குளிக்கும் போது நாம் தலைக்கு ஷாம்பூ போடுகிறோம், உடல் முழுதும் சவர்க்காரம் போடுகிறோம். இதனால் சுத்தத்தைப் பற்றி அச்சப்பட வேண்டிய தேவை இல்லை. இதன் காரணமாக நாம் உடலின் எல்லா பகுதிகளையும் ஒரே துவாயைப்(Towel) பயன்படுத்தி துடைக்கலாம்.
அந்தரங்கப் பகுதிகளைத் துடைக்க ஒரு துவாய், முதத்தைத் துடைக்க ஒரு துவாய், அதே போன்று தலைமுடியை துடைக்க ஒரு துவாய் என தனித்தனியாக துவாய்களைப் பயன்படுத்துவது ஆண்களைப் பொறுத்தவரையில் அநாவசியமாகும்.
அதே நேரம் ஒன்றுக்கு மேற்பட்ட துவாய்களைத் தினமும் பயன்படுத்தினால் அவற்றை துவைப்பதற்கென தனியாக நேரம் செலவிட வேண்டி வரும்.
ஆண்கள் பயன்படுத்தக் கூடிய துவாய்/துண்டு வகைகள்
ஆண்கள் எப்படி ஒரு டவல்(துவாய்/துண்டு) இனை முழு உடலையும் துடைக்கப் பயன்படுத்துவர்?
துவாயின் ஒரு பக்கத்தை வைத்து முதலில் முகத்தைத் துடைப்பர். பின்னர் முதுகைத் துடைப்பர். பின்னர் ஒரு முனையைப் பயன்படுத்தி தலைமுடியைத் துடைப்பர். மறு முனையைப் பயன்படுத்தி கைகள், அக்குள், நெஞ்சுப்பகுதியையும் தொப்புள் வரை உடலையும் துடைப்பர்.
துவாயின் மறு பக்கத்தை வைத்து ஆண்குறி மற்றும் இடுப்புக்குக் கீழ் துடைப்பர். பின்னர் குண்டி, மற்றும் தொடை இடுக்கு மற்றும் சூத்துப் பிளவு, என பின் பகுதியைத் துடைப்பர்.
உடலில் உள்ள ஈரம் காய்ந்ததை உறுதி செய்து கொண்டு ஜட்டியை அணிவர். துடைத்த துவாயை நன்றாக துவைத்து, அலம்பி பிழிந்து காயவிடுவர்.
ஏன் ஒரே துவாயப் பயன்படுத்த ஆண்கள் தயங்கக் கூடாது? நமது உடலை நாமே பாகுபடுத்தி உடல்பாகங்களுக்குள் பிரிவினையை தூண்டலாமா? சவர்க்காரம் போட்ட பின்னர், உங்கள் ஆண்குறியைத் துடைத்த துவாயால் உங்கள் முகத்தை துடைப்பதால் என்ன கேடு வந்து விடப் போகுது?
Soap போட்டால் உடலில் உள்ள 99.9% கிருமிகள் அழிக்கப்பட்டு விடும். குளிக்கும் போது நன்றாக தேய்த்துக் குளிப்பதன் மூலம் உடலில் உள்ள அழுக்கையும் நீக்க முடியும். ஆகவே ஒரே துவாயை உடல் முழுவதையும் துடைக்கப் பயன்படுத்துவதில் தவறில்லை.
ஆனால் உங்களுக்கு பொடுகுத்தொல்லை(Dandruff) இருந்தால், அதே போல முகத்தில் அதிகம் பருக்கள் தோன்றினால், அல்லது உடலில் எங்காவது சருமப்பிரச்சனைகள்/பரவலடையக் கூடிய தோல் நோய்கள் இருந்தால் ஒரே துவாயை உங்கள் உடல் முழுவதையும் துடைக்கப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
உதாரணமாக பொடுகுத் தொல்லை இருக்கும் ஆண், தனது தலையைத் துடைக்கப் பயன்படுத்திய துவாயை முகம் துடைக்கப் பயன்படுத்தினால் முகத்திலும் பொடுகின் கிருமிகளின் தாக்கம் ஏற்படும். சருமம் பாதிப்படையும். பருத்தொல்லை அதிகமாகும்.
நாம் குளித்த பின்னர் உடலைத் துடைக்கப் பயன்படுத்தும் துவாயை சற்று நனைத்து, பிளிந்த பின்னர் அதைப் பயன்படுத்தி ஈரத்தைத் துடைப்பது சருமத்திற்கு நல்லது. உலர்ந்த துவாய்களைப் பயன்படுத்தி உடலில் உள்ள ஈரத்தைத் துடைத்தால் அது உங்கள் மிருதுவான சருமத்தை பாதிக்கும்.
ஆண்கள் இடுப்பில் கட்டி குளிக்கும் துவாய்க்கும், உடலில் உள்ள ஈரத்தைத் துடைக்கும் துவாய்க்கும் வித்தியாசம் உள்ளது.
Comments
Post a Comment