பனியன், ஜட்டி என்பன ஆண்களின் உள்ளாடைகளில் மிக முக்கியமானவை. அவற்றை அணிவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். உதாரணமாக பனியன் அணிவதன் மூலம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் நீங்கள் அணிந்திருக்கும் சட்டை நனைவதை தவிர்க்கலாம். அதே போல இடுப்புக்கு மேலே உங்கள் உடலை செதுக்கியது போல கவர்ச்சியாக வெளிக்காட்டலாம்.
ஜட்டி அணிவதன் மூலம் உங்கள் ஆண்குறியையும், விதைகளையும் ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்கலாம். அதே வேளையில் அணிந்திருக்கும் Pant ஜிப் போடும் போது ஆண்குறியின் முன் தோல்(Foreskin) மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம். ஓடி, ஆடி வேலை செய்யும் போது உங்கள் ஆண்குறியும் விதைகளும் கால்களுக்கு நடுவே அங்கும் இங்கும் அசைந்து அசெளகரியத்தை ஏற்படுத்துவதைக் கட்டுப்படுத்தலாம். புடைத்தெழுந்த ஆண்குறி வெளித்தெரிவதை ஜட்டி அணிவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
ஆனால் Formal Dress அணியும் போது ஆண்கள் பனியன் அணிய வேண்டுமா? என்று கேட்டால், அதற்கான பதில் சந்தர்ப்பம், நீங்கள் வசிக்கும் இடத்தின் கால நிலை, நீங்கள் வேலை செய்யும் இடத்தின் வெப்பநிலை போன்ற காரணிகளை வைத்து வேறுபடும்.
ஆண்கள் வெள்ளை நிற Shirt(சட்டை) அணியும் போது அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் வெள்ளை நிற பனியன் வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது. அதனை எப்படி சரி செய்வது என்பதை இதற்கு முதல் எமது தளத்தில் வெளிவந்துள்ள ஆண்களுக்கான பனியன் தொடர்பான பதிவுகளை படித்து தெரிந்து கொள்ளவும்.
ஆண்கள் இறுக்கமான Slim Fit Long Sleeve Shirt அணியும் போது உள்ளே அணிந்திருக்கும் பனியனின் விளிம்புகள் சட்டையினூடாக வெளித்தெரியும்.
Gym இற்குச் சென்று தமது உடலை கட்டழகாக்கி வைத்திருக்கும் ஆண்கள் தமது கட்டுடழை(Physique), அணிந்திருக்கும் சட்டையினூடாக வெளிக்காட்ட விரும்பினால், அதற்கு பனியன் அணிவது தடையாக இருக்கும்.
சட்டையில் முதல் இரண்டு Button களை கழட்டி, நெஞ்சில் படர்ந்திருக்கும் நெஞ்சு முடியை வெளிக்காட்ட விரும்பும் ஆண்களுக்கு, அவர்களின் பனியன் தெரிவு தடையாக இருக்கலாம்.
அதிகம் வியர்க்காத கால நிலை(குளிர் நாடுகள்) உள்ள நாடுகளில், Air Conditioned அறைகளில் வேலை செய்யும் ஆண்களுக்கு வியர்வையை சமாளிக்க பனியன் அணிவது தேவையற்ற ஒன்று.
உடல் பருமன் அதிகமான ஆண்களுக்கு பனியன் அணிவது மிகவும் கடினமாக இருக்கலாம்.
இவ்வாறான காரணங்களை கருத்தில் கொண்டால் ஆண்கள் விரும்பினால் பனியன் அணியாமல் கூட Formal Dress அணியலாம்.
குறிப்பு: வெள்ளை நிற சட்டை(Full Sleeve Shirt) அணியும் போது கை வைத்த பனியன் அணிந்தால், சட்டையில் அழுக்குப் படிவதைக் குறைக்கலாம். அதே நேரம் ஒரே சட்டையை அலசாமல், வியர்வையை மாத்திரம் காய வைத்து, இரண்டு நாட்கள் அணியலாம்.
உங்களுக்கு பனியன் அணியப் பிடிக்குமா? பனியன் அணியாமல் இருக்க பிடிக்குமா?
Comments
Post a Comment