கிரிக்கெட்(Cricket), ரக்பி(Rugby), கால்பந்தாட்டம்(Foot Ball) போன்ற வெளிக்கள விளையாட்டுக்களில் ஈடுபடும் ஆண்கள் தங்களது ஆண்குறி, விதைகள், அடிவயிறு போன்ற உடற்பாகங்களில் பாரதூரமாக அடிபடுவதைத் தவிர்க்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் Ball Guard அணிவர்.
Ball Guard இனை Cricket Box, Abdominal Guard, L Guard, Cup, Box, Compression Cup, Abdo Guard எனவும் அழைப்பர். Ball Guard அநேகமாக ஒரு Cup போன்ற வடிவத்தில் இருக்கும்.
Ball Guard யை எப்படி அணிவது?
Ball Guard இனுள் ஆண்குறி, விதைகள் இருக்கும் வண்ணம் Ball Guard யை ஆண்கள் ஜட்டிக்குள் வைத்து அணிவர். Ball Guard அணியும் போது முடிந்தவரை ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடி Ball Guard இக்கு வெளியே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் ஆண்குறி, விதைகளுக்குத் தேவையான இடவசதியை Ball Guard இனுள் பெற்றுக் கொள்ளலாம்.
Ball Guard இல் துளைகள் இருப்பது ஆண்குறி மற்றும் விதைகள் காற்றோட்டமாக இருக்கவாகும்.
சில ஜட்டிகளில் Ball Guard வைப்பதற்கு என்றே Pouch(மறைவான பை) இருக்கும். சில ஆண்கள் அன்றாடம் பாவிக்கும் Briefs, Boxer Briefs, Trunk வகை ஜட்டியை அணிந்து அதன் மேல் பட்டியுடன் கூடிய(Abdominal Guard with Straps) Ball Guard யை அணிவதுண்டு. பட்டியுடன் கூடிய Ball Guard யை இறுக்கமாக அணிய மறக்கக் கூடாது.
Ball Guard வைக்க Pouch இல்லாத அன்றாடம் பாவிக்கும் ஜட்டியின்(Briefs, Boxer Briefs, Trunk) உதவியுடன் Ball Guard அணிவது ஆபத்தானது.
Ball Guard அணியப் பயன்படுத்தும் ஜட்டியில் இருக்க வேண்டிய சிறப்பம்சங்கள்:
1. முன் பக்கம் தேவையான அளவு இடவசதி
2. இறுக்கமான இலாஸ்டிக் பட்டிகள்
3. உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற பொருத்தமான ஜட்டி - நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டி தொய்வாக இருக்கக் கூடாது.
Ball Guard பல்வேறு அளவுகளில் உள்ளது. உங்கள் இடுப்பு அளவை வைத்து உங்களுக்கு ஏற்ற Abdominal Guard யைத் தெரிவு செய்யவும்.
ஆண்குறி, அடிவயிறு, விதைகளைப் பாதுகாக்க அணியும் Ball Guard பல்வேறு வடிவங்களில் உள்ளது. உங்களுக்கு செளகரியமானதைத் தெரிவு செய்து அணிவது நல்லது.
Keywords: ஸ்போர்ட்ஸ் ஜாக் ஸ்ட்ராப் மற்றும் கப்
Comments
Post a Comment