ஆண்களின் இடுப்புப் பகுதியின் கவர்ச்சியைக் கூட்ட அருணாக்கொடி உதவும்.
அதிலும் குறிப்பாக உடல் முழுதும் முடி காடு போல வளர்ந்திருக்கும் ஆண்கள் இடுப்பில் கருப்பு நிற அரைஞாண் கயிற்றைக் கட்டுவதன் மூலம் அவர்களின் கவர்ச்சியை பல மடங்கு அதிகரிக்கலாம்.
விஷக்கடிகளுக்கு தற்காலிக சிகிச்சை கொடுக்கவும் பயன்படுத்தலாம்.
அருணாக்கொடியை அறுத்து தற்காலிகமாக கடித்த இடத்தை கட்டி வைத்து விஷம் பரவாது இருக்க பயன்படுத்தலாம்
வேட்டி, லுங்கி அணியும் போது அவற்றின் கட்டி உறுதியாக்க அரைஞாண்கயிற்றை அவற்றின் கட்டின் மேல் விடலாம்.
கோவணம் கட்டுவதற்கு அரைஞாண் கயிறு மிகவும் வசதியாக இருக்கும்.
அவசரத்திற்கு எதையாவது எடுத்து இடுப்பில் சுற்ற உதவியாக இருக்கும்.
தாயத்து (Talisman), மத நம்பிக்கைகள் சார்ந்த அடையாளங்களையும் அரைஞாண்கயிற்றில் அணியலாம்.
தாயத்து (Talisman) தங்கம், வெள்ளி அல்லது செப்புத் தகட்டால் ஆன நீள் உருண்டை வடிவத்தில் அமைந்திருக்கும் மந்திரத் தாயத்து ஆகும். இதனை தீய சக்திகளிடமிந்து தங்களை காத்துக் கொள்வதற்காக இடுப்பில் அல்லது கழுத்தில் அணிவர்.
மத நம்பிக்கை சார்ந்த அடையாளங்களான சுரை, கோயில் கயிறு, காப்புக் கயிறு, மந்திரித்த நூல்/தாயத்து போன்றவற்றை கைகளில் அணிய விரும்பாத ஆண்கள், அரைஞாண்கயிற்றில் அவற்றைக் கட்டி அணிவதுண்டு.
ஒரு ஆண் ஒரு அரைஞாண் கயிறு தான் அணிய வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இல்லை. அதே போல் ஒரு சுற்று அருணாக்கொடி தான் இடுப்பில் கட்ட வேண்டும் என்றும் எந்த விதிமுறையும் இல்லை.
வெள்ளி அருணாக்கொடி அணியும் ஆண்கள் விரும்பினால் கருப்பு நிறக் கயிற்றிலும் அருணாக்கொடி கட்டலாம். சிலர் வெள்ளி அருணாக்கொடியுடன் சேர்த்தே கருப்பு அருணாக்கொடி கட்டுவர்.
சில ஆண்கள் தங்கத்திலும் அருணாக்கொடி செய்து அணிவதுண்டு.
வயதுக்கு வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டும் போது அரைஞாண்கயிற்றின் உதவியுடன் வேட்டியின் கட்டை உறுதியாக்குவது எப்படி?
ஜட்டி அணியும் காலத்திலும் ஆண்கள் அரைஞாண்கயிறு(அருணாக்கொடி) அணிவது ஏன்?
முன்னர் அவசரத்திற்கு உதவியாகவும், மானத்தை காக்கவும், கோவணம் கட்ட உதவியாக அருணாக்கொடியை பயன்படுத்தினர்.
இன்று வேட்டி/லுங்கி போன்ற ஆடைகளை இடுப்பில் இறுக்கமாக கட்ட Support ஆகப் பயன்படுத்துகின்றனர். லுங்கியின் அல்லது வேட்டியின் கட்டின் மேல் அருணாக்கொடியை விட்டால் அல்லது லுங்கியின் அல்லது வேட்டியின் கட்டின் மேல் அருணாக்கொடியை விட்டு லுங்கியை/வேட்டியை அருணாக்கொடியை வைத்து கீழ் நோக்கி உருட்டி மடித்து விட்டால் லுங்கி, வேட்டியின் கட்டு அவிழாது.
அதே நேரம் அரைஞாண்கயிற்றை இடுப்பில் கட்டியிருப்பது ஆண்களின் இடுப்புப் பகுதிக்கு மேலும் கவர்ச்சியைக் கொடுக்கும். நம்பிக்கை இல்லையென்றால் இடுப்பில் ஒரு கருப்பு அருணாக்கொடியைக் கட்டிக் கொண்டு உங்களை நீங்களே நிர்வாணமாக கண்ணாடியில் பாருங்கள்!
உங்களுக்குத் தெரியுமா? பல்வேறு நிறங்களில் அரைஞாண்கயிறு விற்பனைக்கு உள்ளது. அருணாக்கொடியை ஆண்கள் மட்டுமல்ல, சில பெண்களும் அணிகின்றனர்.
Comments
Post a Comment