லுங்கியும், வேட்டியும் நமது பாரம்பரிய ஆடைகளாகும். அதில் இருக்கும் வசதியும், காற்றோட்டமும் வேறு எந்த Western ஆடைகளிலும் கிடைக்காது.
Gym இற்கு மாத்திரம் அல்ல, நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, விளையாடும் போது கூட வேட்டி, லுங்கி அணியலாம்.
ஆனால் அவ்வாறு வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது உள்ளே ஜட்டி அணிய மறக்க வேண்டாம். இல்லாவிட்டால் ஆண்குறியும் விதைகளும் அங்கும் இங்கும் ஆடி உங்களை அசெளகரியமாக உணர வைக்கும்.
லுங்கி/சாரம்/வேட்டி அணிந்து உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஆண்கள் முதலில் ஜட்டி அணிந்து அவற்றை அணிய வேண்டும். பின்னர், லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு உங்கள் விருப்பம் போல உடற்பயிற்சி செய்யலாம்.
பொதுவாக வீட்டில் உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் அணிந்திருக்கும் லுங்கி/சாரத்தினுடன் உடற்பயிற்சி செய்வதுண்டு.
கால்களை அகட்டி, சுதந்திரமாக உடற்பயிற்சி செய்ய Gym Clothes போல லுங்கி/வேட்டியும் ஆண்களுக்கு உதவியாக இருக்கும்.
லுங்கி/சாரம் அணிந்து உடற்பயிற்சி செய்யும் ஆண்:
அதே நேரம் ஜட்டி அணியாவிட்டால், உடற்பயிற்சி செய்யும் போது வேட்டி, லுங்கி விலகி அந்தரங்கம் வெளித்தெரியும்.
ஆண்கள் லுங்கி அல்லது வேட்டி அணிந்து உடற்பயிற்சி செய்யும் போது Briefs ஜட்டி அல்லது Jockstrap ஜட்டியை செய்யும் உடற்பயிற்சிக்கு ஏற்ப தெரிவு செய்து அணியலாம்.
நமது முன்னோர்கள் அந்தக் காலத்தில் வேட்டி அணிந்தே உடற்பயிற்சிகளிலும், போர்ப்பயிற்சிகளிலும், ஏன் போர்களிலும் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு வேட்டி அணியும் போது வேட்டியை சாதாரணமாக அணியாமல் கால்களைத் தூக்கும் போதும், அகட்டும் போதும், பாயும் போதும் வேட்டி விலகாத வகையில் அதற்கென பிரத்தியேகமான முறையில் ஒரு Shorts போன்று வேட்டியை கட்டினர்.
தற்காலத்தில் கலரி போர் பயிற்சியில் ஈடுபடும் ஆண்களும், சிலம்பம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடும் ஆண்களும் அத்தகைய முறைகளிலேயே வேட்டி அணிகின்றனர்.
குஸ்தி பயிற்சியில் ஈடுபடும் போது வேட்டி அணிவதற்குப் பதிலாக லங்கோட் அணிவர்.
சிலம்பம் கற்றுக் கொள்ளும் போது ஆண்கள் வேட்டி கட்டும் முறை:
குத்துவரிசை(Kuttu varisai) பயிற்சிக்கும், சிலம்பம் பயிற்சிக்கும் ஆண்கள் எவ்வாறு வேட்டி கட்டுவர்.
Comments
Post a Comment