ஆண்கள் சாரம் அணிந்து தூங்குவது கிட்டத்தட்ட அவர்கள் நிர்வாணமாக தூங்குவதற்கு ஒத்ததாகும். ஒரு வயதுக்கு வந்த ஆண் நிர்வாணமாகத் தூங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அவை அனைத்தும் சாரம்(மூட்டிய லுங்கி) அணிந்து தூங்கும் போதும் கிடைக்கும்.
ஆண்கள் சாரம் அணிந்து தூங்கும் போது அவர்கள் நிம்மதியாகவும் முழுச்சுதந்திரத்துடனும் தூங்கினாலும், பல்வேறு அசெளகரியங்களுக்கு மற்றவர்கள் முகங்கொடுக்க வேண்டி ஏற்படும்.
அவற்றில் பிரதானமான ஒன்று தான் உங்கள் இடுப்பில் இருக்கும் சாரத்தின் கட்டு உங்களை அறியாமல் தூக்கத்தில் கழறுவதாகும்.
நீங்கள் சாரம் கட்டும் போது உள்ளே ஜட்டி அணியாவிட்டால் உங்கள் மானம் காலையில் காற்றில் பறக்கலாம்.
தனியறையில் அல்லது வீட்டில் தனியாக தூங்குவதாக இருந்தால் பிரச்சனை இல்லை.
ஆனால் கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்கள், தனியறையில் தூங்காத ஆண்கள் கட்டாயம் ஜட்டி அணிந்தே லுங்கி அணிந்து தூங்க வேண்டும்.
சாரத்தின் கட்டின் மேல் உங்கள் அரைஞாண் கயிற்றை விட்டு, சாரத்தின்(Lungi/Sarong) கட்டினை உறுதியாக்கலாம்.
அதே போன்று சாரத்தை பல வகைகளில் இடுப்பில் கட்டலாம். அடிப்படையான(Basic) சாரம் கட்டும் முறைகளிலேயே இவ்வாறான பிரச்சனைகள் உள்ளன.
பங்களாதேஷ், மியன்மார் ஆண்களைப் போல சாரம் கட்டினால் அவை இலகுவில் இடுப்பில் இருந்து கழறாது.
ஆண்கள் சாரம் அணிந்து தூங்குவதற்கு முன்னர் கால்களுக்கு நடுவே சாரத்தின் முன் பக்கத்தையும் பின் பக்கத்தையும் சேர்த்து முடிச்சுப் போட்டுக் கட்ட வேண்டும். இதன் மூலம் உங்களை அறியாமல் தூக்கத்தில் நீங்கள் கால்களை அகட்டி/தூக்கி வைத்தாலும் சாரம் விலகி சாரத்தின் கீழ் பகுதியூடாக உங்கள் அந்தரங்கம் வெளித்தெரியாது.
அதிகாலையில் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்குறி எழுச்சி உங்கள் சாரத்தில் அப்பட்டமாக கூடாரத்தை உருவாக்கும்.
சாரம் அணியும் போது உள்ளே ஜட்டி அணிவதன் மூலம் சாரத்தில் அதிகாலையில் கூடாரம் உருவாவதைத் தவிர்க்கலாம்.
அதே நேரம் சாரத்துடன் மாத்திரம் தூங்காமல் மேலே ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியினால் சாரத்தில் உருவாகும் கூடாரத்தை மறைக்கலாம்.
ஆண்கள் சாரம் அணியும் போது உள்ளே Low Rise Briefs/Hip Briefs (V-Cut ஜட்டி) அணிந்தால் மாத்திரமே உங்களால் சாரம் அணிந்ததன் முழு பலனையும் அனுபவிக்க முடியும்.
வேறு வகை ஆண்களுக்கான ஜட்டி அணிந்தால் சாரம் அணிந்ததன் முழு பலனையும் அனுபவிக்க முடியாது.
Comments
Post a Comment