வெள்ளை நிற ஜட்டி, பனியன்களை தனியாகத் துவைக்கவும், வேறு நிற ஆடைகளுடன் துவைத்தால் அவற்றின் சாயம் உங்கள் உள்ளாடைகளில் ஊறிவிடும்.
வயதுக்கு வந்த ஆண்கள் பனியன் அணியும் போது பனியனை நன்றாக இழுத்து அணியக் கூடாது. இயல்பாக அதனை நமது மேல் படர விட வேண்டும். இதன் மூலம் பனியன் கிழிவதை, ஈய்ந்து போவதைக் குறைக்கலாம்.
ஜட்டியுடன் குளிக்கும் பழக்கம் இருந்தால், ஈரமான ஜட்டியை வேகமாக கழட்ட வேண்டாம். மெதுவாக ஜட்டியைக் கழட்டுவதன் மூலம் ஜட்டி சீக்கிரம் பழுதடைவதை, தையல் விடுபடுவதைத் தவிர்க்கலாம்.
துவைத்த ஜட்டிகளை பாத்ரூமில் காய விட வேண்டாம், இலகுவில் பங்கசு வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
துவைத்த ஜட்டிகளையும், பனியனையும் நிழலான பிரதேசத்தில்(நேரடியாக சூரிய ஒளி படாத வகையில்) காய விடவும். நேரடி சூரிய ஒளியில் அதிக நேரம் ஜட்டி, பனியன்களைக் காய விட்டால் அவற்றின் துணி வெயிலுக்குப் பழுதடைந்து கடினமாகி விடும்.
பாத்ரூமில் ஆண்கள் ஜட்டி காய விடலாமா? இல்லை.
பாத்ரூமில் ஆண்கள் பனியனைக் காய விடலாமா? இல்லை.
ஈரமான ஜட்டியை, பனியனை நன்றாக பிழியாமல் காய விட வேண்டாம்.
ஆண்கள் தாங்கள் அணியும் ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகளை மற்றவர்கள் இலகுவில் பார்க்கக் கூடிய இடங்களில் கொடி கட்டிக் காயவிடலாமா? ஆம். இதில் வெட்கப்பட ஒன்னும் இல்லை.
துவைக்கப் பயன்படுத்திய சலவைத்தூள், சவர்க்காரம் நன்றாக அலசப்பட்டுள்ளதா என்பதை கவனிக்காமல் காய விட வேண்டாம். ஒழுங்காக அவற்றை கழுவி நீக்கா விட்டால், காய்ந்த ஜட்டியை அணியும் போது உங்களுக்கு எரிச்சல் ஒவ்வாமை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
காய வைத்த ஜட்டி நன்றாக காயந்துள்ளதா என்பதை பார்த்து ஜட்டியை அணியவும். ஈரமான ஜட்டியை அணிந்தால் நேரமாக ஆக உங்கள் உடலில் ஒரு வகை துர்நாற்றத்தை உருவாக்கும்.
அதிகம் செறிவான இரசாயணங்கள் அடங்கிய சலவைத் தூளைப் பயன்படுத்தி ஜட்டி, பனியனை துவைக்க வேண்டாம்.
ஜட்டியை, பனியனை துவைக்கும் போது உள்பக்கத்தை வெளியே எடுத்து துவைத்துக் காயப்போடவும்.
கிழிந்த ஜட்டி, பனியனை வீட்டில் இருக்கும் போது சிறிது காலம் அணியலாம். குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு தடவையாவது உங்கள் உள்ளாடைகளை மாற்றுங்கள்.
அன்றன்று அணிந்த ஜட்டி, பனியன்களை அன்றன்றே துவைத்துக் காயப் போடுங்கள்.
குறிப்பு: ஆண்கள் அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டும் போது அவசரமாக
உருவிக் கழட்டக் கூடாது. அதே நேரம் ஜட்டியின் Waistband உருளும் வகையில்
உருட்டிக் கழட்டவும் கூடாது.
