Thermal Wear அணிவதன் மூலம் உடலில் இருக்கும் வெப்பத்தை வெளியே கடத்தப்படுவதைத் தவிர்க்க முடியும். குளிர்/பனிக்காலத்தில்(Winter Season) இதனை அணிவதன் மூலம் உடலின் வெப்பத்தை ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
Thermal Wear என்பது கிட்டத்தட்ட ஒரு உள்ளாடை போன்று இருப்பதால் அதனை Long Underwear அல்லது Thermal Underwear எனவும் அழைப்பதுண்டு.
சில Thermal Wear மேலாடை பாதி, கீழாடை பாதி என Two Piece Ribbed Long Johns Thermal Underwear(Long legs and Long sleeves) ஆக இருக்கும். சில கழுத்தில் இருந்து கணுக்கால் வரை ஒரே ஆடையாக நடுவில் Buttons வைத்தும்(வைக்காமலும் கூட) இருக்கும்.
How to wear Thermal Wear?
பல்வேறு நிறங்களில் தற்போது Thermal Wear சந்தையில் விற்கப்படுகிறது, நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆடையின்(Loose Fitted Clothes such as Shirts, Pants) அளவை விட ஒரு அளவு குறைவான(one size smaller) அளவில் Thermal Wear யை வாங்க வேண்டும்.
எந்தளவுக்கு உடலுடன் ஒட்டியது போல் உள்ளதோ அந்தளவுக்கு உடலின் வெப்ப நிலையை Thermal Wear நம்முள் தக்க வைத்துக்கொள்ள உதவும்.
Thermal Wear ஆனது Sleepwear, Loungewear ஆகவும் கருதப்படுகிறது. அதனால் இதனை மட்டும் அணிந்து கூட உங்களால் இரவு தூங்க முடியும், வீட்டில் இருக்க முடியும். இது கிட்டத்தட்ட நம்ம நாட்டில் இருக்கும் இரவில் தூங்கும் போது லுங்கி அணியும் கலாச்சாரம் போன்றது.
Thermal Wear அணியும் போது ஆண்கள் ஜட்டி அணிய வேண்டுமா?
ஆம். ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறி, விதைகளுக்கு ஜட்டி கொடுக்கும் Support யை இவ்வாறான ஆடைகளால் கொடுக்க முடியாது. அதே நேரம் ஜட்டி அணியாது Thermal Wear அணிந்தால் ஆண்குறி, விதைகளின் விளிம்பு(Outline) வெளித்தெரியும்.
ஜட்டி அணிந்து Thermal Wear அணிவதன் மூலம் உடல் வெப்ப நிலையை மேலும் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
சிலருக்கு Thermal Wear யை மாத்திரம் அணியும் போது எரிச்சல் ஏற்படும். அவ்வாறு Thermal Wear அணியும் போது எரிச்சலாக உணர்பவர்கள் ஜட்டியும், பனியனும் அணிந்து Thermal Wear அணியவும்.
Thermal Wear அணியும் போது உள்ளே ஜட்டி அணிந்தால், ஜட்டி வெட்டு வெளித்தெரிவதைத் தவிர்க்க முடியாது.
சில Thermal Wear/Long Underwear இல் ஆண்குறியை வெளியே எடுப்பதற்கு வசதியாக Open Fly/Buttons கொடுக்கப்பட்டிருக்கும்.
குளிர் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் வேட்டி, லுங்கி, சாரம் போன்றவற்றை அணியும் போது Thermal Wear அணிவதன் மூலம் கடுமையான குளிரில் இருந்து உங்களைப் பாதுவாக்க முடியும்.
சில Long Johns Thermal Underwear கள் Performance Fabric இனால் உடற்பயிற்சி செய்ய வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது. வாங்கும் போது அவற்றைக் கவனித்து வாங்குவது நல்லது.
வெள்ளை நிற Long Johns அணியும் போது உள்ளே ஜட்டி போடா விட்டால், வெளிச்சமான இடங்களில் அல்லது வெளிச்சத்தைக் கொடுக்கக் கூடிய பொருட்களுக்கு முன்னால் நிற்கும் போது ஒளி Long Johns யை ஊடுருவி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும்.
வெள்ளை வேட்டி அணியும் போது சாம்பல் நிற, அல்லது உங்கள் உடலின் நிறத்தை ஒத்த நிறத்தில் Thermal Wear or Long John Thermal Underwear யைத் தெரிவு செய்து அணிவது நல்லது.
Thermal Wear அணிந்து வேட்டி அணியும் போது நான்கு முழ வேட்டியை அணிய வேண்டாம். நடக்கும் போது வேட்டி விலகி Thermal Wear வெளித்தெரிய அதிக சந்தர்ப்பம் உள்ளது. Thermal Wear அணியும் போது எட்டு முழ வேட்டியை எட்டு முழ வேட்டியாக வயதுக்கு வந்த ஆண்கள் அணிவது சிறந்தது.
Thermal Wear இக்கும் Long Johns இக்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒரே தேவைக்காகவே அணியப்படுகின்றன. ஆனால் Long Johns ஆனது பட்டுப்போன்ற துணியில் செய்யப்பட்டிருக்கும். Thermal Wear ஆனது Waffle fabric(தேன் கூடு போல சதுர வடிவில் பின்னப்பட்ட(weaving or knitting) துணி) இனால் செய்யப்பட்டிருக்கும். Thermal Wear எப்போதும் ஒரு ஆடையாகவே இருக்கும். ஆனால் Long Johns மேலாடை, கீழாடை என இரு ஆடைகளாகவும் விற்கப்படுவதுண்டு.
They say "Silk ones" are the long johns whereas the ones made with "waffly" sort of material are thermal underwear.
Comments
Post a Comment