நாம் அன்றாடம் பாவிக்கும் Mobile Phones/Smartphones தற்போது பல்வேறு அளவுகளில் நமது தேவைக்கேற்ப கிடைக்கிறது. அவற்றை நாம் எப்படி கொண்டு திரிவது?
உங்கள் Jeans/Pant Side Pockets களில் உங்கள் Phone யை வைக்கலாம். ஆனால் நீங்கள் அணியும் Jeans/Pant இன் துணியின் தடிமன் அதிகமாக இருந்தால் உங்கள் Smartphone இன் Speaker Hole பகுதி வெளியே இருக்கும் வகையில் பேண்டின் பாக்கெட்டுக்குள் Phone யை வைக்க வேண்டும். இதன் மூலம் Phone Ring ஆகும் போது அந்த சத்தம் எந்தவொரு தடையும் இல்லாமல் நமக்குக் கேட்கும்.
உங்கள் Phone இல் Vibration Mode யை On செய்திருப்பது அவசியம் ஆகும். இதன் மூலம் Phone Ring ஆகும் சத்தம் உங்களுக்குக் கேட்காவிட்டாலும் அதன் அதிர்வினை உங்களால் உணரக் கூடியதாக இருக்கும்.
உங்கள் Smartphone இல் Lanyards இனை இணைத்து உங்கள் Pant இன் Belt நுழைக்கும் பகுதியுடன் இணைப்பதன் மூலம் தவறுதலாக கீழே விழுவதைத் தவிர்க்கலாம். அதே நேரம் ID Card போல கழுத்திலும் மாட்டியிருக்கலாம்.
அதே நேரம் உங்கள் Smartphone இன் Screen/Display உங்கள் உடல் பக்கம் இருக்கும் வகையில் வைப்பதன் மூலம் தெரியாமல் அடிபடும் போது Display உடைவதைத் தவிர்க்கலாம்.
வண்டி ஓட்டுப் போது சில ஆண்கள் தமது Smartphone யை சட்டையின் பாக்கெட்டில் வைப்பது உண்டு. அது ஆபத்தானதாகும். காரணம், வண்டியில் மேடு பள்ளங்களூடாக செல்லும் போது Smartphone Jump ஆகி தவறி கீழே விழலாம்.
ஆண்கள் Jeans/Pant பாக்கெட்டில் Phone வைத்தால் விந்து உற்பத்தி பாதிப்படையுமா? ஆண்மை பறிபோகுமா?
இவை எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இவ்வாறான விடையங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதிகம் ஆழமான பாக்கெட் உள்ள Jeans/Pant இனை அணிவதன் மூலம் உங்கள் Phone யை Jeans/Pant பாக்கெட்டில் வைத்தாலும் அது உங்கள் ஆண்குறி/விதைகளுக்கு அருகில் இருக்காது.
Tight Jeans/Pant அணியும் போது Phone யை Front Pocket இல் வைப்பது ஆபத்தானது. சில வேளைகளில் வளையலாம் அல்லது உடையலாம்.
ஆண்களுக்கான 2 in 1 Wallet(Phone கவருடன் கூடிய அல்லது Phone வைக்கக் கூடிய பேர்ஸ்) இனை நீங்கள் பாவித்தால் தனியாக Purse பாவிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. உங்கள் Phone யை பாக்கெட்டில் வைக்க வேண்டிய அவசியமும் இருக்காது. எப்போதும் கைகளியேலே வைத்திருக்கலாம். வண்டி ஓட்டும் போது வேண்டும் என்றால் Bag இல் வைத்திருக்கலாம்.
சில Jeans களில் Phone யை மறைத்து வைப்பதற்கென்றே பிரத்தியேகமான உள் பாக்கெட் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும்.
சில ஆண்கள் Phone யை ஜட்டிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு School/College இற்கு யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்வதுண்டு. அவ்வாறு கொண்டு செல்லும் பழக்கம் இருந்தால் அதனை Switch Off செய்து விட்டு ஜட்டிக்குள் வைக்கவும்.
வேட்டி, லுங்கி கட்டும் போது சில ஆண்கள் பாக்கெட் வைத்த Boxer Briefs ஜட்டி அணிவர். அதில் இருக்கும் பாக்கெட்டுக்களுக்குள் Purse, Phone போன்றவற்றை வைப்பர்.
ஆனால் அவ்வாறான ஜட்டி அணிவது தேவையற்றது. எப்ப பார்த்தாலும் வேட்டிக்குள்ள கையை விட்டுட்டு இருந்தால் பார்க்க நல்லாவா இருக்கும்?
அதே நேரம் அவ்வாறான ஜட்டிகளின் இலாஸ்டிக் தரமானதாக இல்லாவிட்டால் Purse, Phone இன் பாரத்திற்கு ஜட்டி கூட கழறும். உங்களை அறியாமலேயே கூட ஜட்டியின் பாக்கெட்டுக்குள் இருந்த Purse, Phone கீழே விழலாம்.
வேட்டி கட்டும் போது Purse யையும், Phone யையும் கைகளில் கொண்டு திரிவது உகந்தது.
Comments
Post a Comment