ஜட்டியில் விந்துக் கறை, சிறுநீர் கறை இருந்தால் அவற்றை கவனமெடுத்து அன்றன்றே சுத்தம் செய்யவும்.
அன்று காலையில் குளித்து விட்டு, உடலை துடைத்து, ஈரத்தை அகற்றி விட்டு, அணிந்த ஜட்டியை, இரவு தூங்கப் போவதற்கு முன்னர் கழட்டி துவைத்துக் காயப் போடவும். இரவும் தூங்கும் போது தளர்வான ஜட்டி அணிந்து தூங்கவும்.
டாய்லெட்டைப்(Toilet) பயன்படுத்திய பின்னர் Tissue யை பயன்படுத்தி ஈரத்தை அகற்றாமல் ஜட்டியை அணிய வேண்டாம். இதன் மூலம் ஜட்டி ஈரமாவதைத் தவிர்க்கலாம். தற்காலத்தில் ஆண்களுக்கான Wet Wipes விற்பனைக்குள்ளது. இவற்றை பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்தும் போது உபயோகிப்பது நல்லது.
ஜட்டி, பனியனை அளவுக்கதிகமான் சூடான நீரில் துவைப்பது நல்லதல்ல. விரும்பினால் ஓரளவு சூடான நீரில் துவைக்கலாம்.
பனியனை விரும்பினால் அயன் செய்யலாம். ஆனால் ஜட்டியை அயன் செய்து தான் அணிய வேண்டும் என்றில்லை.
ஹாஸ்டல், Shared Rooms களில் வாழும் ஆண்கள் ஒரே மாதிரியான ஜட்டியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். நாட்டில் ஜட்டிக்கா பஞ்சம்? அது தான் டிசைன் டிசைனா இருக்கே!
ஜட்டியை ஒவ்வொரு முறை அணிந்த பின்னரும் அதனைத் துவைத்து Wash செய்ய மறக்கக் கூடாது. Gym/Exercise செய்யும் போது அணிந்திருந்த ஜட்டியை உடனயே கழட்டி துவைத்துக் காயப்போட வேண்டும். அதே ஜட்டியுடனேயே நாள் முழுதும் உலாத்தக் கூடாது. இதன் மூலம் ஜட்டியில் பாக்டீரியா/பற்றீரியா தொற்றுக்கள் ஏற்படல், துர்மணம் உருவாதல், கறை படிதல் போன்ற பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தலாம்.
நீங்கள் பயன்படுத்தும் பனியன் தொய்வடைந்து, ஓட்டை விழுந்து, நிறம் மங்கி, கறைகள் அதிகமாகும் போது அந்த பனியனை மாற்ற வேண்டும்.
ஈரமான ஜட்டியை Hair Dryer யைப் பயன்படுத்தி சீக்கிரம் காயவைக்கலாம். அயன் செய்து காயவைக்கும் போது ஜட்டியின் துணி பழுதடைய வாய்ப்பு உள்ளது.
ஆண்கள், ஒரு தடவை அணிந்த ஜட்டியை மீண்டும் எத்தனை தடவை துவைக்காமல் அணியலாம்?
ஒரே நாளில் ஒரே ஜட்டியை அடிக்கடி கழட்டி மாட்டுவதை விட, ஆண்கள் காலையில் குளித்து விட்டு அணியும் ஜட்டியை, இரவு தூங்கும் முன்னர் கழட்டுவதே சிறந்தது.
உங்கள் ஜட்டி, வியர்வையில் ஊறும் அளவுக்கு கடுமையாக வேலை செய்திருந்தால், அல்லது உடற்பயிற்சி செய்திருந்தால், வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், வியர்வையில் ஊறிய ஜட்டியை கழட்டி விட்டு வேறு ஜட்டி அணிவது நல்லது. ஆனால் அந்த ஜட்டியைக் கழட்டி விட்டு மீண்டு அதே ஜட்டியை பிறகு அணிவது நல்லதல்ல. அவற்றை அலசிக் காயவிடவும்.
கழட்டிய ஜட்டியை துணி துவைக்கும் கூடையில் போடுவதை விட நீரில் ஊறவைப்பது நல்லது.
