Formal Dress, Suit அணியும் போது கழுத்துப்பட்டி(Tie) அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் அது அவற்றுடன் சேர்ந்த ஒரு அணிகலனாகும்.
அகலமான Tie உடல் பருமன் அதிகமான ஆண்களுக்கும், அகலம் குறைவான Tie மெலிந்த அல்லது நடுத்தரமான உடல் பருமன் உடைய ஆண்களுக்கும் சிறந்தது.
அனைத்து ஆண்களும் YouTube பார்த்தாவது தங்களுக்கு பிடித்த ஒரு முறையில் Tie கட்டப் பழகியிருப்பது அவசியமாகும். Tie கட்ட ஆயிரம் முறை இருந்தாலும் அதில் எல்லா முறையும் எல்லாருக்கும் அழகாக இருக்காது. கட்டிப் பார்த்து எது உங்களுக்கு அழகாக இருக்கிறது என முடிவு செய்வது நல்லது.
சட்டையின் நிறத்தை ஒத்த நிறமல்லாது Contrast ஆன நிறங்களில் Tie யைத் தெரிவு செய்து அணிவது சிறந்தது. இந்தக் கலர் சட்டைக்கு இந்தக் கலர் Tie Match ஆகும் என்று எந்த கணக்கும் இல்லை. Tie இன் நிறம் உங்கள் தனிப்பட்ட விருப்பம். கண்ணாடியைப் பார்த்து முடிவு செய்யவும். Pattern/Design Tie களும் Plain Shirts அணியும் போது அணியலாம்.
Tie யின் வாலின் நீளத்தைக் கூட்டிக் குறைப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்ற அளவில் Tie கட்டலாம். Tie கட்டிய பின்னர் Tie யின் வாலை சட்டையினுள் அல்லது Tie யின் பின்னால் இருக்கும் பாக்கெட்டினுள் விடுவது சிறந்தது.
நாம் அணியும் Tie இன் இரு மூலைகளும் Waistband இன் மேல்பகுதியைத் தொட வேண்டும், அதே நேரம் Tie இன் கூரான பகுதி Belt Buckle இன் நடுவில்/Waistband இன் நடுவில் அமைய வேண்டும்.
அணிந்திருக்கும் சட்டையின் Buttons, Pant Zip, Tie இவை மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைய வேண்டும். Tie Bar பயன்படுத்துவதன் மூலம் Tie யை சட்டையுடனேயே இருக்கும் வகையில் நிலைப்படுத்தலாம். சிலர் பேனையின் மூடியை Tie Bar ஆகப் பயன்படுத்துவதுண்டு.
Comments
Post a Comment