ஆண்கள் ஜீன்ஸ், பேண்ட், ஷார்ட்ஸ், ஜட்டி வாங்கும் போது இடுப்பு அளவை வைத்துத்தான் வாங்குவார்கள். உங்க இடுப்பு சைஸ் என்னனு தெரியுமா? அதை எப்படி அளப்பது?
நீங்கள் அணிந்திருக்கும் சட்டையைத் தூக்கி, வெறும் மேலுடன்(In Your Body) டெய்லர்கள் பயன்படுத்தும் Measuring Tape(Inches இல் அளக்க வேண்டும்) யை (Dress Store Room கடைகளில் அவர்களிடம் கேட்டால் கொடுப்பார்கள், அல்லது அவர்களே இடுப்பை அளக்க உதவுவார்கள்.) எடுத்து, தொப்புளுக்குக் கீழே ஆனால் இடைக்கு மேலே(இடுப்பு எலும்புப் பகுதி), தொப்புளின் நேர் கீழே ஒரு புள்ளியில் (Zero) இருந்து ஆரம்பித்து, உங்கள் இடுப்பை உங்கள் வலது கையின் பெரு விரலை(Thumb Finger) உள்ளே(இல்லாவிட்டால், வாங்கி அணியும் ஜீன்ஸ், பேண்டின் இடுப்புப் பகுதி அதிகம் இறுக்கமாக இருக்கும்) வைத்து அளவு நாடாவை அதன் மேலாக இடுப்பைச் சுற்றி ஆரம்பப் புள்ளிக்கே கொண்டு வர வேண்டும். அதுவே உங்கள் இடுப்பு அளவு(Waist Size) ஆகும்.
என்ன தான் உங்களுக்கு உங்கள் இடுப்பு சைஸ் தெரிந்தாலும், நீங்கள் விரும்பித் தெரிவு செய்த ஜீன்ஸ், பேண்டின் சைஸ் பட்டியலில் உங்கள் இடுப்பு அளவு இரண்டு Size களுக்கு நடுவில் இருக்கும் சந்தர்ப்பமும் உள்ளது.
உதாரணமாக உங்கள் இடுப்பு அளவு 26 ஆக இருந்தால், சில Branded Jeans களில் Size 26 இருக்காது, ஆனால் Size 25, மற்றும் Size 27 இருக்கும். இந்த நிலையில் நீங்கள் Size 25 யைத் தெரிவு செய்யாமல் 27 யையே தெரிவு செய்ய வேண்டும். அதுவே புத்திசாலித்தனம்.
Size 27 யைத் தெரிவு செய்து Belt அணிந்தால் போதும். ஜீன்ஸ், பேண்ட் இடுப்பில் நிற்கும். ஆனால் Size 25 யைத் தெரிவு செய்தால், உங்களுக்குக் கச்சிதமாக பொருந்தும் ஆனால் இடுப்பில் அதிகம் இறுக்கமாக இருக்கும்.
Belt அணிவது தேவையற்ற ஒன்றாக இருக்கும். உங்களால இயல்பாகவே இருக்க முடியாது. சில நேரங்களில் குறைந்த Size இன் கால் நீளம்(Leg Length) குறைவாக இருக்கும்.
சில ஆண்கள் அவர்களின் கால் நீளத்தை(Leg Length) ஈடு செய்வதற்காகவே ஆகப் பெரிய Size Jeans, Pant யைத் தெரிவு செய்து Belt இன் உதவுயுடன் அல்லது அதை டெய்லரிடம் கொடுத்து Alter செய்து அணிவர்.
சில ஆண்களுக்கு அது பற்றிய போதிய அறிவில்லாமல் ஏதோ ஒரு சைஸை எடுத்து அணிந்து பார்த்து வாங்குவதும் உண்டு. ஆனால் வாங்கிய பிறகு தான் அது இடுப்பில் நிற்காது, இடையில் தான் நிற்கும் என்பதை உணர்வார்கள்.
இவ்வாறு நீங்கள் அணியும் Jeans, Pant, Shorts உங்கள் இடுப்பில்(Waistline) இல் நிற்காவிட்டால் முதலாவது எக்காரணம் கொண்டும் ஜட்டி அணியாமல் அந்த ஆடையை அணிய வேண்டாம்.
கையைத் தூக்கும் போது அல்லது குனியும் போது சட்டை விலகி சூத்துப்பிளவு அல்லது சுன்னி முடி வெளித்தெரிவதைக் காட்டிலும் உங்கள் ஜட்டி அல்லது ஜட்டியின் Waistband வெளித்தெரிவது எவ்வளவோ மேல்!
நீங்கள் அணிந்த ஜீன்ஸ்/பேண்ட் Low Rise Jeans or Pant ஆக இல்லாவிட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு டெய்லரின் உதவுயுடன் உங்கள் உடல் அமைப்பிற்கு ஏற்றாற் போல அதனை Alter செய்யவும்.
விரும்பினால் உள்ளே Boxer Shorts போன்ற மெல்லிய காற்சட்டைகளை(Shorts) அணிந்து ஜீன்ஸ், பேண்டை அணியலாம். இதன் மூலம் தற்காலிகமாக இடுப்பு Size யை அதிகரித்து பெரிய Size ஜீன்ஸை எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் அணியலாம்.
சில ஆண்களுக்கு அவர்களின் இடுப்பு அமைப்பின் காரணமாக லுங்கி/சாரம், மற்றும் வேட்டி போன்ற ஆடைகளும் இடுப்பில் நிற்காது. உங்கள் இடுப்பில் வேட்டி, லுங்கி/சாரம் தங்காவிடின் இடுப்பில் அரைஞாண் கயிறு அணிந்து அதனை வேட்டியின் அல்லது லுங்கி/சாரத்தின் கட்டின் மேல் விட்டு, Long Sleeve Shirt இன் கைகளை உருட்டி மடித்து விடுவது போல இடுப்பில் அரைஞாண் கயிறை வைத்து லுங்கியை/வேட்டியை கீழ் நோக்கி மடித்து விடவும். இதன் மூலம் சாரம்/லுங்கி மற்றும் வேட்டி இடுப்பில் நிற்காத பிரச்சனையை சரி செய்யலாம்.
Sagging என்றால் என்ன?
அளவுக்கதிகமாக ஜட்டி வெளித்தெரியும் வகையில் Trousers/Dress Pant or Jeans யை இடுப்புக்குக் கீழ் இறக்கி அணிவதை Sagging என அழைப்பர். இவ்வாறு ஜீன்ஸ்/பேண்டை கீழே இறக்கி அணிபவர்களை Sagger என அழைப்பர். சில நாடுகளில் இதனை "Low-Riding"எனவும் அழைப்பர்.
Comments
Post a Comment