கோவணம் என்பது சிறுவர்கள் முதல் வயதுக்கு வந்த ஆண்கள் வரை அணியக்கூடிய Hand Made, Flexible, Adjustable காட்டன் துணியினால் ஆன பாரம்பரிய உள்ளாடை/ஜட்டி(Traditional Underwear) ஆகும். கோவணமானது(Loincloth) கச்சை, கௌபீனம் எனவும் அழைக்கபடுகிறது. இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடை கோவணமாகும்.
கோவணம் என்பது ஒரு பருத்தித் துணியினால் ஆன மெல்லிய துண்டாகும். கோவணமாக பருத்தி வேட்டியின் சால்வையைப்(துண்டு) பயன்படுத்தலாம்.
பழைய வேட்டிகளையும் உங்களுக்கு தேவையான அளவுக்கு கிழித்துக் கோவணமாக கட்டலாம். கோவணத்தை வித்தியாசமான முறைகளில் வடிவங்களில் அணியலாம். ஆனால் அதனை அணிவதற்கு அரைஞாண்கயிறு அவசியம் வேண்டும்.
ஒரு மெல்லிய பருத்தித் துணியை (தோளில் போடும், குளிக்கும் போது இடுப்பில் கட்டும் துண்டு போல) செவ்வக வடிவில் மடித்து, முன் பக்கம் மேலதிக துண்டு தொங்கும் வகையில், அரைஞாண்கயிற்றினூடாக எடுத்து ஆண்குறியையும் விதைகளையும் உடலுடன் சேர்த்து இருக்கும் வகையில் அதனுள் வைத்த வண்ணம் ஒரு கயிறு போல திருகிக் கொண்டு குண்டியின் பிளவுகளுக்கூடாக பின்பக்கம் கொண்டு சென்று பின்புறம் உள்ள அரைஞாண்கயிற்றில் சுற்றி கோவணம் அணியலாம்.
சிலர் செவ்வக வடிவில் மடிக்காமல் மயில் தோகை போல விரித்துக் கூட கோவணம் அணிவர். அது பார்ப்பதற்கு Brief ஜட்டி போல தென்படும். ஆனால் அவ்வாறு விரித்து அணிவதாக இருந்தால் துண்டின் நீளம்(Length) குறைவாக இருக்க வேண்டும்.
ஆண்குறியையும் விதைகளை கோவணத்தினுள் வைத்து பின்புறம் கொண்டு செல்லும் முனையை கயிறு போல திருகாமல் அணிந்தால் ஆண்குறி, விதைகள் கோவணத்தினுள் பொட்டலமாக்கப்படாது. அதே நேரம் ஆண்குறி, விதைகளுக்குத் தேவையான Support கிடைக்காது.
சில ஆண்கள் முன்புறமும் பின் புறமும் சமமாக இருக்கும் வகையில் செவ்வக வடிவிலேயே துண்டையை கோவணமாக அணிவர். அது மறைப்பு போல இருக்கும்.
கோவணத்தை ஒத்த பாரம்பரிய உள்ளாடை தான் லங்கோட். இது வட இந்திய ஆண்களால் பெரிது குஸ்தி, கபடி விளையாட்டுக்களில் ஈடுபடும் போது தற்காலத்திலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
Langot இல் இடுப்பில் கட்டுவதற்கு கயிறு போன்ற அமைப்பு இருப்பதால், லங்கோட் அணிவதற்கு அரைஞாண்கயிறு அவசியம் இல்லை. லங்கோட் கிட்டத்தட்ட Jockstrap ஜட்டி போல தொழிற்படும்.
Comments
Post a Comment