Velcro Veshti என ஓட்டிக் கொள்ளும் வேட்டிகளை அழைப்பர். அது என்ன ஒட்டிக்கோ வேட்டி? இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒரு முறையாவது ஓட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி விளம்பரம் பார்க்காதவன் யாராவது இருப்பானா? வேட்டியின் இடுப்புப் பகுதியில் வரும் கரையில் Velcro எனப்படும் ஒட்டிக் கொள்ளும் பட்டி இருக்கும். இதன் மூலம் வேட்டியை கட்டிக் கொள்வதற்குப் பதிலாக ஒட்டிக் கொள்ளலாம்.
இடுப்பில் வேட்டி தங்கி நிற்காது என அச்சப்படும் ஆண்கள், வேட்டி அணிந்து பழக்கப்படாத சிறுவர்களுக்கு Velcro Veshti ஒரு சிறந்த தெரிவாகும். சில Velcro Veshti களில் பாக்கெட்டுக்களும் உள்ளன. ஆனால் Velcro Veshti யை வயதுக்கு வந்த ஆண்கள் அணியலாமா?
ஆண்கள் ஒட்டிக்கோ கட்டிக்கோ, Velcro வேட்டி கட்டுவது எப்படி?
வயதுக்கு வந்த ஆண்கள், அதாவது இளைஞர்கள் Velcro Veshti அணியும் போது அவர்களின் தன்னம்பிக்கை கேள்விக்குறியாகிறது. ஒரு வேட்டி கூட கட்டத் தெரியாதவன்லாம் ஆம்பளயா? உள்ள ஜட்டி போடல! அதனால அவுந்திடுமோன்னு பயமா இருக்குனாலும் பரவால ஆனால்! ஜட்டி போடும் ஆண்கள் எதுக்கு வெல்குரோ வேஷ்டி கட்டனும்?
"ஓட்டிக்கொள்ளும்" ஓட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகளை ஏன் வயதுக்கு வந்த ஆண்கள் அணியக் கூடாது?
Velcro Veshti கள் வேட்டி அணிந்த உணர்வையே ஆண்களுக்குக் கொடுக்காது. ஏதோ மூட்டிய லுங்கி(சாரம்) அணிந்தது போல இருக்கும். இந்து மத சம்பிரதாயங்கள், நம்பிக்கைகளின் படி ஆண்கள் மூட்டிய வஸ்திரத்தை கோயில், திருமணம் போன்றவற்றிற்கு அணியக் கூடாது.
சாதாரண வேட்டிகளை பல்வேறு வித்தியாசமான முறைகளில் அணியலாம். உதாரணமாக: தமிழர்கள் முறை, கேரள முறை, வட இந்திய முறை. எமது இணையத்தளத்தில் இவை பற்றிய Video Guides விளக்கமாக உள்ளன.
ஆனால், Velcro Veshti களை ஒரே மாதிரியே தான் அணிய முடியும். அதே டெய்லர்! அதே வாடகை!
நீங்கள் நினைத்த மாதிரி, நினைத்த இடத்தில் Velcro Veshti இன் கரையை வைக்க முடியாது. அதே நேரம் வேட்டியை ஒரு பக்கம் மாத்திரமே அணிய முடியும். ஏதாவது அழுக்குப் படிந்தால் வேட்டியை மறுபக்கம் மாற்றி அணிய முடியாது.
வெல்குரோ பாக்கெட் வேட்டிகளில் பாக்கெட் இருப்பது என்னவோ வசதி தான்! ஆனால் அதற்காக ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி எதுக்கு அணியனும்? வேட்டியின் பாக்கெட்டி பொருட்களை அடசிக் கொண்டு திரிவது அழகாகவா இருக்கும்?
வேட்டி கட்டத் தெரியாத ஆண்களுக்கு இருக்கும் பய உணர்வை காசாக்கும் உத்தி தான் இந்த Velcro Veshti! ஜட்டி போட்டிருக்கும் ஆண்கள் ஆடை அவிழ்வதைப் பற்றி அச்சப்படக் கூடாது! உங்கள் மானத்தைக் காப்பாற்றத்தான் ஜட்டி இருக்கே!
சாதாரண வேட்டி கட்டிய பின்னர், இடுப்புப் பகுதியில் Long Sleeve Shirt இன் கைகளை மடித்து விடுவது போல கீழ் நோக்கி மடிப்பதன் மூலம் வேட்டியின் கட்டை உறுதியாக்கலாம். எவ்வளவு இழுத்தாலும் அது கழறாது.
Velcro Veshti கட்ட முதல் ஒரு முறை சாதாரண வேட்டியைக் கட்டிப் பழகுங்கள். வேட்டியை முறையாகக் கட்டத்தெரியாவிட்டால், வேட்டி அவிழத்தான் செய்யும்.
நீங்கள் உண்மையான ஆண்மகனாக தோற்றமளிக்க விரும்பினால் Velcro Veshti ஆணிவதை நிறுத்துங்கள். இடுப்பில் அரைஞாண்கயிற்றைக் கட்டுங்கள். எமது இணையத்தளத்தில் உள்ள வேட்டி கட்டுவது தொடர்பான அனைத்து தகவல்கள், வீடியோக்களையும் பாருங்கள்.
தைரியமாக நம்பிக்கையுடன் "ஜட்டி அணிந்து" இடுப்பில் வேட்டியைக் கட்டுங்கள்! வேட்டியை ஒட்டாதீர்கள்.
Velcro Veshti இடுப்பில் வேட்டியை அவிழாது வைத்திருக்கத் தெரியாதா குழந்தைகளுக்கு மட்டும்!
நீங்க வேட்டி கட்டியிருக்கும் போது உங்களை அறியாமல் வேட்டி அவிழாது! அதே போல எமது இணையத்தளத்தில் எப்படி அவிழாத வகையில் எட்டு முழ வேட்டி கட்டுவது எனும் வீடியோ உள்ளது. அதைப் பின்பற்றி வேட்டி கட்டுவதன் மூலம் எந்தவொரு அச்சமும் இல்லாமல் வேட்டியுடன் முழு நாளும் நிற்கலாம்.
Comments
Post a Comment