வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம்.
வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும்.
கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?
ஆண்களுக்கு இரவில் ஜட்டி அணிந்து தூங்கும் பழக்கம் இருந்தால், இரவு தூக்கத்தில் விந்து வெளியேறினால், அது நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் நேரடியாக விந்துக் கறையை ஏற்படுத்தாது. காலையில் எழுந்ததும் ஜட்டியை மாத்திரம் நன்கு துவைத்து அலசினால் போதும்.
ஆண்கள் தமது ஆடைகளில் படிந்திருக்கும் விந்துக் கறைகளை அன்றன்றே துவைத்து அலசி சுத்தம் செய்ய வேண்டும். விந்துக்கறைகளை அலசி அகற்றாவிட்டால் அவை ஆடைகளில் நிரந்தரமாக படிந்து விடவும் வாய்ப்பு உள்ளது. அதே நேரம் விந்துக் கறை படிந்த ஆடைகளில் விந்து வாடை வீசும்.
தூக்கத்தில் விந்து வெளியேறினால் அவசியம் காலையில் குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் போது அந்தரங்கப் பகுதிகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உங்களைச் சூழ விந்து வாடை வீசும்.
உள்ளே ஜட்டி அணிந்து வேட்டி/லுங்கி போன்ற ஆடை அணிந்து தூங்கும் போது உங்களை அறியாமல் அவை அவிழ்ந்தால் கூட, உங்கள் மானத்தை நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி காப்பாற்றும்.
வயதுக்கு வந்த ஆண்கள் தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கினால் விந்து உற்பத்தி பாதிக்காதா?
மிகவும் இறுக்கமான ஜட்டி அணிந்தால், அல்லது இறுக்கமான ஜட்டி அணிந்து தூங்கினால் மட்டுமே அசெளகரியமாக இருக்கும் அதே வேளை விந்து உற்பத்தியும் பாதிப்படையும்.
எவ்வாறான ஜட்டி அணிந்து ஆண்கள் தூங்கலாம்?
அன்றாடம் பயன்படுத்தும் Perfect Fitting(உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற) ஜட்டி அணிந்து தூங்கலாம். உதாரணமாக Briefs, Trunks, Boxer Briefs
குறிப்பு: காலையில் குளித்து விட்டு அணிந்த ஜட்டியை இரவு தூங்கும் முன்னர் கழட்டுவது அவசியம். அதில் அதிகம் வியர்வை படிந்திருக்கும். அதனுடனேயே இரவு தூங்குவது நல்லதல்ல.
விரும்பினால் தூங்குவதற்கு என பிரத்தியேகமான சற்று தளர்வான ஜட்டியைக் கூட பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment