ஆண்களுக்கான Dress Pant இல் இரண்டு வகை உள்ளது. ஒன்று Pleated Pant(முன் பக்கம், வலது/இடது பாக்கெட்டுகளுக்கு அருக்கில் ஒரு கோடு போன்ற அமைப்பு) மற்றையது Flat-front Pant(முன் பக்கம் எந்தொவொரு வடிவமைப்பும் இல்லாமல் தட்டையாக இருக்கும்.
ஆண்கள் Dress Pant அணியத் துவங்கிய ஆரம்பகால கட்டத்தில் Pleated Pant கள் தான் அதிகம் அவர்களின் தெரிவாக இருந்தது. ஆனால் Flat-front Pant வந்தவுடன் ஆண்களின் தெரிவு Flat-front Pant பக்கம் சென்றவுடன் தற்காலத்தில் Pleated Pant யை ஆண்கள் ஒதுக்கு வைப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
உண்மையில் Pleated Pant யை ஆண்கள் ஒதுக்குகிறார்களா?
இல்லை. இன்றும் Pleated Pant யை விரும்பி அணியும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்குக் காரணம், Flat-front Pant எல்லா ஆண்களுக்கும் கவர்ச்சியாக இருப்பதனால் ஆகும். ஆனால் அதற்காக அவர்கள் Pleated Pant யை வாங்குவதில்லை.
மாறாக Flat-front Pant யை வாங்கி அதனை அயன் செய்யும் போது Pleat வைத்து அயன் செய்து அணிகிறார்கள். சிலர், டெய்லரிடன் கொடுத்து அயன் செய்ய வசதியாக மேலோட்டமாக Pleat வைக்கிறார்கள்.
Pleated pants களின் அடிவயிற்றுப் பகுதியில் அதிக இடவசதி இருக்கும், Athletic body type ஆண்களிக்கு மிகவும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். Flat-front pants மெல்லிய தேகமுடைய(Slim figure) ஆண்களுக்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.
தொப்பையுடைய, மிகவும் பெரிய குண்டிகளை உடைய ஆண்களுக்கு அவற்றை மறைக்க Pleated pants உதவியாக இருக்கும். Flat-front pants கள் அதிகம் Slim Fit ஆக உடலுடன் ஒட்டியது போல இருப்பதால் Bulge(ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவாக்கப்பட்ட மேடு/புடைப்பு) வெளித்தெரியும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.
Flat-front pants களின் துணி அதிகம் ஈய்ந்து கொடுக்கக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் ஆண்கள் தங்களின் உடல் அமைப்பை அப்பட்டமாக வெளிக்கட்டி தங்களின் கவர்ச்சியை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.
உங்களுக்கு Flat-front Pant சிறந்ததா? Pleated Pant அணிவது சிறந்ததா? என்பதை துணிக்கடைகளின்(Show Room) Trial Room கண்ணாடிகளால் மாத்திரமே சொல்ல முடியும். கடைக்குச் சென்று இருவகையான Pant களையும் தெரிவு செய்து Trial Room இல் அணிந்து பார்ப்பதன் மூலம் எது சிறந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
Chinos(சீனோஸ்) போன்ற காக்கி(Khakis) பேண்ட்களும், Denim ஜீன்ஸ்களும் அநேகமாக Flat-front Pant வடிவிலேயே இருக்கும். Chinos இக்கும் Khakis Pant இற்கும் இடையில் பெரிய வித்தியாம் இல்லை. Chinos Pant இன் துணி(100% Cotton or Cotton-Blend Fabric in a Tighter Weave) மிருதுவாக பாரமற்றதாக இருக்கும். Khakis Pant இன் துணி(Heavyweight 100% Cotton Twill Fabric) பாரமாக, தடிமன் கூடியதாக இருக்கும்.
ஆனால் ஒன்று Pleated Pant வாங்கினால் அதனை Flat-front Pant ஆக மாற்ற முடியாது. Flat-front Pant வாங்கினால் அதனை Pleat வைத்து அயன் செய்து Pleated Pant போல மாற்றலாம்.
Comments
Post a Comment