என்ன தான் பார்த்துப் பார்த்து Shirt, Pant வாங்கி Formal Dress போட்டாலும் கையைத் தூக்கும் போது, குனியும் போது பேண்டை விட்டு சட்டை வெளியே வந்து சட்டை இடுப்புப் பகுதியில் கசங்கிப் போய் இருக்கும். இது உங்கள் தோற்றத்தையே சீர்குலைத்துவிடும்.
எத்தனை முறைதான் சட்டையை Pant இனுள் விடுவீங்க? ஓரளவுக்குப் பிறகு வெளியவே இருக்கட்டும்னு கூட தோனலாம். ஆனால் Formal Dress/ Office Wear என்றால் கட்டாயம் ஷேர்ட்யை(Shirt) Pant உள்ளே Tuck In செய்தே இருக்க வேண்டும் என்பது விதி!
இவ்வாறான அனுபவங்களை சரி செய்ய கீழ்வரும் முறைகளை பின்பற்றுவதன் மூலம் நேர்த்தியாக நமது Dress Shirt யை Dress Pant இனுள் Tuck In செய்யலாம்.
உங்கள் சட்டையின் நீளத்தையும்(Shirt Length) இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். Shirt Length தான் அந்த சட்டையை Tuck In செய்து அணிய வேண்டுமா? அல்லது Untuck செய்து அணிய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும்.
Ready Made ஆக Dress Shirt and Dress Pant வாங்கினாலும் டெய்லரிடம் கொடுத்து உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்றாற் போல Alter(மாற்றம் செய்ய) செய்யாது இம்முறைகளில் Tuck In செய்ய வேண்டாம்.
நீங்கள் அணியும் சட்டையும் Pant உம் உங்கள் உடலின் அளவுகளுக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் அமைய வேண்டும்.
Military Tuck In Dress Shirt
உங்கள் அளவுக்கு ஏற்ற சட்டையை அணியவும். Ready Made Shirt ஆக இருந்தால், டெய்லரின் உதவியுடன் அதனை உங்கள் உடலுக்கு ஏற்றாற் போல Alter செய்யவும். டெய்லர்கள் உள்பக்கமாக சட்டையின் அளவுகளை மாற்றும் வகையில் தைப்பார்கள். சிலர் சட்டையின் பின்புறம் Darts(Pleat Styles) உருவாக்குவார்கள். Darts பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இந்த முறையில் சட்டையை Tuck In செய்வதற்கு முதல் பனியனை ஜட்டிக்குள் Tuck In செய்யவும்.
பின்னர் சட்டையை முன்பக்கம் இருந்து பின்பக்கம் செல்லும் வகையில் Pant இனூள் Tuck In செய்யவும். அப்பொழுது, சட்டையின் இரு பக்கமும் பெரு விரலை வைத்து, அதன் மேல் சட்டையை இழுத்து சட்டையை இடுப்புப் பகுதியில் இறுக்கமாக்கி Pant இனுள் சொருகவும். பின்னர் Belt அணியவும்.
French Tuck
ஒரு பக்கம் மாத்திரம் சட்டையை Tuck In செய்வதை French Tuck அல்லது Half Tuck அல்லது One Hand Tuck என்பர்.
Rolling up the Shirt
சட்டையை அணிந்த பின்னர், சட்டையை கீழிருந்து மேல் நோக்கி உருட்டி Pant இனுள் Tuck In செய்யும் முறை.
Using Nada Thread to Tie the Shirt - Nada Indian Method
சட்டையை Pant இனுள் Tuck In செய்யும் இந்திய முறையாகும். இம்முறையில் சட்டையை அணிந்த பின்னர், சட்டையின் நிறத்தை ஒத்த, அல்லது Pant இன் நிறத்தை ஒத்த ஒரு நாடாக் கயிறை(Nada) வைத்து சட்டையை இடுப்புடன் சேர்த்து கட்டுவதாகும். இது கிட்டத்தட்ட Shirt Stays Belt போன்று தொழிற்படும்.
Underwear Tuck In
நீங்கள் அணியும் சட்டை, பனியனை உங்கள் ஜட்டியினுள் Tuck In செய்வதை Underwear Tuck In என்பர்.
Public Rest Room இல் வைத்து ஜட்டிக்குள் Dress Shirt யும் பனியனையும் Tuck In செய்யும் ஆண்.