நீங்கள் அணிந்த ஜட்டியை முகர்ந்து பார்க்கும் போது துர்வாடை வந்தால் அதனை துவைக்காமல் மீண்டும் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.
வேறு வழி இல்லை, அணிய வேறு ஜட்டி இல்லை என்றால், துவைக்காமல் கூட அணிந்த ஜட்டியை மீண்டும் அணியலாம். ஆனால் அடிவயிற்றுப் பகுதிக்கு Deodorant பாவிக்க மறக்க வேண்டாம்.
மழை நாட்களில் ஆண்கள் ஜட்டியை துவைக்கலாமா?
துவைக்கலாம், ஆனால் அடுத்த நாள் அணிவதற்கு ஏற்றாற் போல அவை காய்ந்து இருக்குமா என்று சொல்ல முடியாது. உங்கள் ஜட்டி நனையும் அளவுக்கு மழையில் நனைந்தால், ஜட்டியையும் துவைத்துப் போடத்தான் வேண்டும்.
மழை நாட்களில்/குளிர் காலத்தில் வியர்ப்பது குறைவாக இருக்கும். ஆகவே வேறு வழி இல்லாவிட்டால் ஒரு நாள் அணிந்த ஜட்டியையே மீண்டும் அடுத்த நாள் அணியலாம்.
கொடியில் காய விட்ட ஆடைகள், குறிப்பாக வெள்ளை ஜட்டி, பனியன் போன்றவை மழையில் நனைந்தால் அவற்றை மீண்டும் ஒரு முறை அலசிக் காய விடவும். இல்லாவிட்டால், அவை சீக்கிரம் பழுதடையும்.
நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியை எப்போது மாற்ற வேண்டும்?
குறைந்தது 3-6 மாதத்திற்கு ஒரு முறையாவது புது ஜட்டி வாங்க வேண்டும். அதே நேரம்,
1. ஜட்டியின் இலாஸ்டிக் தொய்வடைந்திருப்பதை உணரும் போது
2. ஜட்டியில் அளவுக்கு அதிகமான ஓட்டைகள் உருவாகும் போது
3. ஜட்டியின் நிறம் மங்கும் போது
4. ஜட்டியின் துணி மறுத்தது போல்/தடிமனானது போல மாறும் போது புதிய ஜட்டி வாங்கவும்.
Tips: நீங்கள் பாவித்த பழைய ஜட்டியை வீட்டில் இருக்கும் போது அணியலாம். குளிக்கும் போது பழைய ஜட்டியை அணிந்து குளிக்கலாம்.
ஆண்கள் ஜட்டி/பனியனை அணியும் முன்னர் நன்றாக உதற வேண்டும்
குஞ்சாமணில எறும்பு கடிக்கிறதுக்கு முக்கியமான காரணமே அணியிற ஆடைகளை அதிலும் குறிப்பாக ஜட்டியை உதறி அணியாமையே ஆகும்.
ஜட்டியை உதறாமல் அணியும் போது, ஜட்டியில் இருந்த எறும்பு உங்கள் ஆண்குறியையோ அல்லது விதைப்பையையோ கடிக்கலாம். எறும்பு சிறிதாக இருந்தாலும் வலி அதிகமாக இருக்கும்.
ஜட்டியுடன் சேர்த்து அல்லது அணிந்திருக்கும் ஆடையுடன் சேர்த்து எறுப்பு கடிக்கும் இடத்தை நசுக்குவதைத் தவிர்க்கவும்.
உங்கள் ஆண்குறியில் எறும்பு கடித்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஜட்டியைக் கழட்டி ஆண்குறி/விதைப்பையை ஆராய்ந்து, கடித்துக் கொண்டிருக்கும் எறும்பை அகற்றவும். எறும்பு கடித்த இடம் சற்று தடிக்கும். சிறிது நேரம் வலி இருக்கும். மற்றும்படி நீங்கள் டாக்டர்கிட்ட போற அளவுக்கு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.
Comments
Post a Comment