வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி போன்ற ஆடைகளை அணியும் போது அவர்களின் Purse, Phone, Car/House Keys போன்றவற்றை கையிலேயே வைத்துக் கொண்டு இருக்கு அதிகம் சிரமப்படுவார்கள். சில நேரம் கையில் வைத்திருந்த Purse, Phone யை எங்கேயாவது மறந்து வைத்து விட்டு தேடிய சம்பவங்களும் நிறைய நாம் அனுபவித்து இருக்கலாம்.
வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது Purse, Phone யை எப்படி எங்கே வைப்பது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது உள்ளே மெல்லிய துணியினால் ஆன பாக்கெட் வைத்த Shorts அணிந்தால், அதனுள் வைக்கலாம். அதற்காக ஜட்டி அணியாமல் Shorts மட்டும் அணிய வேண்டாம்.
சில Boxer Shorts ஜட்டிகளில் பின் பக்கம் Purse வைக்கக் கூடிய பாக்கெட் உள்ளது.வேட்டியினுள் அணியும் Shorts மெல்லிதாக இருக்க வேண்டும். அதே நேரம் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் இருக்க வேண்டும்.
வேட்டியினுள் Shorts அணியும் போது அதனுள் Briefs ஜட்டி அணிவதன் மூலம் ஆண்குறி/விதைகளுக்குத் தேவையான Support யைப் பெற்றுக்கொள்ளலாம்.
2. தற்காலிகமாக Purse, Phone போன்றவற்றை இடுப்பில் உள்ள வேட்டி, லுங்கி/சாரத்தின் கட்டினுள் சொருகி வைக்கலாம். Belt அணிந்திருந்தால் இன்னும் அதிக பாதுகாப்பாக இருக்கும்.
Money Belt(Iyappan Belt) அணிந்தால் அதில பணம் வைக்க சிறிய பை இருக்கும்.
Purse, Phone போன்றவற்றை இடுப்பில் உள்ள வேட்டி, லுங்கி/சாரத்தின் கட்டினுள் சொருகி வைக்கும் போது முழுமையாக வேட்டி, லுங்கியின் கட்டில் மாத்திரம் அதனை தங்க வைக்காது, பாதி நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் இருக்கும் வகையில் சொருகினால் அது உங்களை அறியாமல் கீழே விழாது.
3. வேட்டி, லுங்கி/சாரம் போன்றவற்றை முழங்கால்களுக்கு மேல் மடித்து, இடுப்பில் இறுக்கமாக கட்டிவிட்டு, அந்த மடிப்பினுள் Purse, Phone போன்றவற்றை வைக்கலாம்.
4. ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகள் அதாவது Velcro Pocket வேட்டிகளில் பாக்கெட் இருக்கும். அவற்றினுள் Purse, Phone போன்றவற்றை வைக்கலாம்.
5. வேட்டி, லுங்கி/சாரம்/கைலி கட்டும் போது பாக்கெட் போன்ற அமைப்பு வைத்துக் கட்டுவதன் மூலம் அதனுள் Purse, Phone போன்றவற்றை வைத்து இடுப்புப் பகுதியில் உருட்டி விடலாம்.
அணியும் வேட்டியில்/லுங்கியில் ரகசியப்பையை உருவாக்க அரைஞாண்கயிற்றையும் பயன்படுத்தலாம்.
6. அப்படி பாக்கெட் போன்ற அமைப்பு உருவாக்க கடினமாக இருந்தால், வேட்டி/லுங்கி கட்டிய பின்னர் ஏதாவது ஒரு பக்கத்தில் Purse அல்லது Phone, அல்லது இரண்டையும் வைத்து (மேலிருந்து கீழாக) அதன் மேல் வேட்டியை/லுங்கியை உருட்டி விடலாம்.