ஜட்டியினுள் சட்டையையும் பனியனையும் Tuck In செய்த பின்னர் Pant அணிந்தால் சட்டை இலகுவில், கையைத் தூக்கும் போது அல்லது, குனியும் போது வெளியே வராது.
ஆனால் ஜட்டியின் Waistband வெளியே எட்டிப் பார்க்கலாம்
Pant Size பெரிதாக இருந்தால், அல்லது Tight ஆக Belt போடா விட்டால் குனியும் போதும், கைகளை மேலே தூக்கும் போதும் ஜட்டியின் Waistband வெளியே எட்டிப்பார்க்கும்.
அவ்வாறு ஜட்டியின் Waistband வெளியே எட்டிப்பார்க்காமல் இருக்க பனியனை மாத்திரம் ஜட்டியினுள் Tuck In செய்யவும்.
உங்கள் Dress Shirt யை நல்ல டெய்லரிடம் கொடுத்து உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்ப Alter செய்து அணிவதாக இருந்தால், பனியனை மாத்திரம் ஜட்டிக்குள் Tuck In செய்தால் போதும். இதன் மூலம் குனியும் போதும், கைகளைத் தூக்கும் போதும் ஜட்டியின் Waistband வெளியே எட்டிப் பார்க்காது.
Briefs ஜட்டி அணிந்து, அதன் கால்களுக்குள் சட்டையின் வாலை(Bottom Part or Tail of Shirt) Tuck In செய்வதன் மூலம், குனியும் போதும் கைகளை மேலே தூக்கும் போதும் ஜட்டியின் Waistband வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.
Men Underwear Tuck In Method - How to Tuck In Dress Shirt Inside Pant?
Briefs ஜட்டிக்குள் Shirt யை Tuck In செய்து நேர்த்தியாக Shirt அணிவது எப்படி?
Classic Shirt Stays யைப் போல, இந்த முறையே பரவலாக ஆண்டாண்டு காலமாக ஆண்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உங்கள் Pant இன் நிறத்தை ஒத்த Waistband வைத்த ஜட்டி அணியாவிட்டால், இறுக்கமாக Pant அணியாவிட்டால்(இடுப்புப் பகுதி தளர்வாக) உங்கள் ஜட்டி/ஜட்டியின் Waistband வெளியே எட்டிப் பார்க்கும்.
சட்டையை ஜட்டியினுள் Tuck In செய்ய விருப்பம் இல்லை என்றால், சட்டையை உங்கள் உடல் அளவுகளுக்கு ஏற்றாற் போல டெய்லரிடம் கொடுத்து Alter செய்து விட்டு, பனியனை மாத்திரம் ஜட்டியினுள் Tuck In செய்யவும். இதன் மூலம் ஜட்டியின் Waistband டும், Pant இன் இடுப்புப் பகுதித் துணியும் தேவையான அளவு உராய்வைக் கொடுத்து சட்டை வெளியே வருவதை முடிந்த வரை தடுக்கும்.
தற்காலத்தில் Pant இன் இடுப்புப் பகுதியில், அதிக உராய்வை ஏற்படுத்தக் கூடிய பட்டியுள்ள(Grip Tape) Pant களும் விற்பனையாகின்றன.
விரும்பினால் Grip Tape யை தனியாக வாங்கி டெய்லரிடம் கொடுத்து கூட தைத்துக் கொள்ளலாம்.
சில ஆண்கள் சட்டையை Boxer Briefs or Trunk ஜட்டியின் கால் ஓட்டைகளுக்குள்ளும்(Leg Openings) Tuck In செய்வதுண்டு. ஆனால், அந்த அளவுக்கு உங்கள் சட்டை நீளமாக இருப்பது அவசியமாகும்.
குறிப்பு:
Underwear Tuck-In முறை மூலம் அணிந்திருக்கும் சட்டையை பேண்டினுள் Tuck-In செய்யும் ஆண்கள், அவர்களின் கையை மேலே தூக்கும் போது ஜட்டியின் Waistband அணிந்திருக்கும் Pant இற்கு வெளியே எட்டிப் பார்க்காமல் இருக்க, ஜட்டிக்குள் சட்டை மற்றும் பனியனை Tuck-In செய்த பின்னர், ஜட்டியின் Waistband யை கீழ் நோக்கி மடித்தி விட வேண்டும். இதன் மூலம் ஜட்டியின் Waistband, Pant ற்கு வெளியே எட்டிப்பார்ப்பதைக் குறைக்கலாம்.
