வேட்டி அணிவது ஒரு கலை, அது எல்லா ஆண்களாலும் செய்ய முடியாதுன்னுலாம் காதுல பூ சுத்த வரல. ஆமாங்க வேட்டி அணியிறது ஒன்னும் அவ்வளவு கடினமான விடையம் இல்லை.
வேட்டி எப்படி அணியிறது, அதுவும் கழறாத அளவுக்கு அப்படி இறுக்கமாக இடுப்பில் வேட்டியைக் கட்டுறதுன்னு எல்லாம் எங்களது Blog இல் நிறைய Video Guidance, குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இங்கே அழுத்திப் பார்க்கவும்.
ஒரு வேளை நீங்கள் அவற்றைப் பார்க்காமல், அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களுக்குத் தெரிந்த மாதிரி நேர்த்தியில்லாமல் வேட்டி கட்டினால் எவ்வாறான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆண்கள் நேர்த்தியில்லாமல் வேட்டி அணிந்தால் ஏற்படும் முதல் பிரச்சனை தான், நடக்கும் போது கால் இடறுண்டும். அப்படி இடறுண்டும் போது வேட்டியின் கட்டுக் கூட கழறலாம்.
சில ஆண்கள் தமது வசதிக்காக வேட்டியின் கரை, இடது காலின் மேல் படர்ந்திருக்கும் வகையில் மாற்றியும் வேட்டி கட்டுவதுண்டு. ஆனால் எக்காரணம் கொண்டும் வேட்டியை குளிக்கும் போது இடுப்பில் கட்டும் துண்டு போல கட்டக் கூடாது.
எட்டு முழ வேட்டி கட்டும் போது, அல்லது எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழ வேட்டியாக கட்டும் போது வெளியே இருக்கும் வேட்டியின் பகுதியை மேலே உயர்த்தியும், உள்ளே இருக்கும் வேட்டியின் பகுதியை கீழே இறக்கியும் கட்டியிருந்தால், உள்ளே இருக்கும் வேட்டியின் பகுதி வெளியே எட்டிப் பார்க்கும்.
Note: வேட்டி கட்டும் போது இடது பக்க இடுப்புப் பகுதியில் பிடிக்க வேண்டிய வேட்டியின் முனையை நன்கு தூக்கி பிடிக்க வேண்டும்.
வேட்டி கட்டும் போது இதனை அவதானிக்காவிட்டால் மீண்டும் வேட்டியை அவுத்துக் கட்ட வேண்டி ஏற்படும்.
வேட்டி கட்டும் போது உள்பக்கமாக கொண்டு செல்லும் வேட்டியின் முனையை உயர்த்தி, இடது பக்க இடுப்பில் பிடிக்க வேண்டும். இதன் மூலம் இவ்வாறு உள்பக்கம் இருக்கும் வேட்டியின் பகுதி வெளியே தெரிவதைத் தவிர்க்கலாம்.
வேட்டியை அயன் செய்யாமல், அதாவது சுருக்கங்களுடன் அணிந்தால் பார்ப்பதற்கு அலங்கோலமாக இருக்கும். எக்காரணம் கொண்டும் அணிந்த வேட்டியை துவைத்த பின்னர் கசக்கி எங்கேயாவது அடசி வைக்கக் கூடாது. ஒழுங்காக மடித்து வைக்க வேண்டும். பட்டு வேட்டியாக இருந்தால் அயன் செய்தே வைப்பது சிறந்தது.
Recommended: ஆண்கள் வேட்டியை அயன் செய்வது எப்படி?
ஆண்கள் நேர்த்தியில்லாமல் வேட்டி கட்டினால் எப்போதும் இடுப்பில் இருக்கும் வேட்டியின் கட்டு அவிழ்வது போன்ற ஒரு Tension/உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறான நிலையில் தான் ஆண்கள் வேட்டி கட்டும் போது Belt அணிய வேண்டிய சூழ் நிலை ஏற்படுகிறது.
ஆனால் உண்மையில் வேட்டி கட்டும் போது Belt அணியத்தேவையில்லை. விரும்பினால் அரைஞாண்கயிற்றினை வேட்டியின் கட்டின் மேலே விட்டு கட்டின் இறுக்கத்தை அதிகரிக்கலாம்.
வேட்டியைக் கட்டிய பின்னர் இடுப்பில் இருக்கும் கட்டை Long Sleeve Shirt இன் நீளமாக கைகளை மடித்து விடுவது போல கீழ் நோக்கி உருட்டி மடித்து விடுவதன் மூலம் Belt பயன்படுத்தாமலேயே வேட்டியை இறுக்கமாக அணியலாம்.
அவ்வாறு கட்டிய வேட்டியின் இடுப்புப் பகுதியை உருட்டி மடிக்கும் போது அதன் மேல் Arunakodi(அரைஞாண் கயிறு) யை விட்டு உருட்டுவதன் மூலம் மேலும் வேட்டியின் கட்டை இறுக்க முடியும்.
நான்கு முழ வேட்டியை நேர்த்தியாகக் கட்டா விட்டால், நடக்கும் போது வேட்டி நன்றாக விலகி தொடையைத் தாண்டி அந்தரங்கத்தையும் வெளித்தெரிய வைத்துவிடும்.
Recommended: வேட்டியின் சால்வையின் பயன்பாடு என்ன?
