வேட்டி, லுங்கி மற்றும் சாரம் அணியும் போது ஆண்கள் எப்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதற்குக் காரணம் நம்மை அறியாமலேயே ஏதோ ஒரு கோணத்தில் அணிந்திருக்கும் லுங்கி/சாரம் அல்லது வேட்டி விலகி நமது அந்தரங்கம் வெளித்தெரியலாம்.
சில நேரங்களில் அது மற்றவர் பார்வைக்கு விருந்தாகலாம். ஆனால் அநேகமான நேரங்களில் மற்றவர்கள் முகஞ்சிழித்துக் கொண்டு நகர்ந்து செல்லக் கூடிய நிலையும் உருவாகலாம்.
ஒரு ஆண் அணிந்திருக்கும் வேட்டி, லுங்கி அல்லது சாரம் விலகி அவனது Bulge வெளித்தெரிவதை வைத்து ஒருவரின் Character யை மதிப்பிடலாமா?
இல்லை. இது ஒரு சாதாரண விடையம். அநேகமான நேரங்களில் அவர்களை அறியாமலேயே இது நடக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடுவது நல்லதல்ல.
இது கிட்டத்தட்ட ஜிப்புப்(Zip) போட மறந்து போய், Washroom யை விட்டு வெளியே வருவது போல் ஆகும்.
ஒரு ஆண் அவனது Pant Zip யைப் போட மறந்தால் என்ன செய்வோமோ, அதையே தான் ஒரு ஆண் லுங்கி அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது அது விலகி அவனது ஜட்டி(Underwear or Underwear Bulge) வெளித்தெரிந்தால் செய்ய வேண்டும்.
லுங்கி/சாரம்/கைலி மற்று வேட்டி அணியும் ஆண்களுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது.
ஆண்களின் கால்களுக்கு நடுவே தான் அவர்களின் மானம் தொங்கிக் கொண்டுருப்பதால் சற்று உசாராக இருப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
வர்றவன் பொறவன்லாம் பார்த்துட்டுப் போறதுக்கு அது என்ன கண்காட்சிக் கூடாமா? கண்ணு பட்டுறாது?
இந்த ஆடைகளை அணியும் போது எப்படி உட்கார வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி எதையாவது ஒன்றைக் கடக்க வேண்டும், காற்று வீசும் போது எப்படி வேட்டியைப் பிடிக்க வேண்டும், எந்தளவுக்கு முழங்காலுக்கு மேல் உயர்த்தி மடித்துக் கட்டுவது நல்லது போன்ற விடையங்களை அனுபவரீதியாக கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு அனுபவமே சிறந்த ஆசான்.
ஒரு ஆண் அவனது ஜட்டியினுள் ஆண்குறி, விதைகளினால் உருவான பொட்டலம்(Bulge) வெளித்தெரியும் வகையில் லுங்கி/சாரம்/கைலி மற்று வேட்டி அணியலாமா? அணியலாம்.
ஆனால் மற்றவர்கள் பார்வைக்கு விருந்தளிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
அதே நேரம் ஏதேர்ச்சையாக வெளித்தெரிவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
சில ஆண்கள் உட்காரும் போது அணிந்திருக்கும் லுங்கி, வேட்டியில் அழுக்குப்படாமல் இருக்க Kerchief யை விரித்து விட்டு அதன் மேல் உட்காருவர்.
சிலர் வேட்டியை முழங்கால்களுக்கு மேல் நன்றாக உயர்த்தி, மடித்து தொடைகளுக்கு நடுவே விட்டுக் கொண்டு ஜட்டி தரையில்(இருக்கும் இடத்தில்) படும் வகையில் உட்காருவர். இதன் மூலம் அணிந்திருக்கும் வேட்டி, லுங்கியில் அழுக்கு படியாது. வேட்டியை முழங்கால்களுக்கு மேல் நன்றாக தூக்கி மடித்து தொடைகளுக்கு நடுவே விடும் போது உங்கள் Underwear Bulge உம் மறைக்கப்படும்.
ஜட்டி போடாமல் அந்தரங்கம் வெளித்தெரியும் வகையில் லுங்கி மற்றும் வேட்டியை அவ்வாறு அணிவதே தவறு.
Boxer Briefs அல்லது Boxer Shorts ஜட்டி அணிந்து லுங்கி/சாரம் அல்லது வேட்டி கட்டியிருக்கும் போது லுங்கியை/வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், உங்கள் ஜட்டியின் கால்கள் வெளியே எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.
ஜட்டியின் கால்கள் வெளியே எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்க Briefs அல்லது Trunk ஜட்டி அணியலாம்.
லுங்கி/சாரம், வேட்டி அணிந்து தூங்கும் போது அவசியம் ஆண்கள் உள்ளே ஜட்டி அணிந்திருக்க வேண்டும்.
இதன் மூலம் உங்களை அறியாமல் தூக்கத்தில் உங்கள் லுங்கி/சாரம் கழன்றாலும் உங்கள் மானத்தை ஜட்டி காப்பாற்றும்.
ஜட்டி அணிந்தால், ஆண்கள் பாதி உடை அணிந்ததற்குச் சமம். ஜட்டியுடன் இருக்கும் ஆண்கள் அரை நிர்வாணமாக இருக்கும் ஆண்கள் என்றே கருதுவர்.
ஜட்டி என்பது உங்கள் அந்தரங்க உறுப்புகளை மறைப்பதற்கான ஒரு உள்ளாடை. அது வெளியில் தெரிவதால், தெரிந்தால் எந்தக் குடியும் மூழ்கிடாது!
Comments
Post a Comment