ஆண்கள் சிறுவயது முதலே Kerchief(கைக்குட்டை) பாவிக்கப் பழக வேண்டும். முக்குத் துடைப்பது முலம் கை துடைப்பது வரை Kerchief பாவிக்கப் பழக வேண்டும். அதை விடுத்து நீங்கள் அணிந்திருக்கும் ஆடையியை கை துடைக்க, முகம் துடைக்க, முக்குத் துடைக்கப் பயன்படுத்துவது அழகல்ல.
சாப்பிட உட்காரும் போது உங்கள் கைக்குட்டையை மடி மீது விரித்து விட்டு சாப்பிடுவதன் மூலம் சாப்பாடு சிதறி உங்கள் ஆடையில் கறை ஏற்படாது.
வெள்ளை வேட்டி, அல்லது வெள்ளை நிற Jeans/Pant போன்ற ஆடைகளை அணிந்து எங்கேயாவது கீழ உட்கார வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் Kerchief விரிந்து, அதன் மேல் உட்காருவதன் மூலம் அணிந்திருக்கும் வெள்ளை ஆடையில் கறை ஏற்படாது பாதுகாக்கலாம்.
ஆண்கள் எவ்வாறான Kerchief யை தெரிவு செய்ய வேண்டும்?
1. நீங்கள் தெரிவு செய்யும் Kerchief வெள்ளை நிறமாக இருக்கக் கூடாது. அதே நேரம் அதிக நிறமுடைய வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் இருக்கக் கூடாது.
2. இலகுவில் காயக் கூடிய அளவிற்கு மெல்லியதாக இருக்க வேண்டும்.
3. பாக்கெட்டில் மடித்து வைக்கும் போது அதிகம் உப்பலாக வெளியே தெரியக் கூடாது.
Comments
Post a Comment