T-Shirt என்பது ஒரு Ready Made மேலாடையாகும். உங்கள் கழுத்து அளவு(Collar Size), மார்புச் சுற்றளவு(Chest Size), மற்றும் தோள் மூட்டில் இருந்து கீழ் நோக்கி எந்தளவுக்கு இருக்க வேண்டும் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் T-Shirt களைத் தெரிவு செய்கிறோம்.
T-Shirt இல் S, M, L, XL என குறிப்பிடப்பட்டிருந்தாலும் எல்லா T-Shirt Brands களும் ஒரே முறையாக அளவு முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. ஆகவே T-Shirt யை வாங்கும் முன் Trial Room இல் ஒருமுறை அணிந்து பார்ப்பதில் தவறில்லை, அணிந்து பார்க்க Trial Room இல்லை என்றால், விற்பனையாளரிடம் அளவு முறை பற்றி விசார்த்து வாங்கவும்.
நமது உடல் அளவுக்களுக்கு, அமைப்புகளுக்கு ஏற்ற பொருத்தமான T-Shirt எப்படி இருக்கும்?
உங்கள் இரு கைகளையும் மேலே தூக்கும் போது அணிந்திருக்கும் T-Shirt இன் நீளம் இடுப்புக்கு மேல் நிற்க வேண்டும். அதே நேரம் நீங்கள் அணிந்திருக்கும் Jeans/Pant இன் Button அல்லது அணிந்திருக்கும் Belt தெரிய வேண்டும்.
உங்கள் ஒரு கையினை மேலே தூக்கும் போது, உங்கள் இடுப்பு அல்லது ஜட்டியின் Waistband அல்லது Belt வெளித்தெரிய வேண்டும்.
அப்படி தெரியவில்லை என்றால் உங்கள் T-Shirt இன் நீளம் அதிகமாக இருப்பதாக அர்த்தம்.
T-Shirt இன் தோள் மூட்டும் உங்கள் தோள் முட்டும் கிட்டதட்ட ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
T-Shirt இன் இடுப்புப் பகுதி உங்கள் உடலுடன் ஒட்டிய வண்ணம் இருக்க வேண்டும். அதிகம் அகலமாக இருக்கக் கூடாது.
T-Shirt இன் இடுப்புப் பகுதியும், நெஞ்சுப் பகுதியும் அதிக இறுக்கமாக இருக்கக் கூடாது. அப்படி அதிகம் இறுக்கமாக இருந்தால் அணிந்த T-Shirt யை அதிகம் கஷ்டப்பட்டுக் கழட்ட வேண்டி ஏற்படும். சீக்கிரம் பிய்ந்து விடும்.
உங்கள் T-Shirt இன் நீளம் அதிகமாக இருந்தால் Jeans/Pant இனுள் Tuck-In செய்யலாம்.
உங்கள் T-Shirt இன் அகலம் அதிகமாக இருந்தால் டெய்லரிடம் கொடுத்து அதனை உங்கள் அளவுக்கு Alter செய்ய முயற்சிக்கலாம்.
சில T-Shirt இன் கழுத்து பெரிதாக இருந்தால் அதனூடாக உங்கள் பனியனின் Straps வெளித்தெரியும் வாய்ப்பு அதிகமாகும். அவ்வாறு வெளித்தெரிவதைப் பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. அது இயல்பானதே!
Comments
Post a Comment