேராக இருக்க வேண்டும்
வேட்டியின் கரைப் பகுதியை வலது/இடது காலின் மேலே நேராகப் படர விட, அதன் இடுப்புப் பகுதி முனையை கயிறு போல உருட்டி, பின் பக்கம் இடுப்பில் சொருகலாம்.
வேட்டியின் கரை பல்வேறு அகலங்களில் உள்ளது. வேட்டியின் கரையை வைத்தே சிலர் வேட்டியை வகைப்படுத்துவதுண்டு.
இடது காலில் வேட்டியின் கரை(Veshti Border) இருக்கும் வகையில் வேட்டி அணிந்திருக்கும் ஆண்
வலது காலில் வேட்டியின் கரை(Veshti Border) இருக்கும் வகையில் வேட்டி அணிந்திருக்கும் ஆண்
When wearing Veshti, Strip Should be on the Right Side:
கேரள ஆண்கள் வேட்டி கட்டும் போது அகலம் கூடிய கரையுள்ள வேட்டியைத் தெரிவு செய்து, அது Highlight ஆகும் வகையில் அணிவர்.
நீங்கள் கடைசியாக வேட்டி உடுக்கும் போது எந்தப் பக்கம் வேட்டியின் கரையை படர விட்டீர்கள்?
ஆண்கள் வேட்டி கட்டும் போது வேட்டியின் கரை எந்தக் கால் பக்கம் இருக்க வேண்டும்? ஏன் அந்தக் கால்பக்கம் Veshti Border இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? உங்கள் கருத்து என்ன?
நிறக்கரை வைத்த காட்டன் வேட்டிகள்
பட்டுக்கரை வைத்த காட்டன் வேட்டிகள்
Veshti without Veshti Border - கரை வேலைப்பாடுகள் இல்லாத Plain Design வேஷ்டிகளும் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.
உங்களுக்குத் தெரியுமா? ஆண்களின் இடுப்பு அளவானது, வேட்டியின் கரை எவ்விடத்தில் வர வேண்டும் என்பதை முடிவு செய்வதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். எல்லா ஆண்களாலும் சரியாக வலது காலின் மேலோ அல்லது இடது காலின் மேலோ வேட்டியின் கரை வரும் வகையில் வேட்டியை அணிய முடியாது. அதற்குக் காரணம் அவர்களின் இடுப்பு அளவாகும்.
புது வரவு: தற்காலத்தில் வேட்டியின் கரைகளில் அதிகம் வேலைப்பாடுகள்(Art/Designs) நிறைந்த வேட்டிகளும் சந்தையில் விற்பனையாகிறது. ஆனால் எல்லா ஆண்களுக்கு அது சிறப்பான தோற்றத்தைக் கொடுக்காது.
அதே நேரம் எல்லா Designs களும் ஆண்களின் தோற்றத்திற்கு எடுப்பாக இருக்காது. கோடு போன்ற வேட்டிக் கரைகள் தான் ஆண்களுக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
குறிப்பு: வயது வந்த ஆண்கள் நான்கு முழம் வேட்டி கட்டுவதற்குப் பதிலாக, எட்டு முழம் வேட்டி அணிவதன் மூலம் வலது/இடது காலின் மேல் வேட்டியின் கரை வரும் வகையில் வேட்டியை அணிய முடியும்.
Tips: நீங்கள் அணிந்திருக்கும் வேட்டியின் கரைப் பகுதிகளில் நூல் விடுபட்டால் ஒரு டெய்லரின் உதவியுடன் கரைப் பக்கங்களை 1 Inch அளவில் மடித்துத் தைக்கலாம், அல்லது மெழுகுதிரி/விளக்கைப் பாவித்து அவ்வாறு விடுபடும் நூல்களை பொசுக்கலாம். ஆனால் அவ்வாறு பொசுக்கும் போது அவதானமாக இருக்காவிட்டால் வேட்டி பழுதடைந்து விடும்.
வேட்டியின் கரை Designs
ஆண்கள் வேட்டி அணிந்த பின்னர், வேட்டியின் இடுப்புப் பகுதியில், எல்லாப் பக்கமும் கீழ் நோக்கி மடித்து, உருட்டி விடுவதன் மூலம் வேட்டியின் கட்டை இறுக்கமாக்கலாம்.
வேட்டியை(Dhoti/Veshti/Mundu) முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டியிருக்கும் கவர்ச்சியான ஆண்கள்.
Comments
Post a Comment