நான்கு முழ வேட்டி கட்டிக் கொண்டு நடக்கும் போது சில ஆண்கள் Style, மற்றும் நடக்க வசதியாக இருக்க, வலது பக்க இடுப்பில் சொருகியிருக்கும் வேட்டியின் கரை வைத்த முனையின் கீழ் பக்க முனையை, இடது கையால் தூக்கிக் கொண்டு நடப்பர். அவ்வாறு தூக்கும் போது அதனை முழங்கால்களுக்கு மேல் அதிகம் தூக்கக் கூடாது.
எட்டு முழ வேட்டியை நேர்த்தியாக கட்டா விட்டால், வெளியே பார்ப்பதற்கு நேர்த்தியாகத் தெரிந்தாலும் உள்பக்கமாக வேட்டி கழன்று அங்காங்கே தொங்கிக் கொண்டு இருக்கும். அதே நேரம் வேட்டியை மடித்துக் கட்டும் போது நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்காது.
வேட்டி கட்டும் போது அதன் உயரத்தை சரிபார்த்து உங்களுக்கு ஏற்றாற் போல நேர்த்தியாகக் கட்டாவிட்டால் வேட்டி நிலத்தில் அரையிண்டும் அல்லது கணுக்காலுக்கு மேல் வேட்டி நிற்கும்.
வேட்டி அணியும் போது பனியன் அணிய விரும்பினால், பனியனை வேட்டிக்குள் விட்டு அணிய வேண்டும். ஜட்டியின் Waistband இன் மேல் வேட்டியின் கட்டு இருக்கக் கூடாது. அப்படி வேட்டியின் கட்டு ஜட்டியின் Waistband இன் மேல் இருந்தால் சிறுநீர் கழிக்க ஜட்டிக்குள் இருந்து ஆண்குறியை வெளியே எடுக்க சிரமமாக இருக்கும். தேவை ஏற்படும் போது ஜட்டியை மாத்திரம் கழட்ட கஷ்டமாக இருக்கும்.
வேட்டி அணிந்திருக்கும் போது உள்ளே அணிந்திருக்கும் ஜட்டியை அல்லது ஜட்டியினுள் இருக்கும் ஆண்குறியை/விதைகளின் அமைவை சரி செய்ய(Adjust) வேட்டியைக் கழட்ட வேண்டிய தேவையில்லை.
வேட்டிக்குள்ளேயே நேரடியாக கையை விடலாம். எட்டு முழ வேட்டி கட்டியிருந்தால், வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு கையை உள்ளே விடலாம். நான்கு முழ வேட்டி கட்டியிருந்தால் வேட்டியின் கரைப் பக்கத்தைத் தூக்கிக் கொண்டு வேட்டிக்குள் கையை விடலாம்.
ஜட்டி அணியாமல் வேட்டி அணியும் போது ஆண்களின் சூத்துப் பிளவிற்கும் வேட்டி சிக்கிக் கொள்ளும். அதே நேரம் புடைத்தெழுந்த ஆண்குறி வேட்டியில் கூடாரம் போடும்.
4 முழ வேட்டியைத் தவிர அதனை விட நீளமான வேட்டிகளை அணியும் போது ஜட்டியின் Waistband இனுள் வேட்டியை சொருகுவதைத் தவிர்க்கவும். அதிக வேட்டியை ஜட்டியின் Waistband இனுள் சொருகும் போது, பாரம் அதிகமாவதால், சொருகிய வேட்டி எப்போது வேண்டுமானாலும் ஜட்டியின் Waistband யை விட்டு வெளியே வரலாம்.
வேட்டியை நேர்த்தியாக அணியாது கீழே உட்காரும் போது வேட்டி விலகி உங்கள் அந்தரங்கம் வெளித்தெரியலாம். ஜட்டி அணியாவிட்டால் உங்கள் ஆண்குறி கூட வெளியே எட்டிப்பார்க்கும்.
Briefs or Trunks ஜட்டி அணியாமல் Shorts/Jeans/Pants or Boxer Shorts/Boxer Briefs அணிந்து வேட்டி கட்டினால் அது வேட்டியினூடாக வெளித்தெரியும்.
வெள்ளை நிற வேட்டி அணியும் போது ஜட்டியின் நிறத்தைப் பார்த்து தெரிவு செய்யாவிட்டால் அது வேட்டியை ஊடுருவி வெளித்தெரியும்.
வெள்ளை நிற வேட்டி அணியும் போது வெள்ளை நிற ஜட்டி அணியக் கூடாது. கண்ணாடி போன்ற மெல்லிய துணியினால் ஆன வேட்டிகளை அணிவதை வயதுக்கு வந்த ஆண்கள் தவிர்க்க வேண்டும்.
கலர் வேட்டி அணியும் போது நீங்கள் விரும்பிய நிற ஜட்டிகளை அணியலாம்.
வேட்டியை ஒரு கம்பத்தைச் சுற்றிக் கட்டுவது போல முழு வேட்டியையும் உங்களை சுற்றி கட்டக் கூடாது. நடக்க/உட்கார கடினமாக இருக்கும். வேட்டி கட்டும் போது கால்களை சற்று அகட்டி வைத்து, உங்களை அதன் நடுவில் வைத்து, வலது/இடது முனைகள் என வேட்டியைப் பிரித்து கட்ட வேண்டும். இது தொடர்பான விளக்கமான வீடியோக்கள் Learn Men Blog இல் உள்ளது.
Comments
Post a Comment