ஆண்கள் Formal Dress or Dress Shirt and Dress Pant அணியும் போது கட்டாயம் Tie(கழுத்துப் பட்டை/கழுத்துப் பட்டி) அணிய வேண்டும் என்று இல்லை. அது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆண்கள் Tie அணியும் போது அந்த Tie நமது Belt யைத் தொட்டுக் கொண்டோ அல்லது Belt Buckle இன் நடுப்பகுதியைத் தொட்டுக் கொண்டோ இருக்கும் வகையில் அதன் நீளம் இருக்க வேண்டும். அதற்குக் குறைந்தாலோ அல்லது கூடினாலோ பார்ப்பதற்கும் அழகாக இருக்காது, அதே நேரம் நீங்கள் Tie யை பிழையாக அணிந்திருக்கிறீர்கள் என்பது அர்த்தம்.
மெல்லிய/ஓரளவுக்கு பருமனான ஆண்கள் ஒடுங்கிய Tie யைத் தெரிவு செய்து அணிவது சிறந்தது. அதிக நிறை கூடிய/பருத்த ஆண்கள் அகலமான Tie யைத்த் தெரிவு செய்து அணிவது நல்லது.
வெள்ளை, கருப்பு, சாம்பல், சிவப்பு, கரு நீலம் நிற Tie களை நம்மால் எந்த நிற சட்டையுடனும் அணிய முடியும். ஆனால் மற்றைய நிற Tie களை எல்லா நிற சட்டைகளுடனும் அணிய முடியாது.
Dark கலர் சட்டை அணியும் போது Light கலர் Tie யைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.Light கலர் சட்டை அணியும் போது Dark கலர் Tie யைத் தெரிவு செய்து அணிய வேண்டும். இவ்வாறு Contrast காட்டாது Tie அணியக் கூடாது.
எல்லா ஆண்களுக்கும் Pattern/Design போட்ட Tie அழகாக இருக்காது. Tie அணிந்த பின்னர், அதன் பின் உள்ள அதன் வால் பகுதியை Tie இன் பின் புறம் உள்ளா பாக்கெட்டில் புகுத்த வேண்டும், இல்லாவிட்டால் சட்டையினுள் விட வேண்டும்.
Tie அணிந்த பின்னர், அணிந்திருக்கும் Tie எப்போதும் சட்டையுடன் ஒட்டியபடி இருக்க Tie Clip பயன்படுத்த வேண்டும். விரும்பினால் பேனையின் மூடியையும்(Cap) பயன்படுத்தலாம்.
பல வகையான மூறையில் வித்தியாசமாக Tie அணியலாம். ஆனால் அனைத்தும் அனைவருக்கும் அழகாக இருக்காது. சில வகை Tie கட்டும் முறை ஏதாவது விசேட நிகழ்வுகளுக்கு மாத்திரமே பொருந்தும்.
மற்றும் படி உங்களுக்குப் பிடித்த, அன்றாடம் இலகுவாக அணியக் கூடிய ஒரு Tie கட்டும் முறையை பழகி வைத்திருப்பது அவசியமாகும்.
Comments
Post a Comment