ஆண்கள் பொதுவாக தமது தலைமுடியை எப்படி அழகு படுத்துவார்கள் என்று நோக்கினோம் என்றால், அநேகமான ஆண்கள் Hair Gel அல்லது Hair Wax யைப் பயன்படுத்தி அழகுபடுத்துவர். ஆனால் அவை எந்தளவுக்கு தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பிறகு தான் அனுபவரீதியாக உணர்கிறார்கள்.
Hair Cream என்பது Hair Gel மற்றும் Wax இற்குப் பதிலாகப் பயன்படுத்தும் தலைமுடியை அழகாக நேர்த்தியாக வைத்திருக்க பாவிக்கும் அழகுசாதனப் பொருளாகும். ஆண்களைப் பொருத்தவரையில் Hair Gel மற்றும் Wax யை விட Hair Cream பாவிப்பது தலைமுடிக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பெயரைப் போலவே இதன் நிறம் வெள்ளையாக Cream போல இருக்கும். நறுமணம் சேர்க்கப்பட்டுள்ளதால் இதனைப் பூசிய பின்னர் உங்கள் தலை முடியில் இருந்து நல்ல நறுமணம் வீசும்.
இது Hair Gel யைப் போல முடியை ஒரு நிலையில் திடமாக்கி வைத்திருக்காது. மிகவும் Soft ஆக வைத்திருக்கும். Hair Cream நமது முடிக்கு இயற்கையான பளபளப்பு, இயற்கையான அசைவையும், இயற்கையான தோற்றத்தையும், இயல்பான பிடிப்பையும்(minimal hold) கொடுக்கும். Hair Cream களில் ஊட்டச்சத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் உங்கள் தலை முடிக்கு அழகைக் கொடுப்பதுடன் மட்டுமல்லாது ஊட்டச் சத்தையும் கொடுக்கின்றது.
Hair Cream, Wax போன்று எண்ணெய் தன்மை அற்றது. இதனை பூசிய பின்னர் பிசு பிசுப்பாக இருக்காது. அதே நேரம் உங்கள் தலை முடியை இறுக்கமாக்கி தலை முடியின் எடையைக் கூட்டாது. Hair Cream யை காய்ந்த தலைமுடியிலும்(dry hair) பூசலாம். அதே நேரம் தலையில் குளித்த பின்னர் துவாயால் தலைமுடியின் ஈரத்தை துவட்டிய பின்னரும்(damp hair - ஓரளவு ஈரப்பதனுள்ள முடி) பாவிக்கலாம்.
Hair Cream ஆனது வரண்ட கூந்தலில் சிறப்பாக செயற்படும். இருப்பினும் துவாயினால் ஈரத் தலைமுடியை துவட்டிய பின்னரும் பயன்படுத்தலாம்.
Hair Cream யைப் பயன்படுத்துவது எப்படி?
தலைக்குக் குளித்த பினர் பூசுவதாக இருந்தால், முதலில் ஈரமான தலை முடியை உலர்ந்த துவாயால் துவட்டவும்.
உங்கள் விரல் நுனியின் அளவு Hair Cream யை எடுக்கவும். தேவை ஏனின் பின்னர் மேலும் சிறிதளவு உங்கள் தலைமுடியின் அளவை வைத்து எடுக்கலாம்.
அதனை உள்ளங்கையில் வைத்து இரு கைகளையும் தேய்த்து சற்று வெப்பமாக்கவும். இதன் மூலம் இலகுவில் பூசக் கூடியதாக இருக்கும்.
உங்கள் விரல்களை தலைமுடிக்குள் விட்டு முடியின் அடியில் இருந்து நுனி வரை பூசவும். உங்கள் தலை முழுவது பூசுவதை உறுதி செய்யவும்.
பின்னர் கைகளால் விரும்பிய வ்கையில் தலை முடியை அழங்கரிக்கவும்.
Hair Cream யை வேறு அழகுசாதனப் பொருட்களுடனும் பாவிக்கலாம்.
Hair Styling Creams, Gels, Wax, Hair Spray என எதைப் பாவித்தாலும் இரவு அப்படியே தூங்கச் செல்லாமல், தலைமுடியை நல்ல ஷம்பூ(Shampoo) போட்டு கழுவி பின்னர் கண்டிஷனரும்(Conditioner) பாவித்து விட்டு தலை முடியை நன்கு அலசிய பின்னர் குளித்து விட்டு தூங்கச் செல்லவும். இதன் மூலம் அழகுசாதனப் பொருட்களின் பாவனையால் தலைமுடி பழுதடைவதைக்(Damage) குறைக்கலாம்.
Comments
Post a Comment