உள்ளாடைகள் என்பது நமது இனப்பெருக்க உறுப்புக்களை மறைக்க உதவும் ஆடைகளாகும். நாம் உள்ளாடை அணிவதன் பிரதான நோக்கமே நமது அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் அந்தரங்கமாக வைத்திருப்பதாகும்.
ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்ன?
மேலாடை இன்று வெறும் மேலுடன் கூட பலர் முன்னிலையில் ஆண்கள் நிற்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஜட்டி அணியாமல் அம்மணமாக பலர் முன்னிலையில் நிற்பார்களா?
ஆண்களின் மானம் என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால் ஜட்டி(Underwear) அவர்களின் பிரதானமான உள்ளாடையாகும்.
அன்றாட தேவைகள், விசேட தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜட்டிகள் ஆண்களுக்காக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அதே நேரம் மயிர்படர்ந்த உறுதியான நெஞ்சையும், அவர்களின் மார்புக் காம்புகளையும் அடிவயிற்றையும் மறைக்க உதவியாக இருக்கும் பனியன்களும்(Vest/Undershirt/Inner Vest/Banniyan) ஆண்களுக்கான உள்ளாடையாகும்.
Socks(காலுறை/மேஸ்) ஆண்களுக்கான உள்ளாடையா? ஆம். அவற்றை நாம் Shoes இற்குள் அணிவதால் அதுவும் உள்ளாடையாகும்.
நாம் Formal Dress/Office Wear அணியும் போது சட்டை வெளியே வராமல் இருக்க(Tuck In) அணியும் Shirt Stays உம் ஒரு வகையில் ஆண்களுக்கான உள்ளாடையாகும். நல்ல டெய்லரிடம் கொடுத்து உங்கள் உடல் அளவுகள், அமைப்புக்களுக்கு ஏற்றாற் போல Dress Pant, Dress Shirt போன்றவற்றை தைத்தோ அல்லது Ready Made ஆக வாங்கி Alter செய்தோ அணிவதன் மூலம் Shirt Stays அணிவதைத் தவிர்க்கலாம்.
தற்காலத்தில் ஆண்கள் தமது உள்ளாடைகள்(Underwear, Vest, Socks, etc.) அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும் வகையில் தெரிவு செய்து அணிகிறார்கள். இது ஒரு வகை Trend ஆக மாறியுள்ளது.
நீங்கள் ஆடை அணியும் போது பனியனை ஜட்டிக்குள்ள விடுவீங்களா? அல்லது ஜட்டிக்கு மேலே பனியனை விடுவீங்களா?
Keywords: Innerwear for Men, Underpants
Comments
Post a Comment