வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் ஜட்டி அணிவது இன்றியமையாதா ஒன்று. அதிலும் குறிப்பாக வேட்டி, லுங்கி அணியும் போது ஆண்கள் ஜட்டி அணிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இந்தியாவின் வடமாநில ஆண்களைப் போல வேட்டியை Dhoti(தோதி)யாக Pant போல அணிவது தொடர்பாக நமது முந்தைய பதிவுகளில் விளக்கமாக வீடியோக்களுடன் பதிவு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக Dhoti அணியும் போது என்ன நிற ஜட்டியைத் தெரிவு செய்து அணிய வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
Dhoti அணியும் போது உள்ளே அணியும் ஜட்டியின் நிறத்தைப் பற்றி அதிகம் அவதானம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதற்குக் காரணம் Dhoti அணியும் முறைகளாகும்.
வடமாநிலத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த ஆண்கள் ஒவ்வொரு விதத்தில் Dhoti அணிகிறார்கள். என்ன தான் Dhoti அணிந்திருக்கும் போது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சிலர் Dhoti அணியும் விதத்தை பார்க்கும் போதே உங்களுக்கு இந்த சந்தேகம் வரலாம்.
இது போன்ற வித்தியாசமான முறைகளில் Dhoti அணிந்த பின்னர் உட்கார்ந்திருக்கும் போது கால்களுக்கு நடுவே உங்கள் ஜட்டி எட்டிப்பார்ர்க்கலாம்!
அவ்வாறு எட்டிப் பார்க்கும் ஜட்டி, வேட்டியின் நிறத்தில் அல்லாது வேறு நிறத்தில் இருந்தால் அது மற்றவர்களால் இலகுவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
அதன் காரணமாகவே வேட்டியை Dhoti யாக அணியும் போது மட்டும், Dhoti அணியும் வேட்டியின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியோ அல்லது கோவணமோ அணிவது சிறந்தது.
வெள்ளை நிற வேட்டியைப் பயன்படுத்தி Dhoti கட்டுவது எப்படி?
வெள்ளை நிற வேட்டி அணியும் போது வெள்ளை நிற ஜட்டி அணிந்தால் அது வேட்டியை ஊருவி வெளித்தெரியும் பிரச்சனை இருந்தாலும் வெள்ளை நிற வேட்டியில் Dhoti அணியும் போது வெள்ளை நிற ஜட்டி அணிவதே சிறந்தது.
வேட்டி கட்டும் போது ஆண்கள் அவசியம் ஜட்டி அணிய வேண்டுமா?
ஆண்கள் வேட்டி/Dhoti/Mundu கட்டும் போது அவசியம் ஜட்டி அணிய வேண்டும் என்றில்லை. வேட்டி அணிந்து பழக்கப்பட்டவர்களுக்கு எதை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும்.
வயது வந்த ஆண்கள் ஜட்டி அணியாது, Dhoti(தோதி) அணிந்து குளிக்கும் போது, வெள்ளை வேட்டி ஈரமானாகி உங்கள் உடலுடன் ஓட்டி, உங்கள் உடலை வெளிக்காட்டினாலும், உங்கள் அந்தரங்கப் பகுதி மறைக்கப்படும்.
ஆனால் முதல் முறை வேட்டி கட்டும் ஆண்கள், அவசியம் வேட்டி கட்டும் போது அதனுள்ளே ஜட்டி அணிய வேண்டும்.
ஆண்கள் வேட்டி அணியும் போது ஏன் ஜட்டி அணிய வேண்டும்? என்ன வகை ஜட்டி அணிய வேண்டும்? போன்ற "வேட்டி" தொடர்பான பல்வேறு விடையங்களை நமது முந்தைய பதிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Comments
Post a Comment