Skip to main content

Posts


Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் பனியன் வாங்குவது எப்படி?

பனியன் வாங்கும் போது நெஞ்சு சுற்றளவை வைத்தே பனியன் வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும் பனியன் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு உங்களுக்கு நன்றாக பொருந்தும். இல்லாவிட்டால் கீழே குனியும் போது பனியன் பேண்டை விட்டு வெளியே வர வாய்ப்பு உள்ளது. அநேகமான பனியன்கள்(Banniyan) பருத்தி துணியில் செய்யப்பட்டிருக்கும். ஆனால் விளையாட்டுக்களின் போது, Gym இல் உடற்பயிற்சி செய்யும் போது அணியும் வகையிலான Men's Athletic Vest/Gym Vest களும் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. இவை நைலோனினால் செய்யப்பட்டிருக்கும். வியர்வையை உறிஞ்சாது.

வயதுக்கு வந்த ஆண்களுக்கான சுகாதாரப் பழக்கவழக்கங்கள்

ஆண்கள் பூப்படைந்த நாள் முதல் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய கடைமை சுத்தம் ஆகும். ஆண்கள் வயதுக்கு வரும் காலத்தில் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இதனால் அவர்கள் தினமும் குளிப்பது அவசியமாகும். உச்சி முதல் உள்ளம் கால் வரை உடலில் அங்காங்காங்கே முடி வளர்ச்சி ஏற்படும். குளிக்கும் போது அக்குள் பகுதி, நெஞ்சுப் பகுதி, சூத்துப் பிளவு, ஆண்குறியை சூழ உள்ள முடி, கால் இடுக்கு, விதைப்பைக்கு கீழ என அதிக முடி வளர்ச்சி உள்ள பகுதிகளை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து குளிக்க வேண்டும். உடலுக்கு சவர்க்காரம்(Soap/சோப்) போட விருப்பம் இல்லாவிட்டால் Bathing Gel யை Loofah இன் உதவியுடன் உடல் முழுதும் பூசி, தேய்க்கலாம். Loofah(also known as Luffa) யை Bathing Gel பயன்படுத்தும் போது மாத்திரம் அல்ல, சவர்க்காரம் போட்டு விட்டும், உடலில் நன்கு தேய்த்து அழுக்கைப் போக்க பயன்படுத்தலாம்.

ஆண்கள் ஜட்டி அணிந்தா அல்லது துண்டு கட்டிக் குளிப்பதா நல்லது?

ஆண்கள் குளிக்கும் போது வெள்ளை நீற ஜட்டி அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளை நிற ஆடையைப் போன்று வெள்ளை நிற ஜட்டிகளும் நீரில் நனைந்தவுடன் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். பொது இடங்களில் வெள்ளை நிறத் துண்டு கட்டுக் கொண்டு குளிப்பதாக இருந்தால் உள்ளே தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் ஜட்டியைத் தெரிவு செய்து அணிவது நல்லது.  இதன் மூலம் நனைந்த துண்டு உடலுடன் ஒட்டினாலும் உங்கள் அந்தரங்கள் வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். ஜட்டி அணிந்து வெள்ளை நிறத் துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண் பொது இடங்களில் துண்டு கட்டிக் குளிக்கும் போது விரும்பினால் உள்ளே ஜட்டி அணிந்திருக்கலாம்.  இதன் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகள் அணிந்திருக்கும் துண்டு விலகி வெளித்தெரிவது, துண்டு ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் பல ஆண்களுக்கு ஜட்டி அணிவதில் கூச்சம், தயக்கம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழலாகவும் இருக்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே நேரம் ஆண்கள் ஜட்டி அணியும் போது தமது உடல் அமைப்புகளுக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற மிகச்சரியாக பொருந்தும் ஜட்டிகளை தெரிவு செய்து அணியாவிட்டால், நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க முடியாத நிலை ஏற்படும். எப்படா அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டுவோம் என்கிற அளவுக்கு அசெளகரியமாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும்(விதைப்பை) ஜட்டியின் முன் பக்கம்(Pouch) தங்க வேண்டும். அதே நேரம், ஜட்டியின் முன்பகுதி ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி, ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது பொட்டலமாகவே(Bulge) அசைய வேண்டும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி தனியாக, விதைகள் தனியாக அசையக் கூடாது.   தொடைகளுக்கு நடுவே ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு தொங்க வ...