அம்மணக் குண்டியாக முழு சுதந்திரத்துடன் இருக்க யாருக்கு தான் பிடிக்காது! ஆனால் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு காற்றோட்டமாக இருக்கவே லுங்கி, வேட்டி போன்ற ஆடைகள் நமது சமூகத்தில் தோற்றம் பெற்றன. இருப்பினும், வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிவது காலத்தின் கட்டாயம். ஆனால் எவ்வளவு நேரம் ஜட்டி அணிந்திருப்பது நல்லது? ஆண்கள் நாள் முழுதும் ஜட்டி அணிந்திருக்கலாமா? ஆம். உள்ளாடை அணிந்திருப்பது நல்லதே!
ஆனால் தவிர்க்க முடியாத சூழ் நிலை தவிர்ந்த ஏனைய தருணங்களில், ஒரு நாளின் 24 மணி நேரமும் "ஒரே" ஜட்டியை அணிந்திருக்கக் கூடாது.
அதற்காக வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாமலும் அதிக நேரம் இருக்கக் கூடாது. இதில் ஒருவரது தனிப்பட்ட விருப்பமும் உள்ளடங்குகிறது. சில ஆண்கள் தூங்கும் போது மாத்திரம் ஜட்டி அணிய மாட்டார்கள்.
அதே நேரம் நீங்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி அணியாமல் இருக்கலாம்.
ஆண்கள் ஜட்டி அணியாது இருப்பதை "Going Commando" என ஆங்கிலத்தில் சொல்வர்.
ஜட்டி போடாமல் இருக்க விரும்பாத ஆண்கள், குறைந்தது இரவு தூங்கும் போதாவது வேறு சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். காலையில் குளித்து விட்டு அணிந்த ஜட்டியுடனேயே தூங்கச் செல்வது நல்லதல்ல.
அதே நேரம் ஜட்டியை அடிக்கடி கழட்டி மாட்டுவதும் நல்லதல்ல. காலையில் அணிந்த ஜட்டியை இரவு தூங்கப் போவதற்கு முன்னர் தான் முழுமையாக கழட்ட வேண்டும்.
சில ஆண்கள் ஜட்டி அணியும் போது நன்றாக, ஜட்டியின் Waistband யை இடுப்புக்கு(Waist) மேலே தூக்கி இழுத்து அணிவர். அது நல்லதல்ல. ஆண்கள் அணியும் ஜட்டியின் Waistband அவர்களின் இடுப்பிலே தங்க வேண்டும். அதாவது Waistband, Waist லேயே தங்க வேண்டும்.
Low Rise வகை ஆண்களுக்கான ஜட்டியின் Waistband ஆனது இடுப்புக்குக் கீழே இடையிலேயே(Hip) தங்கும். அதனை மேலும் மேலே தூங்கி, இடுப்பில் அணிய முற்பட்டால் மிகுந்த அசெளகரியம் ஏற்படும். அவ்வாறு அணிந்து கொண்டு நீண்ட நேரம் இருக்க முடியாது.
கடுமையான குளிர்/பனிக்காலத்திலும், உடற்பயிற்சி செய்யும் போதும் மாத்திரமே Jockstrap ஜட்டியை ஆண்கள் அணிந்திருப்பது உகந்தது.
Jockstrap ஜட்டி அணிந்திருக்கும் போது உங்கள் ஆண்குறி, விதைகளால் சுதந்திரமாக இயங்க முடியாது.
நீண்ட நேரம் ஒரே நிலையில் ஆண்குறியும், விதைகளும் இருக்கும் போது நீங்கள் அசெளகரியமாக உணர அதிக வாய்ப்பு உண்டு.
நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருந்தால் அந்தரங்கப் பகுதியில் அதிக எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுவது தற்காலிகமானதே! அதே நேரம் நீண்ட நேரம் ஒரே ஜட்டியை அணிந்திருந்தால் அது வியர்வையில் ஊறி துர்மணத்தை(Bad Odor) உருவாக்கும்.
குளித்து விட்டு வேறு தளர்வான ஜட்டி அணிந்தால்(Optional) சரியாகிவிடும். உங்கள் தவறான ஜட்டி தெரிவும் இந்த அசெளகரியத்திற்கு காரணமாக இருக்கலாம்.
அன்றன்று அணிந்த ஜட்டியை அன்றிரவோ அல்லது அடுத்த நாள் காலையில் குளிக்கும் போதோ துவைத்து அலசிக் காயவிடுவதன் மூலம் உங்கள் ஜட்டியை அதிக காலம் பாவிக்கலாம்.
Comments
Post a Comment