மணமகன், மணத்தோழன் அலங்காரத்தில் மிக முக்கிய இடம் பிடிப்பது தலைப்பாகையாகும். தலைப்பாகையானது பல்வேறு துணிகளில் கட்டக் கூடியதாக இருந்தாலும் பருத்தித் துணியில் கட்டுவதே உகந்தது.
மாப்பிள்ளை அலங்காரத்தில் மாப்பிள்ளை பட்டு வேட்டி உடுத்தினால் தற்காலத்தில் Ready Made ஆக பட்டுத் வேட்டியின் சால்வையில் செய்யப்பட்ட தலைப்பாகையை வாங்கி அணிவர். ஆனால் மாப்பிள்ளையாகத் தயாராகும் ஆண்கள் பட்டு வேட்டி கட்டினாலும், பருத்தித் துணியில்(Cotton) வேட்டி கட்டினாலும் அவற்றுடன் வரும் சால்வையை தோளில் அணிய விரும்பா விட்டால் அதனை மடித்து அயன் செய்து கூட தலைப்பாகையாகக் கட்டலாம்.
தலைப்பாகை கட்டும் போது மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது அதனை நாம் எவ்வளவு இறுக்கமாக கட்டுகிறோம் என்பதைத்தான்.
தமிழ் கலாச்சாரத்தில் மாப்பிள்ளைகளுக்கான ஆடையாக வேட்டி, சட்டை, தோளில் துண்டு, தலையில் தலைப்பாகை என்பன காணப்படுகின்றன.
முதலில் சால்வையை மடித்து அயன் செய்ய வேண்டும். நேர்த்தியாக அயன் செய்தால் தலைப்பாகை கட்டும் போது அழகாகவும் இருக்கும், அதே நேரம் பிடித்து வைத்த பிள்ளையார் போல மடிப்புகள் நேர்த்தியாக இருக்கும்.
மாப்பிள்ளைகளுக்கான தலைப்பாகை கட்டும் முறை
திருமணத்தின் போது மாத்திரமல்ல சாதாரணமாக திருவிழாக்களில் ஒருவரை மரியாதை செய்யவும் தலைப்பாகை கட்டுவதுண்டு.
பாரதியார் போல முண்டாசு கட்டும் முறை.
இந்த முறையை சாதாரணமாகவும் அணியலாம். விசேட நிகழ்வுகளிலும் அணியலாம்.
வடஇந்திய ஆண்களைப் போல தலைப்பாகை கட்டுவது எப்படி? (Marathi Pheta - Varkari Pheta)
பேட்டா(Pheta) என்றால் என்ன? Pheta என்றால் மராத்திய ஆண்கள் பாரம்பரியமாக அணியும் அவர்களுக்கே உரித்தான தலைப்பாகையாகும்(Distinctive Traditional Turban worn in Maharashtra, India).
ஆண்கள் இடுப்பில் கட்டிக் குளிக்கும் துண்டையும் தலைப்பாகையாகக் கட்டுவர்.
வயலில் வேலை செய்யும் ஆண்கள் வெயிலுக்கு இதமாக துண்டை இப்படி தலைப்பாகையாகக் கட்டுவர்.
கட்டாயம் இப்படித்தான் தலைப்பாகை கட்ட வேண்டும் என்று இல்லை. இங்கு பகிரப்பட்டுள்ள மூன்று முறைகளிலும் யாரு வேண்டுமானாலும் தலைப்பாகை கட்டலாம்.
ஆண்கள் தலைப்பாகை கட்டப் பயன்படுத்தும் துண்டை வேட்டி கட்டும் போது Belt போல இடுப்பில் கட்டலாம். தேவை ஏற்பட்டால் தோளிலும் போடலாம்.
சில ஆண்கள் வேட்டி விலகுவதைத் கட்டுப்படுத்த வேட்டியின் மேலே துண்டினையும் அணிவதுண்டு.
Keywords:
How to wear Thalaippagai?
How to wear Head Turban like Tamil Men
ஜரிகை, Lace
Comments
Post a Comment