Short Sleeve Shirt யை ஜட்டிக்குள் Tuck In செய்யலாமா?
இல்லை. Long Sleeve Shirt போன்று அது அடிக்கடி வெளியே வராது. ஆகவே ஜட்டிக்குள் அதனை Tuck In செய்வதைத் தவிர்க்கலாம்.
Other Methods of Tucking In Dress Shirt inside Dress Pant
முன்பக்கம் உடலுடன் ஒட்டியது போன்ற தோற்றத்தை, Pony Tail போல பின்பக்கம் சட்டையை பிடித்து இழுத்து திருகி உருவாக்கி Tuck In செய்யும் முறை:
Dress Shirt யை Tuck In செய்வதற்கு உதவியான Gadgets:
Shirt Stays Belt, NV Holders, Suspenders, Shirt Stays போன்றவற்றையும் Models போல தமது Look யை மேம்படுத்த விரும்பும் ஆண்கள் பயன்படுத்துவது சிறந்தது.
திருமணம் போன்ற விஷேட தினங்களில் அணியலாம். ஆனால் அன்றாடம் பாவிப்பதில் சில அசெளகரியங்கள் காணப்படுகின்றன.
Suspenders அணிவதன் மூலம் உங்கள் Pant இனை இடுப்பில் நிலையாக ஒரு இடத்தில் வைத்திருக்கலாம்.
ஆண்கள் Dress Shirt யை Tuck In செய்யப் பயன்படுத்தும் Gadgets
Shirt Stays அல்லது Garters யைப் பாவித்து Shirt யை நேர்த்தியாக Tuck In செய்து அணிவது எப்படி?
Magnetic Shirt Stays by Magnetuck, இந்த வகை Shirt Stays கள் காந்தத்தினால் உருவான பொத்தான்களை வைத்து சட்டையை வெளியே வராத வகையில் Pant இனுள் தடுக்கும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் இவற்றின் காந்த பலம் குறைவாக இருப்பின் அவை கழன்றுவிடும்.
ஆண்கள் Shirt Stay Belt/Tuck-It Belt அணிவது எப்படி?
Shirt Stay Belt/Tuck-It Belt யை Pant இன் இடுப்புப் பகுதிக்குக் கீழ்(Belt அணியும் பகுதி) இருக்கும் வகையில் அணிய வேண்டும்.
Index Fingers(ஆள்காட்டி விரல்கள்) யை வைத்து சட்டையில் கசங்கல் இல்லாத வகையில் முன் பக்கமும், பின் பக்கமும் இழுத்து விடவும்.
அணிந்திருக்கும் சட்டையின் மேலதிக துணிகளை, Military Tuck In செய்வது போல, கைகளுக்குக் கீழே மறையும் வகையில், சட்டையின் இரு புறமும் சம அளவில் இருக்கும் வண்ணம் சொருகவும்.
Rubber Band Method: மேலதிகமான Fabric யை சட்டையின் பின் பக்கம் Rubber Band இன் உதவியுடன் கட்டிப் போட்டு Pant இனுள் சட்டையை Insert செய்யும் முறை இதுவாகும்.
Safety Pins, அணிந்திருக்கும் சட்டையை ஜட்டியின் Waistband இனுடோ அல்லது சட்டையை இடுப்புக்குக் கீழ் இறுக்கமாக்கும் வகையிலோ, Safety Pins பாவித்து இருபக்கமும் குத்துவது Safety Pin ஆகும். அதிகமாக உடலை அசைத்து வேலை செய்யும் ஆண்களுக்கு இந்த முறை சிறந்ததல்ல. அதிகமான அசைவை ஏற்படுத்துவதன் மூலம், Safety Pins நீங்கள் அணிந்திருக்கும் சட்டை, ஜட்டியை கிழிக்கலாம்.
Short Sleeve Shirts இற்கு இந்த மாதிரி Shirt வெளியே வரும் பிரச்சனை இருக்காது. Long Sleeve Shirts அணியும் போது தான் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும். Long Sleeve Shirts இன் கைகளையும் Short Sleeve Shirts இன் கைகளைப் போல மடித்து(Roll Up) சிறிதாக்கலாம்.
Dress Pant மட்டுமல்ல, ஜீன்ஸ் அணியும் போதும் நீங்கள் அணியும் Dress Shirt/Casual Shirts/T-Shirts போன்றவற்றை Tuck-In செய்யலாம்.
How to fold Long Sleeve Shirts?
Comments
Post a Comment