Belt ஆண்களுக்கான ஒரு இன்றியமையாத Accessories ஆகும். இது அவர்களின் அழகை அதிகரிக்க உதவுவதுடன், தேவையான அளவு இறுக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் தோற்றத்தை நேர்த்தியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
Dress/Formal Belt(1.5 Inch width), Casual Belt(1.75 Inch width), Webbing Belt என்பன ஆண்களுகான இடுப்புப்பட்டிகளின் வகைகளாகும்.
Belt இன் அளவு Belt Buckle இல் இருந்து Belt இன் ஓட்டைகளில் நடுவில் இருக்கும் ஓட்டை வரையுள்ள நீளத்தை வைத்தே அளக்கப்படுகிறது. Belt யை நீண்கள் அணிந்து பார்த்து வாங்கலாம். பொதுவாக உங்களுக்கு பொருத்தமான Belt இன் அளவு உங்கள் Pant Size இன் அளவை விட ஒரு அளவு அதிகமாக இருக்கும்.
Belt யை ஆண்கள் எப்படி அணிய வேண்டும்?
1. Formal Dress அணியும் போது, பொதுவாக உங்கள் Shoes இன் நிறத்தை ஒத்த நிறத்தில் Belt யைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.
குறிப்பு: Leather Shoes, Sneakers/Athletic Shoes போல அல்லாது துணியினால் செய்யப்பட்ட Shoes(Woven Elastic Shoes - Skechers) வாங்கும் போது உங்கள் பாதத்தின் அளவை விட ஒரு அளவு குறைவாக வாங்க வேண்டும். அப்போது தான் அதனை இழுத்துப் போடும் போது தொய்வடையாது, உங்கள் பாதத்துடன் ஒட்டியது போல இருக்கும்.
2. Belt Buckle, Pant Zip, Shirt Buttons, Tie போன்றன அணைத்தும் ஒரு நேர் கோட்டில் அமைய வேண்டும்.
ஆனால் சில ஆண்கள் அவர்களின் எண்ணத்திற்கேற்ப தமது தோற்றத்தை வித்தியாசமாகக் காட்ட Belt Buckle இடது பக்க அல்லது வலது பக்க இடுப்புடன் இருக்கும் வகையில் அணிவதுண்டு.
3. Belt இன் வால் Belt Buckle யைத் தாண்டி இடது பக்க இடுப்பில் உள்ள Pant Belt Hole(Belt Loops) இல் முடிய வேண்டும்.
4. நீங்கள் தெரிவு செய்த Belt இன் நீளம் அதிகமாக இருந்தால் கடைக்காரரிடம் கொடுத்து Belt Buckle யைக் கழட்டி உங்களுக்க ஏற்ற அளவில் Belt இன் நீளத்தை வெட்டி வாங்கவும். Belt இன் நீளத்தை வெட்டி குறைக்காமல் புதிய துவாரங்களை Belt இல் ஏற்படுத்தி, அதனை Customize செய்ய வேண்டாம். Belt இல் புதிய துவாரங்களை ஏற்படுத்த முடிந்தாலும், அவ்வாறு ஏற்படுத்தும் போது Belt பழுதடையலாம்.
அவதானம்: Belt இன் நீளத்தை உங்கள் இடுப்பு அளவுக்கு ஏற்றாற் போல
வெட்டி Adjust செய்யும் போது அளவுக்கு அதிகமாக வெட்ட வேண்டாம். Belt இன்
வால் பகுதி உங்கள் இடுப்பை ஒரு முழு சுற்று சுற்றி, இடப்பக்கத்தில் மேலும்
ஒரு கால்பகுதியை(1/4) சுற்றும் அளவுக்கு நீளமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் பார்ப்பதற்கு சிறிய Belt அணிந்தது போல இருக்கும்.
பார்ப்பதற்கும் அழகாக இருக்காது.
தேவை ஏற்படின் Belt இல் மேலதிக
ஓட்டைகளையும் போடலாம். Belt இல் ஓட்டை போடுவதற்கான Machine/Puncture யைப்
பயன்படுத்தியே ஓட்டை போடவும். கிடைத்ததைக் கொண்டு குத்தி ஓட்டை போடப்
போனால் Belt பழுதடைந்து விடும்.
Belt Buckle களில் பொதுவாக(Mainly) இரண்டு வகை உள்ளது. ஒன்று ஓட்டையில் மாட்டுவது, மற்றையை Belt இல் காணப்படும் படிக்கட்டு போன்ற வெட்டில் தங்க வைப்பது(Ratchet Belt).
ஓட்டை போட்ட Belt யையே ஆண்களால் இறுக்கமாக அணிய முடியும். மற்றைய வகை Belt யை இறுக்கமாக அணியும் போது திடீரென கழற அதிக வாய்ப்பு உள்ளது.
Belt ஆனது Rubber, Synthetic Leather(Artificial leather), Leather களில் உருவாக்கப்படுகிறது. Denim Jeans/Sports Pants அணியும் போது அணியக் கூடிய Canvas belts/Webbing Belt fabric இனால் உருவாக்கப்பட்டவை. இதனை Work Belt/Military Belt எனவும் அழைப்பர். Leather Belt யைப் போல் அல்லாது Webbing Belt இன் Belt Tail(வால்) நீளமாக தொங்கிக் கொண்டு இருக்கும் வகையிலும் அணியலாம். அதே நேரம் Webbing Belt இன் வால் பகுதியில் ஒரு உலோகம் அல்லது Leather அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் Webbing Belt இன் பின்னல் தளர்வடைவது தடுக்கப்படுவதோடு, Belt இற்கு மேலதிக அழகும் கொடுக்கப்படுகிறது.
எல்லா Webbing Belt இல் ஓட்டைகள் இருக்காது. சிலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட Webbing Belt Buckle இருக்கும். ஒரு கயிறை எப்படிக் கட்டுவமோ அப்படியே இந்த வகை Webbing Belt யை அணிய வேண்டி இருக்கும்.
Webbing Belt, Leather Belt இரண்டு வகை Belt களும் இணைந்த Hybrid Belt களும் சந்தையில் விற்பனைக்கு உள்ளன.
ஆண்களும் பெண்களும் ஒரே Belt யை அணியலாமா? அணியக் கூடாது என்றில்லை. ஆனால் பெண்களுக்கான Belt அகலம்(Width) குறைவானதாக இருக்கும். ஆண்களுக்கான Belt அகலம் கூடியதாக இருக்கும்.
ஆண்கள் ஜீன்ஸ் அணியும் போது Webbing Belt தான் அணிய வேண்டுமா? இல்லை.
அதே நேரம் Casual Dress அணியும் போதும் Webbing Belt யை அணியலாம்.
Keywords: பெல்டு, பெல்ட், பேன்ட்
Comments
Post a Comment