Dress Pant, Shorts இல் கிடைக்கும் தோற்றத்தையும் கவர்ச்சியையும் அப்படியே தலைகீழாக மாற்றக் கூடிய ஆற்றல் இந்த ஜீன்ஸ் கொண்டுள்ளது. Dress Pant இல் பார்ப்பதற்கு சுமாராக இருக்கும் ஆண்கள் கூட தமக்கு ஏற்ற பொருத்தமான Jeans யை அணிந்திருக்கும் போது மிகவும் கவர்ச்சியாகத் தெரிவார்கள்.
ஆண்களுக்கான ஜீன்ஸ் நீலம் மற்றும் Shades of Blue, கறுப்பு மற்றும் Shades of Black, வெள்ளை, சாம்பல் ஆகிய நிறங்களிலும், தற்காலத்தில் வேறு நிறங்களிலும் கூட கிடைக்கிறது. ஆனால் எல்லா நிறங்களும் எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது.
ஆண்களுக்கான சில ஜீன்ஸில் ஜிப்(Zipper) இருக்கும், சிலவற்றில் ஜிப்பிற்குப் பதிலாக பொத்தான்கள்(Buttons) இருக்கும். பொத்தான்களோ அல்லது ஜிப்போ, ஒரளவுக்கு மேல் பெரிதாக இருந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கது.
அநேகமான ஜீன்ஸ்களில் ஜீன்ஸின் இடது/வலது பக்கமும் பின் பக்கமும் மாத்திரம் பாக்கெட்டுக்கள் இருக்கும். ஆனால் சில ஜீன்ஸ்களில் அளவுக்கு அதிகமான பாக்கெட்டுக்கள் இருக்கும்.
அவற்றை நாம் பயன்படுத்தும் சந்தர்ப்பமும் குறைவாகத்தான் இருக்கும். ஆகவே எப்போதும் ஜீன்ஸ் வாங்கும் போது குறைவான பாக்கெட்டுக்கள் உள்ள ஜீன்ஸைத் தெரிவு செய்யவும்.
சில ஜீன்ஸ்களைப் பார்க்கும் போது சின்னதாக, ஒடுங்கியதாக இருக்கும். ஆனால் அவற்றிலும் உங்கள் இடுப்பு அளவு குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
அவ்வாறான ஜீன்ஸ்களை அணிந்து பார்த்து வாங்குவது நல்லது. அதற்குக் காரணம், அவற்றின் துணிகள் ஈய்ந்து கொடுக்கக் கூடியதாக இருக்கலாம்.
நீங்கள் ஜீன்ஸ் அணியும் போது உங்களுக்கு அழகாக இருந்தால் எந்த நிற/எவ்வாறான Belt யையும் அணியலாம். ஆனால் ஜீன்ஸ்ற்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Belt களாக Webbed belt/Military belt/Skater Belt or Fabric Belts கள் உள்ளன.
நீங்கள் ஜீன்ஸ் அணியும் போது அது உங்கள் இடுப்பில் எங்கும் தங்குகிறது என்பதை ஜீன்ஸின் Rise முடிவு செய்கிறது.
Low Rise/Hip Jeans அணிந்தால் அது இடையில் தான் தங்கும். இவ்வகை ஜீன்ஸ் அணியும் போது Low Rise ஜட்டிகளைத் தெரிவு செய்து அணியாவிட்டால் பாதி ஜட்டி ஜீன்ஸிற்கு வெளியே தான் இருக்கும்.
அதே நேரம் Low Rise/Hip Jeans அணியும் போது Belt அணிந்தே ஆகவேண்டுமா என்பதை உங்கள் செளகரியத்தைப் பொறுத்து முடிவு செய்யவும். ஏன் என்றால் இடையில் இறுக்கமாக Belt அணிந்தால் இயல்பாக நடக்கவோ, இருக்கவோ முடியாது. Low Rise/Hip Jeans வாங்கும் போது உங்க Size இற்கு ஒரு Size கம்மியாக வாங்கினால் Belt அணிய வேண்டிய அவசியம் இருக்காது.
Comments
Post a Comment