வேட்டியின் சால்வையை உங்கள் மார்பை மறைக்கும் போர்வையாகப் பாவிக்கலாம். வேட்டியின் சால்வையை வைத்து தலைப்பாகை கட்டலாம். வேட்டியின் சால்வையை இடுப்பில் ஒரு துண்டைப் போல வேட்டிக்குப் பாதுகாப்பாகக் கட்டலாம்.
வேட்டியின் சால்வையை ஒரு பட்டி அளவுக்கு மடித்து அழகை அதிகரிக்க இடுப்பில் கட்டலாம்.
வேட்டியின் சால்வையை இடது பக்க தோளில் போடலாம், அல்லது கழுத்தைச் சுற்றி போடலாம். ஆனால் அவ்வாறு தோளில் போடும் போது அயன் செய்து அழகாக மடித்துப் பயன்படுத்தவும்.
How to use Veshti Salvai to Cover Our Upper Body?
வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு கோயிலுக்கும் போனால், அல்லது சமய சடங்குகளில் ஈடுபடும் போது சட்டையைக் கழட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு மறைவுக்காக வேட்டியின் சால்வையைப் போர்வை போலவும் போர்த்திக் கொள்ளலாம்.
வேட்டியில் அழுக்கு படியாமல் இருக்க சால்வையை ஒரு துண்டு போல வேட்டிக்கு மேல் கட்டலாம்.
வேட்டியின் சால்வையைத் தலைப்பாகையாக சுற்றுவதாக இருந்தால் அதனை மடித்து அயன் செய்து கட்டவும். அவ்வாறு அயன் செய்து கட்டுவதன் மூலம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
மாப்பிள்ளை தலையில் அணிவதற்கு பட்டு வேட்டியின் சால்வையை தலைப்பாகையாகவே செய்து விற்கிறார்கள்.
வேட்டியின் நிறத்தை ஒத்த சால்வையை/துண்டை இடுப்பில் Belt போல கட்டுவதை விட Contrast(வித்தியாசமான) ஆன நிற சால்வைகளைப் இடுப்பில் Belt போல கட்டினால் பார்க்க அழகாக இருக்கும்.
வேட்டியுடன் வரும் சால்வையையே, நீங்கள் அந்த வேட்டி அணியும் போது அணிய வேண்டும் என்று இல்லை. நீங்கள் உங்களுக்குப் பிடித்த, அணிந்திருக்கும் வேட்டிக்கு பொருத்தமான எந்த நிற, எந்த வடிவ சால்வையையும் அணியலாம்.
இடுப்பில் இப்படித்தான் வேட்டியின் சால்வையை கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் இல்லை.
ஆண்கள் சால்வையை எப்படி தோளில் போடுவது?
சால்வையை மடித்து அயன் செய்த பின்னர் Safety Pin குத்துவதன் மூலம் அயன் செய்த மடிப்பு கலையாத வண்ணம் நாள் முழுதும் நேர்த்தியாக அணிந்திருக்கலாம்.
வேட்டியின் சால்வையை கழுத்தைச் சுற்றி அணிவது எப்படி?
வேட்டியின் சால்வையின் பயன்பாடு:
நான்கு முழ வேட்டி கட்டும் போதும் அல்லது எட்டு முழ வேட்டியை மடித்து நான்கு முழமாக வேட்டி கட்டும் போதும் வேட்டியின் சால்வையை இடுப்பில் துண்டு போல கட்டிக் கொள்வதன் மூலம் நடக்கும் போதும், உட்காரும் போதும் வேட்டி விலகுவதைத் தவிர்க்கலாம்.
சில ஆண்கள் வேட்டியின் சால்வையை இரண்டாக மடித்து இடுப்பைச் சுற்றி துண்டு போல கட்டும் போது அதன் இரு கரைகளும் வெளித்தெரியும் வகையில் அமைப்பை உருவாக்குவர். அவ்வாறு கட்டும் போது இரு கரைகளுக்கும் இடையிலான இடைவெளியை உங்கள் விருப்பம் போல கூட்டிக் குறைக்கலாம்.
வேட்டியின் சால்வையை மடித்து இடுப்பைச் சுற்றி கட்டும் விதம்.
சால்வையை வேட்டியின் மேல் இடுப்பை சுற்றி சொருகியிருக்கும் ஆண்கள்
ஒரு வேட்டியுடன் வரும் சால்வையைத் தான் நீங்கள் அந்த வேட்டி அணியும் போது பயன்படுத்த வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. வேட்டியில் உங்களை அழகாகக் காண்பிக்க எவ்வகையான சால்வையையும் பயன்படுத்தலாம். அது உங்களுக்கு எடுப்பாக இருந்தால் போதும். வேறு எதைப் பற்றியும் கவனிக்காமல் அணியலாம்.
அணிந்திருக்கும் வேட்டியின் மேல், இடுப்பில் சால்வை கட்டும் போது, சால்வையை துண்டு போலவும் கட்டலாம். அதே நேரம் சால்வையை கிடையாக இரண்டாக மடித்து(அதன் மேல் இருந்து கீழ் நோக்கிய அளவை/உயரத்தை/நீளத்தைக் குறைக்கும் வகையில்) Border பொருந்தும் வகையில் இடுப்பை சுற்றி, கட்டாமல் சொருகிக்(Tuck In) கொள்ளலாம். அதன் மூலம் இடுப்பில் உள்ள வேட்டியின் கட்டைக் கூட மறைக்கலாம்.
இடுப்பை சுற்றி வேட்டியின் சால்வையை அணியும் போது சால்வையை மடிக்கும் முறை - Correct Way
8 முழ வேட்டியை 4 முழ வேட்டியாக மடித்துக் கட்டும் போது ஒரு சில ஆண்கள் வேட்டியின் முதல் Layer யை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டுவது உண்டு. இதனைப் பார்க்கும் போது வேட்டியின் மேலே துண்டு கட்டியிருப்பது போன்று தோற்றமளிக்கும்.
Note: கோயிலுக்குள் நுழையும் போது ஆண்கள் மேலாடையைக் கழட்டச் சொல்லி அறிவுறுத்தப்பட்டிருந்தால், கழட்டிய சட்டையை ஆண்கள் துண்டு போல இடுப்பில் கட்டுவது உண்டு.
Long Sleeve Shirt இன் கைகளை, பின் பக்கம் சட்டை இருக்கும் வகையில் வேட்டியின் மேலே இடுப்பில் கட்டியிருக்கும் ஆண்
Comments
Post a Comment