வழமையாக வேட்டியின் ஒரு முனையை இடது பக்க இடுப்பில் வைத்துக் கொண்டு, அதன் மற்றைய முனையை அதன் மேலாக வலது பக்க இடுப்பில் கொண்டு போய் இறுக்கமாக சொருகிய பின்னர் கீழ் நோக்கி சட்டையின் கையை மடிப்பது போல இடுப்புப் பகுதியில் மடிப்பை உருவாக்கியே வேட்டியின் கட்டை உறுதியாக்குவோம்.
அவ்வாறு மடிக்கும் போது கால்களுக்கு நடுவே அமையுமாறு இருக்க Purse யை அடிவயிற்றுப் பகுதியில் வைத்து அதன் மேல் இரண்டு முறை வேட்டியை உருட்டி மடித்து விடுவதன் மூலம் வேட்டியின் கட்டும் உறுதியாக இருக்கும், Purse யையும் வைத்தது மாதிரி இருக்கும்.
கால்களுக்கு நடுவே அமையுமாறு Purse யை வைத்ததால் உட்கார வசதியாக இருக்கும். அதே வேளை, உங்கள் Phone யை வலது/இடது பக்க இடுப்பில் இருக்கும் வேட்டி/லுங்கியின் கட்டினுள் (ஜட்டியினுள் பாதி இருக்கும் வகையில்) சொருகலாம்.
இவ்வாறு Purse யையும் Phone யையும் சொருகிய பின்னர் அதன் மேல் வேட்டியில் சால்வையை ஒரு துண்டு போல கட்டி தேவையான மறைப்பை ஏற்படுத்தலாம்.
முன்பக்கம் வைப்பதைப் போலவே சில ஆண்கள் இடுப்பில் வேட்டியை அல்லது லுங்கி/சாரத்தை இறுக்கமாகக் கட்டி பின் பக்கம் Purse, Phone போன்றவற்றை சொருகி வைப்பர், அல்லது அவற்றை வைத்து உருட்டி வைப்பர்.
7. வேட்டி, லுங்கி/சாரம்/கைலி கட்டும் போது பாக்கெட் வைத்த சட்டை அணிவதன் மூலம் Purse அல்லது Phone யை அதனுள் வைக்கலாம்.
8. வேட்டி, லுங்கி/சாரம்/கைலி கட்டும் போது அவற்றின் சால்வை/துண்டினுள் Purse, Phone போன்றவற்றை வைத்து சுற்றி இடுப்பில் கட்டலாம்.
9. சில ஜட்டிகளில்(Boxer Briefs) பாக்கெட்டுகள் இருக்கும். ஆனால் அவை பாதுகாப்பானவை அல்ல. அதே நேரம் பாக்கெட் வைத்த ஜட்டிகளை அணிவது எல்லோருக்கும் கவர்ச்சியாக இருக்காது.
அவை உங்கள் அந்தரங்கப் பகுதிக்குத் தேவையான Support யைக் கொடுக்காது. அவற்றின் பாக்கெட்டுகளுக்குள் பொருட்களை வைக்கும் போது அவை உப்பலாக வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது. அது உங்கள் தோற்றத்தைப் பாழாக்கும்.
10. 2 in 1 Phone Covers (Phone Covers with Purse) பாவிப்பதன் மூலம் Purse, Phone என தனியாக வேட்டி/லுங்கியினுள் சொருக வேண்டிய அவசியம் இருக்காது.
11. சில ஆண்கள் வேட்டி/லுங்கி அணியும் போது Purse யையும், சிறிய கைக்கடக்கமான Mobile Phone யையும் ஜட்டிக்குள் வைக்கிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஜட்டிக்குள் Mobile Phone யை வைக்கும் போது அதனை Switch Off செய்து விட்டு வைப்பது நல்லது.
Purse யையும் Phone யையும் ஜட்டிக்குள் வைக்கும் ஆண்கள், வேட்டியின் கட்டு ஜட்டியின் Waistband இன் மேல் இருக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவும். இல்லாவிட்டால், Purse யையும் Phone யையும் ஜட்டிக்குள் இருந்து வெளியே எடுக்க வேட்டியையும் கழட்ட வேண்டிய நிலை ஏற்படும்.
Comments
Post a Comment