பொது இடங்களில் உள்ள நீர் நிலைகளில் ஆண்கள் துண்டு கட்டிக் குளித்தால், குளித்து முடிய இடுப்பு வரை நீரில் இறங்கி துண்டை அவிழ்த்து நன்றாகப் பிழிந்து விட்டு துண்டினைப் பயன்படுத்தி அந்தரங்கப் பகுதியை மறைத்து கொண்டு வெளியே கரைக்கு வந்து உடை மாற்றலாம்.
அல்லது ஈரத் துண்டுடனேயே சிறிந்து நேரம் கரையில் நின்றால் ஓரளவுக்கு துண்டு காய்ந்து விடும். பின்னர் ஜட்டியை அணிந்து விட்டு துண்டை கழட்டலாம்.
ஆண்கள் கட்டிக் குளிக்கும் துண்டிற்கும், ஈரத்தைத் துடைக்கும் துவாய்க்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? ஆண்கள் கட்டிக் குளிக்கும் துண்டு நனைந்தால் கூட மிகவும் மெல்லியதாக இருக்கும். அதே நேரம் உடலில் உள்ள ஈரத்தை அகத்துறிஞ்சாது.
ஆனால் ஆண்கள் ஈரத்தைத் துடைக்கப் பயன்படுத்தும் துவாய் நனைந்தால் மேலும் பாராமாகிவிடும். அவை உடலில் உள்ள ஈரத்தை அகத்துறிஞ்சுவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
ஆண்கள் அவற்றை அணிந்தும் குளிக்கலாம். ஆனால் இடுப்புக்குக் கீழ் அதிகம் நனையாது. அதே நேரம் இந்த வகை துண்டுகள் நீரை உறிஞ்சி வைத்துக் கொள்வதால் அதிகம் பாரமாக உணர்வீர்கள். அதன் காரணமாகவே குளிக்கும் போது இடுப்பில் கட்டியிருக்கும் துண்டின் கட்டு, இலகுவில் கழறலாம்.
ஆண்கள் துண்டின் உதவியுடன் ஜட்டி அணிவது எவ்வாறு?
ஹோட்டல்களில் அநேகமாக ஒரே துவாயையே மீண்டு மீண்டும் சுத்தமாக துவைத்து, விருந்தினர்கள் பயன்படுத்துவதற்கு பாத்ரூமில் அடுக்கி வைப்பர். மற்றவர்கள் பாவித்த துவாயை நீங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அவற்றை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
Comments
Post a Comment