பனியன் என்பது ஆண்களுக்கான உள்ளாடையாகும். அதை எந்த ஆடை அணியும் போதும் அவசியம் அணிய வேண்டும். பனியன் அணிவதன் மூலம் நாம் அணியும் ஆடையில் நேரடியாக வியர்வை ஊறி ஈரமாவதை தவிர்க்க முடியும்.
ஆனால் T-Shirt அணியும் போது பனியன் அணிய வேண்டுமா? இதில் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் இருப்பினும், T-Shirt அணியும் போதும் உள்ளே பனியன் அணிய வேண்டும். என்னதான் உடலுடன் ஒட்டியது போன்று, அல்லது உங்கள் கட்டழகை வெளிக்காட்டும் வகையில் இறுக்கமாக T-Shirt அணிந்தாலும், உள்ளே பனியன் அணியாவிட்டால் T-Shirt வியர்வையில் நனைந்து ஈரமானால் அதனைக் கழட்டுவதும் கடினமாக இருக்கும்.
அதே வேளை பார்ப்பதற்கும் அழகாக இருக்காது. வியர்வையில் ஈரமான T-Shirt யை நீண்ட நேரம் அணிந்திருக்கவும் முடியாது. உங்களைச் சுற்றி துர்வாடை உருவாக அதிக வாய்ப்பும் உள்ளது.
சில T-Shirt களின் துணி(fabric: Polyester, Nylon, Wool/Athletic Wear) மெல்லியதாக ஈய்ந்து கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்த வகை துணிகளில் தைத்த T-Shirt வியர்வையை உறிஞ்சாது, காற்றோட்டமாக இருக்கும். இந்த வகை துணிகளில் தைத்த T-Shirt யை அணிந்திருக்கும் போது, அது நமது உடலை அங்காங்கே உரசி கிளர்ச்சியை உருவாக்கும். அதிலும் குறிப்பாக மார்புக் காம்புகளை உரசி காமத் தீயை உருவாக்கும். இவ்வாறான T-Shirt அணியும் போது கட்டாயம் பனியன் அணிய வேண்டும்.
ஆண்கள் இறுக்கமான T-Shirt அணியும் போது கை வைக்காத பனியன் அணிந்திருந்தால், சில வேளைகளில் அதன் விளிம்பு(Outline) T-Shirt இனூடாக வெளித்தெரியும். அதனைத் தவிர்க்க கை வைத்த பனியன்(Undershirt with Short Sleeves) அணியலாம்.
Sports T-Shirts அணியும் போது பருத்தித் துணியினால் ஆன பனியனை அணிவதை விட Athletic Wear fabric இன் கலப்பில் உருவான பனியன்களைத் தெரிவு செய்து அணிவது சிறந்தது.
காலர் இல்லாத டீ-சேர்ட்(T-Shirt without Collar/Round Neck/V Neck) களை ஆண்கள் தெரிவு செய்யும் போது அவை மெல்லிய துணியில் செய்யப்பட்டிருந்தால், அதே நேரம் Light/Bright நிறங்களில் நீங்கள் டீ-சேர்ட் தெரிவுகளை மேற்கொண்டால், அவசியம் பனியன் அணிந்தே அவற்றை அணியவும். இல்லாவிட்டால், அவை சீக்கிரம் வியர்வையில் ஊறி, அங்காங்கே ஈரமாக வெளித்தெரியும். அதே நேரம் உங்கள் மார்புக் காம்புகள்/உப்பலான மார்புகள், தொப்பை என்பனவும் அதனூடாக வெளித்தெரியும். இவ்வாறான சந்தர்ப்பத்தின் போது ஆண்கள் பனியன் அணியாவிட்டால், உங்கள் மேலுடல் ஒரு Smooth ஆன தோற்றத்தில் வெளித்தெரியாது. அங்காங்கே மேடு, பள்ளமாக வெளித்தெரியும்.
நீங்கள் தெரிவு செய்யும் டீ-சேர்ட்களின் துணி சற்று தடிமனாக இருந்தால், உள்ளே பனியன் அணிவது அவசியமற்றதாகும்.
Comments
Post a Comment