பனியன் வாங்கும் போது நெஞ்சு சுற்றளவை வைத்தே பனியன் வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும் பனியன் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு உங்களுக்கு நன்றாக பொருந்தும். இல்லாவிட்டால் கீழே குனியும் போது பனியன் பேண்டை விட்டு வெளியே வர வாய்ப்பு உள்ளது.
அநேகமான பனியன்கள்(Banniyan) பருத்தி துணியில் செய்யப்பட்டிருக்கும். ஆனால் விளையாட்டுக்களின் போது, Gym இல் உடற்பயிற்சி செய்யும் போது அணியும் வகையிலான Men's Athletic Vest/Gym Vest களும் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. இவை நைலோனினால் செய்யப்பட்டிருக்கும். வியர்வையை உறிஞ்சாது.
ஆண்களுக்கான பனியன் வெள்ளை நிறத்தில் மாத்திரமல்ல, தற்காலத்தில் பல்வேறு வர்ணங்களில், பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. உதாரணமாக: சிறு துளைகள் போட்ட பனியன், கை வைத்த பனியன், கை வைக்காத பனியன்.
கை வைக்காத Sleeveless Vests களை ஆண்கள் தெரிவு செய்து அணிவதன் மூலம் அவர்களின் கவர்ச்சியை மேலும் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.
ஓரளவுக்கு கை வைத்த Short Sleeve Vests, சட்டைகளில் அக்குள் பகுதிகளில் காவிக் கறை படியும் ஆண்கள் அணிய உகந்த பனியனாகும். இவற்றைத் தவிர நீளமான கை வைத்த பனியன்கள், Arm Cut Vest களும் சந்தையில் விற்பனைக்குள்ளன.
ஆண்கள் தெரிவு செய்து அணியும் பனியனானது குறைந்தது அவர்களின் இடை(Hip) வரையாவது நீளமாக இருக்க வேண்டும். அதாவது ஆண்கள் ஜட்டி அணிந்திருக்கும் போது அவர்களின் Underwear Bulge யை பகுதியளவில் அவர்கள் அணியும் பனியன் மறைக்க வேண்டும்.
வெள்ளை நிற சட்டை அணியும் போது வெள்ளை நிற பனியனை உள்ளே அணிவதை ஆண்கள் தவிர்ப்பது நல்லது. அது வெள்ளை நிற சட்டையை ஊடுருவி வெளித்தெரியும். சாம்பல் நிற பனியன் அல்லது உங்கள் உடலின் நிறத்தை ஒத்த நிறத்தில் உள்ள பனியனை அணிவதன் மூலம் அவ்வாறு நீங்கள் அணிந்திருக்கும் சட்டையூடாக வெளித்தெரிவதைக் குறைக்கலாம்.
வியர்வையில் நனைந்த ஈரமான பனியனை இழுத்துக் கழட்டுவதைத் தவிர்க்கவும். மெதுவாகக் கழட்டுவதன் மூலம், பனியன் ஈய்ந்து தொய்வடைவதைத் தவிர்க்கலாம்.
ஆண்கள் பனியனைத் தெரிவு செய்யும் போது அது அவர்களின் மார்புக் காம்புகளை மறைக்கும் வகையிலானதாக இருப்பது அவசியம். சில பனியனிகளின் Straps(தோள் பட்டையில் தொங்கும் கயிறு) மார்புக் காம்புக்களை வெளிக்காட்டும் அளவுக்கு நீளமாகவும் ஒடுங்கியதாகவும் இருக்கும்.
Comments
Post a Comment